பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!

த்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மனோஜ் தாக்கரேயைக் கொலை செய்தவர், உள்ளூரைச் சேர்ந்த மற்றொரு பாஜக தலைவர்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மனோஜ் தாக்கரே-யின் தொலைபேசி அழைப்புகளை வைத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சக பாஜக தலைவரான தாராசந்த் ரத்தோரும், அவருடைய மகன் திக் விஜய் ரத்தோரும் ரூ. 5 லட்சத்திற்குக் கூலிப்படையை அமர்த்தி, இந்த படுகொலையை செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, தாராசந்த், திக் விஜய் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜகாரியா, நானு, காலு, தாலிப், அனில் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி : சதீஷ் குமார் (தீக்கதிர்) ஆங்கிலத்தில் : இந்தியா டுடே-1 மற்றும் இந்தியா டுடே-2

காந்தி காலத்தில் ஆரம்பித்த படுகொலையும் அதைச் செய்துவிட்டு, பிறர்மீது பழி போடும் படலமும் தொடர்கின்றன – இவற்றையும் வாசியுங்கள்:

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

மதுரா தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக வி.எச்.பி தலைவர் கைது!

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள்!

முஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது!

இதை வாசித்தீர்களா? :   கிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்