
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி
ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவரான முன்னாள் நீதிபதி கோபாலகிருஷ்ணன் சீர்காழியைச் சேர்ந்தவர். தொடக்க-உயர்நிலைக் கல்வியைத் தம் சொந்த ஊரான சீர்காழியிலும் சட்டக் கல்வியை, சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பயின்று நெடுங்காலம் நீதிபதியாகப் பதவி வகித்தவர். சாதீயக் கொடுமையைத் தம் இளம் வயதிலேயே எதிர்த்தவர். நீதிபதியான பின்னர், நீதித் துறைக்குள்ளும் சாதீயம் புகுந்து ஆட்டம் போடுவதைக் கண்டு அதிர்ந்து, அதற்கெதிராகக் குரல் கொடுத்தவர். அதனால் கட்டாய ஓய்வில் பதவி இறங்கியவர்.
அன்னார் சாதீயக் கொடுமைக்கு நிரந்தரத் தீர்வாக, இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துத் தம் குடும்பத்தாரோடு சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தில் இணைந்து ‘குலாம் முஹம்மது’ ஆனார்.
அவர் எழுதிய “ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்” எனும் சிந்தைக்கு விருந்தளிக்கும் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி நாளை 1.1.2012 அன்று சரியாகக் காலை 10 மணிக்கு, சென்னை மண்ணடியிலுள்ள ஆயிஷா மஹாலில் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. கே சுப்ரவேலு நூலை வெளியிட, சகோ. திருப்பனந்தாள் T.M. உமர் நூலறிமுகம் செய்து உரையாற்றவிருக்கின்றார். கவிக்கோ அப்துர் ரஹமான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் J.M. ஹாரூன், M. அப்துர் ரஹ்மான் ஆகியோரும் Dr. ஆயிஷா, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த், அம்பேத்கார் புரட்சி முன்னணிச் சேர்ந்த M. துரை ராஜ் M.A., MBA, அதன் மாவட்டச் செயலாளர் ஆலந்தூர் எழில் அரசு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்டும் வேர்கள் பதிப்பகத்தாரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
பகலுணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக K.M. இல்யாஸ் ரியாஜியும் பிரபல முஸ்லிம் இதழியலாளர் M. குலாம் முஹம்மதும் செயல்படுகின்றனர்.
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
– தகவல் : சகோ. பஷீர்