ஆடைகளை வைத்து வன்முறையாளர்களை இனம் காணலாம்!

Share this:

ந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும்,  ஜனநாயகத்தையும் வேரோடு வெட்டிச் சாய்க்கும் CAA க்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க வலுத்து வரும் நிலையில், “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை அவர்களின் ஆடைகளை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்!” என்று திரு. நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றி இருந்தார்.

என்ன நம்பிக்கையில் அவ்வாறு அழுத்தம் திருத்தமாக பேசினார் என்பது அடுத்த நாளே மக்களுக்குப் புரிந்து விட்டது.

முர்ஷிதாபாத் நகரக் காவல்துறையினர் அப்பகுதியில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி மற்றும் லுங்கியுடன் ரயில் மீது தாக்கி வன்முறையில் ஈடுபட்ட ஆறு பேரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் பாஜகவினர் என்பதும், முஸ்லிம்கள் போல் வேடமிட்டு வன்முறையில் ஈடுபட்டதும் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

வன்முறையில் ஈடுபட்டவர்களை தலைமை தாங்கிய பாஜக பொறுப்பாளரான அபிஷேக், பாஜகவின் பல ஆர்ப்பாட்டங்களை முன்நின்று நடத்தக் கூடியவர் என்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.

முஸ்லிம்கள் மீது பழி சுமத்திய இந்த பாஜகவினர் தற்போது பெஹ்ரம்பூர் காவல்நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதியான நாதுராம் கோட்சே, தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் படுகொலை செய்துவிட்டு, முஸ்லிம் செய்ததாக நாடு முழுக்க திட்டமிட்டு அவதூறு பரப்பப் பட்டு வன்முறைக்கு வித்திடப் பட்டது. அன்று தொடங்கி இன்றுவரை, வன்முறைகளும் பயங்கரவாதங்களும் பழி ஒருபக்கம், பாவம் ஒருபக்கமாகவே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

CAA Protest

ஆங்கில ஊடகங்களின் பதிவான செய்திகளில் சில:

Murshidabad Police Detain Stone Gang Proves to be BJP Worker

https://m.dailyhunt.in/news/india/english/hwnews+in-epaper-hwnws/murshidabad+police+detain+stone+gang+proves+to+be+bjp+worker-newsid-154431922


BJP worker and five associates, in lungi and skullcap, caught them throwing stones at a train engine – Murshidabad police : https://www.telegraphindia.com/states/west-bengal/stone-gang-in-fake-skullcap-held-by-murshidabad-police/cid/1728657


BJP Worker, Supporters ‘in Skullcaps’ Held for Pelting Stones on Train, Says Report


West Bengal: Suspected BJP worker and aides arrested for wearing skullcaps, pelting stones at train


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.