மீண்டும் மீண்டும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்படும் தேசியக் கொடி!

Share this:

ஸ்ரீநகர், ஆக.15-  இந்தியாவின் 68-வது சுதந்திர விழா இன்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல் மந்திரிகள் தங்களது தலைமைச் செயலகங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினர்.

இதே போல், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், நீதி மன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் இன்று தேசியக் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

அவ்வகையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை நிலையத்திலும் இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்துக்கு பின்னர், காவி வண்ணம் மேல் பகுதியில் இருப்பதற்கு பதிலாக, பச்சை நிறம் மேல்புறத்தில் பறந்தது அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக, அவசர அவசரமாக கொடி இறக்கப்பட்டு, காவி நிறம் மேற்புறத்தில் வரும் வகையில் மீண்டும் ஏற்றப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் காலித் ஜெஹாங்கிர், ‘இப்படி ஒரு தவறு ஏற்பட்டிருக்கக் கூடாது. இது எப்படி நேர்ந்தது? என்பது தொடர்பாக விசாரிக்கப்படும்’ என்று கூறினார்.

நன்றி: மாலைமலர் (ஆகஸ்ட் 15, 2014)


ஸ்ரீநகரில் தேசியக் கொடியேற்ற துடித்த பாஜக ஒரிசாவில் தலைகீழாக ஏற்றியது!

புவனேஸ்வர்: ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று துடித்த, போராட்டத்தில் குதித்த, பரபரப்பை ஏற்படுத்திய பாஜக, ஒரிசாவில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி தலை கவிழ்ந்துள்ளது.

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று பாஜகர சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடியை ஏற்றினர். ஆனால் கொடி தலைகீழாக இருந்தது.

இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், கட்சியினரும், முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹரிச்சந்திரனிடம் இதைத் தெரிவித்தனர். இதையடுத்து கொடியை அவசரமாக இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினர்.

இதுகுறித்து ஹரிச்சந்திரன் கூறுகையில், இந்த தவறுக்காக மிகவும் வருந்துகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வேண்டும் என்றே இது நடக்கவில்லை. தவறுதலாக நடந்து விட்டது என்றார்.

இதேபோல ஆளும் பிஜு ஜனதாதள அலுவலகத்திலும், தேசியக் கொடி சரியாக ஏற்றப்படாமல், கொடி கீழே விழுந்தது. முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது கொடி சரியாக விரியாமல்அப்படியே மேலிருந்து கீழே விழுந்தது. உடனடியாக வேறு கயிறைக் கொண்டு வந்து அதில் கொடியைக் கட்டி மீண்டும் ஏற்றினார் நவீன் பட்நாயக்.

The Hindu – National flag hoisted upside down at Kashmir BJP office

Times of India – National flag hoisted upside down at Kashmir BJP office

English summary: The BJP has tendered unconditional apology for hoisting the national flag upside down during Republic Day celebrations in Bubhaneshwar.

“We are sorry for the incident. The person who tied the flag should have made proper check before hoisting of the tricolour,” party’s senior leader and former minister B B Harichandan said. Claiming that they had no intention to dishonour the tricolour, Harichandan said, “It was a mistake and we admit that”.

The party leaders and the mediapersons pointed out the mistake as soon as Harichandan unfurled the flag at the party’s state headquarters here. In another incident, the tricolour fell down from atop the pole at the ruling BJD office as soon as Chief Minister Naveen Patnaik pulled the string.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம் (27-01-2011)

 


 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.