
கத்தர் நாட்டின் அல்ஜஸீரா சேனல், இன்று (15-09-2014) முதல் AJ+ என்ற பெயரில் புத்தம் புதிய டிஜிட்டல் சேனலைத் துவக்கியுள்ளது. அல்ஜஸீரா அமெரிக்கா (america.aljazeera.com) சேனலைத் துவக்கி சரியாக ஒரே வருடத்தில், அடுத்த தலைமுறை தொழில் நுட்பம் என்ற அடிநாதத்துடன் இந்த அதிரடி சேனலை துவக்கியுள்ளது.
மொபைல் ஃபோன்களை பயன்படுத்தும் பயனர்களை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதும் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரைக் கவர்ந்திழுக்கும் நிகழ்ச்சி வடிவமைப்புகளும் இதன் சிறப்பு அம்சங்களாம். ஏற்கனவே இயங்கி வரும் அல்ஜஸீரா தொலைக்காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை இந்த புதிய சேனல் தரும் என்கிறார்கள் இதன் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.
கடந்த ஜுன் மாதமே இந்த சேனலுக்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக இன்று முதல் சான் பிரான்ஸிஸ்கோ நகரத்திலிருந்து ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கும் AJ+ சேனல் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது.
மனித உரிமை, உலக வெப்பமயமாதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக இளம் தலைமுறையினரைச் சுண்டியிழுக்கும் விதமாக சூடான விவாதங்கள், சுவையான கலந்துரையாடல்கள், போட்டிகள் போன்ற சிறப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று AJ+ சேனலின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அல்ஜஸீராவில் பிற சேனல்கள் போன்றே இதிலும் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறாது. பல்வேறு விதமான தடைகளை எதிர்த்து சர்வதேச அளவில் வெற்றி பெற்று வரும் அல்ஜஸீரா, மீடியா ஜாம்பவான்களான CNN மற்றும் Fox News போன்ற சேனல்களை ஏற்கனவே அமெரிக்காவினுள்ளேயே மிரள வைத்திருக்கும் சூழலில், புதிய AJ+ சேனல் பெரும் எதிர்பார்ப்பை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
AJ+ சேனலின் மொபைல் அப்ளிகேஷன்களை (Mobile App) கீழ்க்கண்ட சுட்டிகள் மூலம் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
https://itunes.apple.com/us/app/aj+/id913498622
http://ajplus.net/google-play-beta/
AJ+ சேனலின் இணைய தளமும், தொடர்புடைய சமூகத் தளங்களும்:
https://www.youtube.com/ajplus
https://www.facebook.com/ajpluscommunity
http://en.wikipedia.org/wiki/AJ%2B
தகவல்: அபூ ஸாலிஹா