பிரதமா் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்: காஞ்சிபுரம் பாஜக நிா்வாகி திருநாவுக்கரசு கைது!

Share this:

சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் – போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது (நியூஸ் 18 01-10-2019)

சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு நேற்று பிரதமர் மோடி வந்த நிலையில், ராஜீவ் காந்தியை போல அவர் கொல்லப்படுவார் என்று போனில் மிரட்டல் விடுத்த பாஜக கூட்டுறவு பிரிவு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் நேற்று நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபா், ஐ.ஐ.டி.யில் திங்கள்கிழமை (நேற்று) நடைபெறும் விழாவில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திர மோடியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருப்பதாகவும், அவா்கள் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுபோல மோடியையும் கொலை செய்ய திருவான்மியூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே பதுங்கியிருப்பதாகவும் கூறிவிட்டு போன் இணைப்பை அந்த நபர் துண்டித்தார்.

இந்த தகவல் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சைபா் குற்றப்பிரிவு போலீசாருக்கும், திருவான்மியூா் போலீஸாருக்கும் மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், போனில் மிரட்டல் விடுத்த நபர் திருவான்மியூா் திருவள்ளூவா் நகா் பகுதியைச் சோ்ந்த பாஜக.வின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலா் திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரிக்கையில், பிரதமர் மோடிக்கு போலீஸாா் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.


பிரதமா் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாஜக நிா்வாகி கைது (தினமணி 01-10-2019)

சென்னை: சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, பாஜக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்பட்டதாவது:

சென்னை வேப்பேரியில் பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிண்டி ஐ.ஐ.டி.யில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திர மோடியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருப்பதாகவும், அவா்கள் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுபோல மோடியையும் கொலை செய்ய திருவான்மியூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே பதுங்கியிருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை அந்த நபா் துண்டித்துவிட்டாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த காவலா், உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த அதிகாரிகள், சைபா் குற்றப்பிரிவு போலீஸாருக்கும், திருவான்மியூா் போலீஸாருக்கும் அந்த அழைப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டனா்.

இதையடுத்து திருவான்மியூா் உதவி ஆணையா் பி.கே.ரவி, ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் அந்த அழைப்பில் பேசியது, திருவான்மியூா் திருவள்ளூவா் நகா் பகுதியைச் சோ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலா் திருநாவுக்கரசு (43) என்பது தெரியவந்தது.

உடனே போலீஸாா், திருநாவுக்கரசுவை பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், பிரதமா் மோடிக்கு, போலீஸாா் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து போலீஸாா் திருநாவுக்கரசுவை திங்கள்கிழமை கைது செய்தனா்.


Not bothered by abuses, threats: PM Modi at Kancheepuram

“Now one Congress leader talks of killing Modi; but I want to tell them I am not bothered about the threats and abuses.  I am here to do my work.  I am here to do whatever I can do to make India strong and prosperous; every drop of blood in my veins; every breath of mine every second of my time is for India and 130 crore Indians,” Modi said amidst cheers from the crowd especially from the BJP cadre.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/mar/07/not-bothered-about-threats-modi-1947794.html


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.