தஸ்பீஹ் தொழுகை என்றொரு தொழுகை உண்டா?

மார்க்க விஷயத்தில் நாம் நன்மை கருதி எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைகளில் ஆதாரம் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகை, திக்ர், பிரார்த்தனை என்று எல்லா வழிமுறைகளையும் நபி(ஸல்) அவர்கள் செய்து காண்பித்துத் தந்துவிட்டார்கள்.

தஸ்பீஹ் தொழுகையை பொருத்தவரையில் அவ்வாறு ஒரு தொழுகையை நபி பெருமனார் (ஸல்) அவர்கள் செய்ததாகவோ அல்லது செய்வதற்கு ஏவியதாகவோ ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் காணப்படவில்லை. ஆனால் இத்தஸ்பீஹ் தொழுகையைக் குறித்து விவரிக்கும் பல ஆதாரப்பூர்வமற்ற அறிவிப்புக்கள் ஹதீஸ்களில் காணக் கிடைக்கின்றன. சிலர் இவற்றை எடுத்துக் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு இதனை சிறந்த ஒரு வணக்கமாக ஆக்கிவிட்டனர்.

இறைவன் கேட்பதை எல்லாம் தருவதாக வாக்குறுதி அளிக்கும் முக்கியமான ஒரு தொழுகையை (தஹஜ்ஜுத்) நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தந்துள்ளார்கள். இறைவனிடமிருந்து அளப்பரிய நன்மையை நாடுவோர் இத்தொழுகையை தொழுவதே சரியானதாகும்.

நன்மையான காரியம் என நினைத்து நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒரு காரியத்தை மார்க்கத்தில் செய்ய முயற்சிப்போமானால் அது நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தில் நமக்குக் குறை வைத்துச் சென்று விட்டார்கள்(நவூதுபில்லாஹ்) என்று தவறான எண்ணம் ஏற்படுவதற்கு வழியாகிறது. அதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக.

நன்மையைக் கருதி செய்யும் ஒரு செயலால் மிகப்பெரும் தீமை விளைய சாத்தியம் வந்து விடக்கூடாது. இத்தஸ்பீஹ் தொழுகையை பொறுத்தவரை அதற்கு மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது. நன்மை செய்கின்றோமோ இல்லையோ தீமையான காரியம் செய்வதிலிருந்து விலகி இருப்பது ஒரு முஃமினுக்கு கட்டாயமாகும்.

இத்தொழுகை குறித்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பு இருப்பின் அதனை செய்வதில் யாதொரு தவறும் இல்லை. ஆனால் இத்தொழுகைக்கு ஆதாரமாக கூறும் செய்திகள் யாவும் ஆதாரப்பூர்வமற்றவையே. எனவே நபி(ஸல்) காட்டித்தராத இத்தொழுகையைக் கடைபிடிக்காமல் இருப்பதே நல்லது.

இத்தொழுகைக் குறித்து வரும் ஹதீஸ்களைக் குறித்து ஆராயும் விரிவான தொடர் கட்டுரையை இங்குக் காணலாம்.

இதை வாசித்தீர்களா? :   ஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா?