
ஜெய்ப்பூர்-மும்பை ஸூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் (12956) ரயில், கடந்த 31.7.2023 திங்கட்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு வாபி-பல்கார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையில் சென்றுகொண்டிருந்தது. பயணி அப்துல் காதர் முஹம்மது ஹுஸைன்(64) என்பவரோடு ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றும் சேத்தன் சிங் எனும் அரக்கன் வலுச்சண்டை வளர்க்கிறான். சற்று நேரத்தில் அவனைத் தட்டிக் கேட்ட தன் உயரதிகாரியான ASI திக்காரம் மீனா(57) என்பவரைத் தன் துப்பாக்கியால் முதலில் சுட்டுத் தள்ளிவிட்டு, அடுத்ததாக அப்துல் காதர் முஹம்மது ஹுஸைனையும் சுட்டுக் கொல்கின்றான்.
அடுத்து, ப்பேண்ட்ரியில் காணப்பட்ட முஸ்லிம் ஸர்தார் முஹம்மது ஹுஸைன் என்பவரையும் அடுத்த கோச்சில் இருந்த அஸ்கர் அப்பாஸ் அலீ(48) என்னும் முஸ்லிமையும் சுட்டுக் கொல்கின்றான்.
இந்த நான்கு படுகொலைகளைச் செய்த கொலைகாரனை, காவல்துறை வழக்கம்போல் ‘மனநலம் பாதிக்கப்பட்டவன்’ என்று பூசி மெழுகுகின்றது.
இனி, முஸ்லிம்கள் ரயிலில் பயணம் செய்வது என்பது சாத்தியமா?
நன்றி : Opinion Tamil