இராக்கிய சிறுமியைக் கற்பழித்து கொடூரமாகக் கொன்ற US படைவீரருக்கு 100 ஆண்டுகள் சிறை

{mosimage}கூட்டமாகச் சென்று அப்பாவி இராக்கிய சிறுமி ஒருவரைக் கொடூரமாக மானபங்கம் செய்து அவரது குடும்பத்தையே கொன்ற US படைவீரருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 100 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்கொடுமையைப் புரிந்த US சார்ஜெண்ட் பால் கோர்ட்டெஸ், இந்தக் குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் நீதிமன்றத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததையும் இக்குற்றத்தைப் புரிவதற்காகத் தனது இராணுவப் பதவியைப் பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டியதையும், 14 வயதே நிரம்பிய இராக்கிய சிறுமி அபீர் காஸிம் அல்ஜனபி எனும் சிறுமியையும் அவரது குடும்பத்தாரையும் கொடூரமாகக் கொன்றதையும் ஒப்புக் கொண்டார். இவர் இவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளதால் மரணதண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.

மேலும், இந்த 100 ஆண்டு தண்டனையோடு அவர் ராணுவத்திலிருந்து மதிப்பற்ற முறையில் (Dishonourable) விலக்கப்பட்டுள்ளார். இக்குற்றத்தில் பங்கு பெற்ற பார்க்கர், ஸ்பீல்மன், கிரீன் ஆகிய மற்ற மூன்று அமெரிக்கப் படைவீரர்களின் மீதும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோர்ட்டஸ் அபீர் வீட்டருகே அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கும் போது அவரது வீட்டில் ஒரே ஒரு ஆண் இருப்பதைப் பார்த்தே இந்த சதியை அரங்கேற்றத் தாங்கள் திட்டமிட்டதாக இந்த விசாரணையில் இவர் தெரிவித்துள்ளார்.

இதை வாசித்தீர்களா? :   முழுப்படையை அனுப்பினாலும் ஈராக்கில் US தப்பிக்க முடியாது – ஸவாகிரி பேச்சு.