இயற்கை மார்க்கத்திற்கு மீண்ட சகோதரிகள்!

Share this:

{mosimage}தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம், ஒரு குட்டிமீனாட்சிபுரமாகபரிணமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மூன்று அக்காள், தங்கைகள் உள்பட நான்கு பெண்கள் திடீரென இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதால், ஏக பரபரப்பு!

 

பெண்களின் பெற்றோர்கள் போலீஸில் புகார் கூற, கட்டாய மதமாற்றம் என்று கூறி, இந்து அமைப்புகள் கண்டன போஸ்டர் ஒட்டி, கடையடைப்பு நடத்த, அய்யம்பேட்டை பகுதியே அலறிப்போய் உள்ளது.

இதற்கிடையே, தற்போது சென்னை வந்துள்ள அந்த நான்கு பெண்களும் இந்து அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, கடந்த 13_ம்தேதி சென்ன மாநகரக் காவல் ஆணயரிடம் மனு கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

 

என்னதான் நடந்தது என்றறிய நாம் குச்சிப் பாளையம் விரைந்தோம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரின் மகள்களான லோகேஷ்வரி, அம்பிகா, ஷர்மிளா ஆகியோரும், அருகே உள்ள மாகாளிபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள் கலைச்செல்வியும் தான் மதம் மாறிய அந்த நான்கு பெண்கள்.

 

அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியில் உள்ள டாக்டர் ரஜாக் ஜானி என்பவரின் ரஜியா மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர்கள், கடந்த 6ம்தேதியன்று திடீரென காணாமல் போனார்கள்.

 

அவர்கள் நான்கு பேரும் இஸ்லாமியப் பெண்களாக மாறி, சென்னக்கு வந்து, ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் அடக்கலம் புகுந்தது, அதன்பிறகுதான் தெரிய வந்தது.

 

இதுபற்றி அவர்களின் பெற்றோர், டாக்டர் ரஜாக் ஜானியிடம் விசாரிக்கப் போனபோது, அவர் கைவிரித்து விட, அதன்பின்பே போலீஸில் புகார், போஸ்டர் கண்டனம், கடையடைப்பு எல்லாம்.

 

லோகேஷ்வரி சகோதரிகளின் தாய் சித்ராவிடம் நாம் பேசினோம்.

 

"என் கணவர் இறந்து பத்து வருஷமாச்சு. எனக்கு நான்கு பெண்கள். லோகேஷ்வரிதான் மூத்தவள். ப்ளஸ் டூ முடித்ததும், அவள் ரஜியா மருத்துவமனைக்கு நர்சிங் அசிஸ்டென்ட் வேலைக்குப் போனாள். அதன் பின்பு அம்பிகாவையும், லேப் டெக்னீஷியன் முடித்த அவளது தங்கை ஷர்மிளாவயும் அங்கேயே வேலையில் சேர வைத்தாள்.

 

ஒரு வருடமாகவே அவளை போக்கில் மாற்றம் இருந்தது. பொட்டு வைப்பதை நிறுத்தி விட்டாள். நாங்கள் கண்டித்து வந்தோம்.

 

6ம்தேதி வேலைக்குப் போன அவர்கள் மூன்று பேரும் திரும்பவே இல்லை. அதன்பிறகு, முஸ்லிமாக மாறிவிட்டதாக சென்னையில் இருந்து என் மகள்கள் எனக்கு போன் செய்தார்கள். எங்களுக்கு டாக்டர் மேல்தான் சந்தேகம். அதனால் அய்யம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தோம்" என்று தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.

 

அருகில் இருந்த சித்ராவின் தம்பியும், பி.ஜே.பி.யின் மாவட்ட விவசாய அணிச் செயலருமான வாசுதேவன் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

 

"சென்னையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தின் முகவரியை எங்கள் பெண்கள் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொண்டு நேரில் போனோம். அங்கே பர்தா அணிந்திருந்த எங்கள் பெண்கள், ‘நாங்க முஸ்லிமா மாறிவிட்டோம். யாரும் எங்களை வற்புறுத்த வில்லைஎன்று சொன்னார்கள்.

 

அதைக் கேட்டு வேதனையுடன் ஊர் திரும்பிய நாங்கள், மீண்டும் டாக்டர் மேல் போலீஸில் புகார் கொடுத்தோம். டாக்டரிடம் விசாரித்த போலீஸார், அவருக்கு இதில் தொடர்பு இல்லைன்னு சொல்லி விட்டார்கள்.

 

போலீஸ் சென்னைக்குப் போய் எங்கள் பெண்களைக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள்வரமுடியாதுஎன்று சொல்லி விட்டார்களாம்" என்று முடித்துக் கொண்டார்.

 

மதம் மாறிய பெண்களில் ஒருவரான இருபது வயது கலைச்செல்வியின் தந்தை முருகானந்தத்திடம் பேசினோம். "என் மகள் கலைச்செல்விக்கு நான் என்றால் உயிர். அந்த டாக்டர்தான் என் மகளை வசியம் செய்து மதம் மாற வச்சிட்டார்" என்று புலம்பினார் அவர்.

 

பி.ஜே.பி. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோகரனிடமும் பேசினோம். "அந்த நான்கு பேருக்கும் எதையும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கிற வயது இல்லை. ஆனால் ஊரை விட்டுப் போகும்போது விவரமாக தங்களுடைய டி.சி., மார்க் ஷீட்களை எடுத்துட்டுப் போயிருக்கிறார்கள். யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இப்படி விவரமாக அவர்களால் செயல்பட்டிருக்க முடியாது. இந்த விஷயத்தில் தொடர்பே இல்லை என்று டாக்டர் சொல்வதையும் நம்ப முடியவில்லை" என்று முடித்துக் கொண்டார்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி டாக்டர் ரஜாக் ஜானி என்ன சொல்கிறார்? அவரையே சந்தித்துக் கேட்டோம். "என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நான் ரஜியா மருத்துவமனையில் இருக்கும் நேரம் மிகக்குறைவு. அந்தப் பெண்கள் போனதைக் கேள்விப்பட்டு பதறிப் போயிட்டேன். அவர்கள் மதம் மாறிய விவகாரத்தில் எனக்குத் தொடர்பு இல்லை என்று அந்தப் பெண்களே கூறிவிட்டதால், போலீஸ் என்னை விட்டுவிட்டார்கள். லோகேஷ்வரிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். அது பிடிக்காமல்தான் அவர் இப்படிச் செய்துவிட்டார்.

 

மற்றபடி கட்டாய மதமாற்றம் பண்ணுகிறவர்கள் உண்மையான முஸ்லிம்களே அல்ல" என்றார் ரஜாக் ஜானி.

 

சென்னை, மண்ணடியில் உள்ளதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தில், இஸ்லாம் மார்க்கம் தொடர்பான பயிற்சியில் இருந்த அந்த நான்கு பெண்களயும் சந்தித்தோம். லோகேஷ்வரி, அம்பிகா, ஷர்மிளா, கலைச்செல்வி என்ற அந்த நான்கு பேரும் சுமைய்யா, ஆஃப்ரீதா, ஷாமிலா, ஷாகிரா என்று பெயர் மாறியிருந்தனர்.

 

லோகேஷ்வரி நம்மிடம் பேசினார். "கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு டாக்டர் ரஜாக் ஜானியின் ரஜியா மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் எனக்கு இஸ்லாம் மதம் பிடிக்காமல்தான் இருந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் மருத்துவமனையில் இருந்த குர்ஆனை எடுத்துப் படித்தேன். அதில், சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தது. அதன்பிறகு, தினமும் இரவுவின்டி.வி.யில் ஒளிபரப்பாகும்இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்என்ற நிகழ்ச்சியைப் பார்ப்பேன். இஸ்லாம் தொடர்பான சி.டி.களை வாங்கி போட்டுப் பார்த்தேன்.

 

இஸ்லாம் மார்க்கம் பற்றி என் தங்கைகளிடமும் கூறினேன். அவர்களுக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் மீது ஆர்வம் வரத்தொடங்கியது.

 

என் தாய்மாமன் தமிழ்ச்செல்வன் இதற்காக என்னையும் என் தங்கை அம்பிகாவையும் அடித்து உதைத்தார். ஆனாலும், நாங்கள் எங்கள் முடிவில் உறுதியாக இருந்தோம்.

 

தற்கிடையில், எனக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. உடனே வீட்டில் இருந்து வெளியேறி, நான்கு பேரும் இங்கு (தவ்ஹீத் ஜமாஅத்) வந்து மதம் மாற முடிவெடுத்தோம். அதன்படியே சொல்லாமல் வந்து விட்டோம்.

 

எங்களைத் தேடிவந்த எங்கள் பெற்றோர், நாங்கள் பாதுகாப்புடன்தான் இருக்கிறோம் என்ற திருப்தியுடன் ஊர் திரும்பிவிட்டனர்.

 

இங்கு மூன்று மாதப் பயிற்சி முடிந்ததும், ஊருக்குத் திரும்பி விடுவோம். குடும்பத்தினர் எங்களை ஏற்க மறுத்தால், வேலைக்குப் போய் எங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். அல்லா எங்களுக்குத் துணயிருக்கிறார்" என்றார்.

 

உடனிருந்த மற்ற மூவரும், "இஸ்லாம் மார்க்கத்தில் உருவ வழிபாடு இல்லை. பெண்கள் தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவே இஸ்லாம் மார்க்கத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால்தான் பெண்களுக்கு பர்தா ஆடையே சிறந்தது என்கிறது இஸ்லாம்" என்றவர்கள், "இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும், தர்ஹா வழிபாட்டுக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம். எங்களுடைய புதிய பெயர்களால் இனி யாரும் எங்களிடம் என்ன ஜாதி என்று கேட்க மாட்டார்கள்" என்றனர் கோரஸாக.

 

அங்கிருந்ததவ்ஹீத் ஜமாஅத்பொதுச்செயலர் செய்யது இக்பாலிடம் பேசினோம்.

 

"இந்தப் பெண்கள் இங்கே மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதைப் பார்த்து அவர்களது பெற்றோர்கள் சந்தோஷமாகவே ஊர் திரும்பினர்.

 

பி.ஜே.பி.யைச் சேர்ந்த சிலர்தான் அய்யம்பேட்டையில் கண்டன போஸ்டர் ஒட்டி, கடையடைப்பு நடத்தி தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

அதே வேளையில் விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சிகளின் சார்பில் இந்தப் பெண்களுக்கு ஆதரவாகவும் அய்யம்பேட்டையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

 

இந்து அமைப்புகளச் சேர்ந்த சிலர் கும்பலாக வந்து இந்தப் பெண்களை மிரட்டினர். அவர்களால் எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் காவல் ணையரிடம் பாதுகாப்புக் கோரி மனு கொடுத்தோம்" என்று முடித்துக் கொண்டார்.

 

தகவல்: முஹம்மது அலி ஜின்னா

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22.11.2007


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.