சிதம்பரத்தில் பா.ஜ.க பொதுச்செயலாளர் கொலை! மூன்று இந்துக்கள் கைது!

Share this:

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Nov/37856e95-33a6-47a0-8250-708c3b1a5de0_S_secvpf.gif

“குறிப்பிட்ட மதத்தினரால் பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து குறி வைத்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள்!” என்று அரற்றி வரும் தமிழ்நாடு ஆதிக்க சக்திகளின் ஓலம், தொடர்ந்து பொய்யாகிக் கொண்டே வருகிறது.

கள்ளக்காதல், கந்து வட்டி, தொழில் போட்டி, முன் விரோதம், குடும்பத் தகராறு ஆகிய காரணங்களால் கொல்லப்படும் இவர்களை வைத்து மத வெறி வியாபாரம் செய்ய முனையும் ஹிந்துத்துவா அரசியலை, தமிழ்நாட்டிலுள்ள இந்துக்கள் அடையாளம் கொண்டு வெறுத்து ஒதுக்குவதும் தொடர்கிறது.

 

கொல்லப்பட்ட தருணத்தில், மதவெறியை கிளப்பிய சிதம்பரம் படுகொலை தொடர்பாக சமீபத்தில் வெளியான சில உண்மை நிலவரங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

 


தொடர்புடைய முந்தைய செய்திகள்:

போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே கத்தியால் குத்தி நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர்

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

பா.ஜ.க வேட்பாளர் கடத்தப்பட்டதாக பொய் தகவல்!

பா.ஜனதா நிர்வாகி மர்மச்சாவு: கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

பா.ஜ.க., பிரமுகர் கொலையில், மூன்று இந்துக்கள் கைது (தினமலர்)

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது


 

சிதம்பரம் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 மாதங்கள் கழித்து துப்புதுலங்கியது: மூவர் கைது!

சிதம்பரத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாதங்கள் கழித்து குற்றவாளி யார் என தெரியவந்து நகர போலீஸார் மூவரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

சிதம்பரம் அனந்தீஸ்வரன்கோயில் அக்ரகாரம் மின்வாரியம் இறக்கத்தில் நாகச்சேரி குளம் பகுதியில் வசித்து வந்த பாஜக நகர பொதுச்செயலாளரான ஜி.வெங்கடேசன் (52) கடந்த நவ.22-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயக்குமார், சரவணன் என்ற மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். ஜி.வெங்கடேசன் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி கொண்டு சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக பிரமுகர் வெங்கடேசன் கொலை குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர். அவர் குடியிருந்த வீட்டின் மாடியில் தங்கியிருந்து உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் கொலைசெய்திருக்கலாம் என நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் கடந்த வாரம் உத்திரபிரதேசம் சென்று விசாரணை செய்து துப்பு கிடைக்காமல் திரும்பி வந்தார்.

இந்நிலையில் பாஜக பிரமுகர் வெங்கடேசன் இறுதியாக செல்போனில் பேசிய நம்பர் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சில தினங்கள் முன்பு போலீஸார் அந்த நம்பர் மீண்டும் செயல்பட தொடங்கியதால் யாருடையது என்பதை சைபர் கிரைம் மூலம் கண்டுபிடித்தனர். வெங்கடேசனிடம் கடைசியாக செல்போனில் பேசியது சிதம்பரம் அருந்ததியர்தெருவைச் சேர்ந்த சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் விக்னேஷ் (20) என்பது தெரியவந்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணையில் விக்னேஷின் தாயார் லட்சுமிக்கும் (36), பாஜக பிரமுகர் வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தததாக தெரியவருகிறது. கள்ளத்தொடர்பு விபரம் அறிந்த மகன் விக்னேஷ், தனது நணபர்களான அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சர்மா (20), செங்கோட்டை (20) ஆகியஇருவருடன் சேர்ந்து சம்பவத்தன்று வெங்கடேசன் வீட்டிற்கு சென்று கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து நகர போலீஸார் விக்னேஷ் (20), சர்மா (20), செங்கோட்டை (20) ஆகிய மூன்று பேரை கைது சிதம்பரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

தினமணி (31-01-2015)


சிதம்பரம் பா.ஜ., நிர்வாகி கொலை; அழுகிய நிலையில் உடல் கிடந்தது

சிதம்பரம் : சிதம்பரம் பா.ஜ., நகர பொதுச்செயலர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் அழுகிய நிலையில் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52), சிதம்பரம் நகர பா.ஜ., பொதுச் செயலர். கடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் சிதம்பரம் 17வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.புதுச்சேரியில் வசித்து வந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மற்றும் தனது இரு மகன்களை பிரிந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் வந்து தங்கினார். அனந்தீஸ்வரன் கோவில் அக்ரஹாரம் மின்வாரியம் இறக்கத்தில் வசித்து வந்தவர், சவுண்ட் சர்வீஸ் கடை வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அவரது நண்பர்களான ரமேஷ், மணி இருவரும் வெங்கடேசன் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள், வெங்கடேசன் வீட்டிற்கு சென்றனர். அங்கு, ஹாலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், கடலுார் எஸ்.பி., ராதிகா சம்பவ இடத்திற்கு சென்று விசாணை நடத்தினார்.

மேலும், டவுன் இன்ஸ்பெக்டர் லாமேக், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், வெங்கடேசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப் பதிந்து, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– தினமலர் (23-11-2014)


சிதம்பரத்தில் பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் கொலை: போலீசார் தீவிர விசாரணை

சிதம்பரம், நவ.23–  புதுவை நெல்லித்தோப்பை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்த ராணி என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான முதல் சிதம்பரம் நாகசேரிக்குளம் மின் வாரிய அலுவலகம் அருகே மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு விஜயகுமார், சரவணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சிதம்பரம் நகர பாரதீய ஜனதா பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த வெங்கடேசன் முன்பு சிதம்பரம் 1–வது வார்டில் உள்ள தண்ணீர் ராமர்பிள்ளை தெருவில் ரேடியோ சவுண்டு சர்வீஸ் கடை நடத்தி வந்தார். அங்கு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக பிரச்சினை எழுந்ததால் வெங்கடேசன் கடந்த 3 வருடத்துக்கு முன்பு தான் குடியிருக்கும் கீழ்தளத்திலேயே ரேடியோ சவுண்டு சர்வீஸ் கடையை மாற்றினார்.

இதற்கிடையே வெங்கடேசனுக்கும், அவரது மனைவி ராணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராணி வெங்கடேசனை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் புதுவையில் வசித்து வந்தார். இதனால் வெங்கடேசன் இரவில் மட்டும் தான் குடியிருந்த வீட்டில் தங்குவார். மீதி நேரங்களில் கடையிலேயே இருந்து வருவது வழக்கம். மற்ற நேரங்களில் வீடு பூட்டியே கிடக்கும்.

இந்த நிலையில் நேற்று மதியம் வெங்கடேசன் வீடு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெங்கடேசன் கழுத்து, முகம் ஆகியவற்றில் வெட்டு காயம் இருந்தது. யாரோ அவரை வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெங்கடேசனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது மனைவியே கூலிப்படையை ஏவி வெங்கடேசனை கொன்றாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் சிதம்பரம் நகராட்சி 17–வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஆவார். மேலும் இவர் புதுவையில் வசித்தபோது நெல்லித்தோப்பு தொகுதியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமனை எதிர்த்தும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– மாலைமலர் (23-11-2014)


சிதம்பரம் பா.ஜனதா பிரமுகர் கொலை: கள்ளக்காதலி மகன் உள்பட 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

சிதம்பரம் பா.ஜனதா பிரமுகர் கொலையில் கள்ளக்காதலியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கள்ளக்காதலியின் மகன் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

பா.ஜனதா பிரமுகர் கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் வெங்கடேசன் (வயது 52). இவர் கடந்த நவம்பர் 22–ந் தேதி கொலை செய்யப்பட்டு அவருடைய வீட்டில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லாமேக், முருகானந்தம், மீனா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். கடந்த 2 மாதமாக இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

கள்ளக்காதல்

இந்தநிலையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது வெங்கடேசனுக்கு, அருந்ததி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் மனைவி லட்சுமி (36) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமியை பலமுறை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். எனினும் போலீசார் அவருடைய நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தனர்.

3 பேர் கைது

மேலும் லட்சுமியின் மகன் விக்கி என்ற விக்னேஷ் (20) மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், கொலை நடந்த நாளில் விக்னேஷ் சென்னையில் இருந்துள்ளார். எனினும் சந்தேக ரீதியில் அவரை பிடித்து துருவி, துருவி விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

தாய் லட்சுமியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் வெங்கடேசனை நண்பர்கள் உதவியுடன் தீர்த்து கட்டியதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் விக்னேஷின் நண்பர்களான அருந்ததி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் சர்மா (20), லட்சுமணன் மகன் செங்கோட்டை (20) ஆகியோரை பிடிக்க முயன்றனர். இதை அறிந்த அவர்கள் இருவரும் சிதம்பரம் வருவாய் ஆய்வாளர் சிவகார்த்திகேயனிடம் நேற்று காலை சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் ஒப்படைத்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

இந்த கொலை சம்பவம் குறித்து விக்னேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது:–

எனது தாயுடன் வெங்கடேசனுக்கு பழக்கம் இருந்தது. இதை பலமுறை கண்டித்தோம். இருந்தும் அவர் கேட்கவில்லை. இதனால் எங்கள் குடும்பத்தை அக்கம் பக்கத்தினர் தவறாக பேசினர். எனவே வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக எனது நண்பர்கள் சர்மா, செங்கோட்டையின் உதவியை நாடினேன்.

மேலும் வெங்கடேசனை கொலை செய்வது எப்படி? என்று நண்பர்களுடன் திட்டமிட்டேன். கொலை செய்யும் போது எந்தவொரு தடயமும் கிடைத்து விடாதபடி திட்டம் தீட்டினேன். அதனால் நான் கொலை நடக்கும் போது சிதம்பரத்தில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.

திட்டம்

சம்பவத்தன்று (20.11.2014) இரவு நான் சென்னையில் இருந்து கொண்டே வெங்கடேசன் வீட்டுக்கு சர்மா, செங்கோட்டை இருவரையும் செல்போன் மூலம் பேசி அனுப்பினேன். அவர்கள் இருவரும் அங்கு சென்று, வெங்கடேசனை எனது தாயுடன் பழகுவதை கண்டித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரும் சேர்ந்து வெங்கடேசனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டோம். இருப்பினும் போலீசாரின் தீவிர விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு விக்னேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட விக்னேஷ், சர்மா, செங்கோட்டை 3 பேரையும் போலீசார் சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவர்களை 13 நாள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ், சென்னையில் உள்ள ஒரு தனியார் டயர் கம்பெனியிலும், செங்கோட்டை சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் மெக்கானிக் வேலையும் செய்து வந்தனர். சர்மா, ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– தினத்தந்தி (01-02-2015)


பாஜக பிரமுகர் கொலை வழக்கு: மூவர் கைது!

சிதம்பரம்: சிதம்பரத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

சிதம்பரம் நகர பாஜக பொதுச்செயலாளர் வெங்கடேசன். இவர் கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி சில மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிதம்பர மாவட்ட காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் ஸ்வாதி நகரை சேர்ந்த செங்கோட்டை, விக்னேஷ் மற்றும் சர்மா ஆகிய 3 நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வெங்கடேசனுடனான தனிபட்ட பகையை தீர்க்கவே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

– இந்நேரம்.காம் (31-01-2015)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.