மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள் – அமரேஷ் மிஸ்ரா!

Share this:

வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்பதையும் முன்னர் தெரிவித்திருந்தார். அவரின் அக்கட்டுரை வெளியான நாளிலிருந்து அவருக்கு எதிராகப் பல மிரட்டல் குரல்களும் ஏளன குரல்களும் உயர்ந்திருந்தன. மும்பைத் தாக்குதல் குறித்து தான் ஏன் அவ்வாறான நிலைக்கு வர வேண்டி இருந்தது என்பதையும் தான் முன்னர் கூறிய “மொஸாதும் ஹிந்துத்துவமுமே” மும்பை தாக்குதலில் செயல்பட்டுள்ளன என்பதற்கான உறுதியான மேலும் பல கேள்விகளையும் தொடுத்து பதிலளித்துள்ளார்.அவரின் கூற்றிலிருந்து…

“மும்பைத் தாக்குதலின் பின்னணியில் மொஸாதும் ஹிந்துத்துவத் தீவிரவாதிகளும் செயல்பட்டுள்ளனர்” என்ற என்னுடைய குற்றச்சாட்டைக் குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எதனைக் குறித்து வேண்டுமானாலும் சந்தேகப்படவும் கேள்வி எழுப்பவும் அனைவருக்கும் முழு உரிமை உண்டு. சரியான பாதைக்கான எல்லா சிந்தனைகளின் பிறப்பிடம் சந்தேகம்தான்.

மும்பைத் தாக்குதலைக் குறித்து இணையம் வழியாக இந்தக் கருத்தைத் தெரிவித்த எனக்கு, கொலை மிரட்டல்கள், வசவு மெயில்கள் போன்றவற்றிற்கு மேலாக என்னுடைய தைரியத்தையும் பகுத்தறிவினையும் கேலிக்குள்ளாக்கிய எச்சரிக்கைகளும் கிடைக்கப் பெற்றன.

சிலர் என்னைக் கேலிக்குள்ளாக்குவதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் கிரிமினல் முகங்களையும் அவர்களின் இலட்சியங்களையும் மறைத்து வைப்பதற்கான தந்திரம்தான் இக்கேலிகள் என்ற உண்மையை நான் சற்று முக்கியத்துவத்துடனே எதிர் கொள்கிறேன். சங் பரிவார தலைமையிடங்களே மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளன என்ற சந்தேகத்திற்குத் தற்பொழுது வலு கூடியுள்ளது. யதார்த்தத்தில் சங் பரிவாரம் என்பதை விட மோடி என்பதே சரியானது. அவர் ஹிந்துத்துவ ‘ஃபாஸிசத்தின் நவீன முகமாவார். இந்தியாவிற்கு எதிரானவரும் நெறிகெட்ட வியாபாரிகளில் ஒருவருமான ரத்தன் டாடாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்தான் இந்த மோடி. 19 ஆம் நூற்றாண்டில் சைனாவிற்குப் போதைப்பொருள் கடத்தித்தான்  டாடாவின் குடும்பம் பணம் சம்பாதித்தது.

ஆங்கிலேயர்களுடன் போராடி 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த வேளையில், 1857இல் ஆங்கிலேயர்களுடன் இணைந்து தங்களுக்கான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள்தான் இவரது குடுப்பத்தினர்.

பலவிதத்திலும் மோடி ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின் தள்ளி இருக்கின்றார். இவர் இந்தியாவுக்கான மொஸாத் குழுவின் முதல் நபராவார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதிர்ந்த தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்: “அமரேஷ், கேடர்களின் மீது எங்களுக்கான கட்டுப்பாடு தற்பொழுது கைவிட்டுப் போய் விட்டது. ஒரிஸ்ஸாவிலும் கர்நாடகாவிலும் காரியங்கள் கைமீறிச் சென்று விடக்கூடாது என்பதில் எங்களுக்கு தீர்மானம் இருந்தது. ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் ஒரு கூட்டு அறிக்கைக்கே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், கீழ்மட்டத்திலிருந்து அதற்கெதிராக எதிர்ப்பு உருவானது. பஜ்ரங்தளும் வி.ஹெச்.பியும் இதனை அங்கீகரிக்கத் தயாராயில்லை. மோடியின் இரகசிய ஆதரவு இவர்களுக்கு இருந்ததே அதற்கான காரணம். தெளிவாகக் கூறினால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தோம்”.

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அவர்கள் உருவாக்கி விட்டுள்ள ‘ஃப்ராங்கஸ்டைன்’ பூதத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையே உள்ளது. மோடியின் உருவத்தில் இந்த ப்ராங்கஸ்டைன் மொஸாதுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரிவினை தலைவிரித்தாடும் ஐ.எஸ்.ஐயுடன் மொஸாதிற்குத் தொடர்பு உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். மொஸாதோ சிஐஏயோ ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் மத்திய வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் சில ஜிஹாதி குழுக்களை வழிநடத்துகின்றன என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ஓமானில் உள்ள ஒரு ஜிஹாதி இயக்கம் மொஸாதின் உருவாக்கம் என்பது சமீபத்தில் கண்டறியப் பட்டிருந்தது.

அதனால்தான் மும்பையை ஆக்ரமித்த இளைஞர்கள் பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் நாடுகள் வெவ்வேறாகும்.சிலர் பிரிட்டீஷ் முஸ்லிம்களாவர். இவர்களில் ஒருவருக்காவது மொரீஷியஸ் பாஸ்போர்ட் உண்டு என்பது உறுதியாகும். இந்த  ஜிஹாதிகளை ஒன்றிணைத்து அனுப்பியது சௌதி அரேபியக்காரன் என்ற(மௌலானா பேதி என்று அந்த நபர் இப்பொழுது அழைக்கப்படுகிறார்) செய்தி இப்பொழுது உயர்ந்து வருகிறது.

இந்நபருக்கு ஏதாவது இந்திய/மோடி ஏஜண்டுகள் பணம் கொடுத்திருக்கலாம். இந்தச் சூத்திரதாரிகளுக்குத் தனியாக மதமோ நம்பிக்கையோ எதுவும் கிடையாது. இவர்கள் அமெரிக்காவின் சிருஷ்டிகளாவர்; பணத்திற்காக வேலை செய்பவர்கள். சிலவேளைகளில் அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராகவும் இவர்கள் செயல்படுவர். இது ஏற்றுக் கொள்வதற்குச் சற்று கடினமான, ஆனால் வெளிப்படையான உண்மையாகும்.

ஒபராய் ஹோட்டலின் உரிமையாளர் நந்தாவும் மோடியின் நெருங்கிய நண்பராவார். இவருக்குக் குஜராத்தில் கோடிகணக்கான ரூபாய்களுக்கான முதலீடுகள் உள்ளன.

இத்தாக்குதலுக்குப் பல நாட்களுக்கு முன்பே தாஜிலும் ஓபராயிலும் தீவிரவாதிகள் மறைந்திருந்தது எப்படி?.

இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் நாட்கணக்காக ஆயுதங்களும் வெடிபொருட்களும் பாதுகாத்து வைக்க முடிந்தது எப்படி?

அறிந்தோ அறியாமலோ ஹோட்டல் நிர்வாகிகளின் உதவியில்லாமல் இதெப்படி சாத்தியமாகும்?

அறிந்தோ அறியாமலோ தங்களின் கட்டிடத்தைத் தகர்ப்பதற்கு உரிமையாளர்கள் உதவி செய்தனர் எனக் கருதுவது அவ்வளவு கடினமான காரியமா?

தாஜ் நமக்கு மஹத்தான ஒன்றாக இருக்கலாம். ஆனால், டாட்டாவைப் பொறுத்தவரை தனிப்பட்ட வகையிலோ பொருளாதார ரீதியிலோ அதிலுள்ள பயன் என்ன?. மிக இலகுவான நிபந்தனைகளுடன் ‘நானோ ப்ளாண்’டிற்கு மோடி வழங்கிய அனுமதி டாட்டாவிற்கு இதனைவிட முக்கியமாகும். இவ்விஷயத்தை நான் உங்களுடைய சிந்தனைக்கு விடுகிறேன்.

நரிமான் ஹவுஸிற்கு வரும்பொழுது, மொஸாதின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் யூதரைக் கொல்வதற்கான காரணம் என்ன? என்ற சிலரின் கேள்வி என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!.

ஏன் அவ்வாறு நடக்கக் கூடாது? தீவிரமான சியோனிஸத்தையே மொஸாத் பின்பற்றுகிறது. அது, ஹிந்துத்துவத்திற்குச் சமமான மத ஃபாஸிஸ தத்துவ சாஸ்திரமாகும். சனாதன தர்மத்துடன் ஹிந்துத்துவதிற்கு யாதொரு தொடர்பும் இல்லாதது போன்று, சியோனிஸம் என்பதும் யூத மதத்தின் ஓர் அங்கமல்ல.

ஹிந்துத்துவவாதிகள் (தீவிர இராம பக்தரான) மஹாத்மா காந்தியைக் கொலை செய்தது போன்று, மொஸாதும் சியோனிஸவாதிகளும் சாதாரண யூதர்களைக் கொலை செய்கின்ற விஷயம் புறந் தள்ளக் கூடிய ஒன்றல்ல. பரவலான முஸ்லிம்-விரோத, இந்திய-விரோதக் கலவரத்திற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக கோத்ரா ரயில் தீ வைப்பின் மூலம் தங்களின் கூட்டத்தில் உள்ள பலரைக் கொலை செய்யத் துணை நின்றவர்தான் இந்த மோடி!

அத்வானி மற்றும் மோடியின் ஆதரவாளர்கள் எனத் தன்னைத் தானே பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், காந்தியைக் கொலை செய்தக் கயவர்களின் ஆதரளவாளர்களுமாவர். மத சார்பற்ற இந்தியா என்ற கொள்கைக்குத் துவக்கம் முதலே ஹிந்துத்துவ அரசியலும் அவர்களின் கொள்கைகளும் எதிராகவே இருந்து வந்துள்ளன. இவர்கள் 1947இல் இந்தியாவிற்கு எதிராகக் கலவரத்தை முன் நின்று நடத்தியவர்களாவர். முஸ்லிம்களுக்கு எதிரானத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் முக்கியமானவரான கோல்வார்க்கர் ஆங்கிலேயப் படைகளுடன் இணைந்துச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. யுனைட்டட் ப்ரோவின்ஸஸில் (இன்றைய யு.பி) உள்துறை செயலராக இருந்த ராஜேஷ்வர் தயாளின் கவனத்திற்கு இவ்விஷயம் வந்திருந்தது. அன்றைய முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்திடம் இவ்விஷயத்தை அவர் தெரிவித்துமிருந்தார்.

இனி கார்கரே கொல்லப் பட்ட நிகழ்வை எடுத்துக் கொள்வோம். இரண்டு விதமான அபிப்பிராயங்கள் இதற்குள் வெளியாகி விட்டன. அவர் எவ்விதம் கொல்லப்பட்டார் என்ற விஷயம் இதுவரை தெளிவாகவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது என்ற சந்தேகம் நிலை நிற்கின்றது. தன் மகன் கொல்லப்பட்டது எப்படி என்பதைத் தெளிவிக்க வேண்டும் என கார்கரேயின் அன்னை ஆக்ரோசத்துடன் தொலைகாட்சியின் முன்னிலையில் கோரிக்கை வைத்த சம்பவமும் நடந்துள்ளது. மற்றொரு அதிகாரியான ஸலஸ்கரின் மைத்துனரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது (நாட்டிற்காக உயிர்நீத்த) தீரமான உயிர் தியாகிகளின் உறவினர்கள் நீதி தேடுகின்றனர். தாங்கள் அறிந்தவற்றிற்கும் பின்னால் அறியாத பல விஷயங்கள் தீரமிக்கக் காவலர்களது கொலையின் பின்னணியில் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். கார்கரே, காந்தே, ஸலஸ்கர் ஆகியவர்களின் மரணத்திற்கும் மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

மோடி அறிவித்த ஒரு கோடி ரூபாயைக் கார்கரேயின் மகன் நிராகரித்தது எதனால்?. சிந்தித்துப் பாருங்கள்; குஜராத் அரசின் துணையில்லாமல் மும்பையை நோக்கிய தீவிரவாதிகளின் படகு பிரயாணத்திற்கு எந்த ஒரு சாத்தியமும் இல்லை.

கார்கரேயும் காந்தேயும் மும்பைக் காவல்துறையில் உள்ளவர்களுள் மிகச் சிறந்த மதச்சார்ப்பற்றவர்களும் சனாதன இந்துக்களுமாக இருந்தனர். நடுநிலைமையின் மனித உருவங்களாக அவர்கள் இருந்தனர். குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்த கார்கரே எவ்விதம் குண்டு துளைத்து இறந்தார்?. அவருக்குக் குண்டு துளைத்தது நெஞ்சிலா? அல்லது கழுத்திலா?. அநேகமாக இவை எதுவுமே நமக்குத் தானாக வெளிவரப்  போவதில்லை. ஆனால், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி அறிவதற்கான உரிமை நமக்கு உண்டு. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குடன் ப்ரவீண் தொகாடியா, சோட்டா ராஜன் போன்றவர்களின் பெயர்கள் வெளியான வேளையிலேயே கார்கரே தொலைத்துக் கட்டப் பட்டுள்ளார்.

பாகிஸ்தானையும் சீனாவையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க, இந்தியாவைத் தங்களின் கூட்டணியினுள் கொண்டு வருவதே அமெரிக்க-இஸ்ரேல் முயற்சிகளாகும். அதற்காகவே அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் மும்பையில் குறி வைக்கப்பட்டனர். நரிமன் ஹவுஸில், சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகமான இஸ்ரேலிகள் வந்து சென்று கொண்டிருந்ததாக அண்டைவாசிகளின் சாட்சியங்களை வைத்து அதிகமான செய்திகள் வெளியாகியிருந்தன. கொலையாளிகள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, தங்களைச் சார்ந்தோரைக் கொலை செய்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

அபாயகரமானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமான இஸ்ரேல்-அமெரிக்க அணியில் இந்தியாவை இணைப்பதற்காக முயலும் இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு கூட்டத்திற்கும் பாகிஸ்தான், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நல்ல தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் சுதந்திர நாடாக இந்தியா தொடர வேண்டும் என விரும்புகின்ற எதிர்க் கூட்டத்திற்கும் இடையிலான சண்டைதான் மும்பையில் அரங்கேறியிருக்கின்றது. 

எனவே, இது இந்திய தேசியம் புனர் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவையான காலகட்டமாகும். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் ஹிந்துத்துவத்திற்கும் அனுகூலமான நாட்டின் செயல்பாடுகளே இதுபோன்ற அக்கிரமங்களுக்கான அடிப்படைக் காரணம். 1857இல் நிலைபெற்றிருந்த, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் உறுதியானதுமான தேசியத்திற்கு நாடு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது.

அமரேஷ் மிஸ்ரா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.