
கடந்த ஞாயிறு 23.10.2022 அதிகாலை, கோவையின் கோட்டைமேடு சாலையில் சென்ற காரிலிருந்த LPG சிலிண்டர் வெடித்து, காரை ஓட்டிச் சென்ற ஜமீஷா முபீன் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். முபீனின் மனைவி ஓர் ஊமை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏழ்மையான குடும்பம். மேற்காணும் துன்பியல் நிகழ்வை, “கார் குண்டு வெடிப்பு”, “தீவிரவாதிகள் சதி” என்றெல்லாம் மடை மாற்றி, காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் தெரியாத பல மர்மங்கள் தனக்குத் தெரியும் என்பதாக பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளந்துகொண்டிருக்கின்றார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை நலத் துணைத் தலைவர், வழக்குரைஞர் அலீம் அல் புகாரீயின் ஆணித்தரமான வாதங்கள் :