அறிவுப்போட்டி – 5 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள்வாரியாக இங்குக் காணவும்.

அறிவுப் போட்டி ஐந்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 10 பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1) சிராஜ் முஹம்மது [siraj…@hotmail.com]

2) ஆலிம் ஹுசைன் [md_aa…@yahoo.com]

3) ஷரஃப் [ummunadhir….@yahoo.com]

4) ஷஃபீலா [safila_…@yahoo.com]

5) அபுல் ஃபவுஜ் [abulfou..@yahoo.co.in]

6) ஹாரூன் இப்ராஹிம் [amharoonibra…@yahoo.in]

7) மர்யம் பீவி [mariamaad…@yahoo.com]

8) கலீல் [pmkal…@yahoo.com]

9) செய்யது கனி [syed…@ymail.com]

10) அப்துல் பாஸித் [basith_…@yahoo.com]

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள பத்துப் பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் (48 வினாடிகள்) பதிலளித்த சகோதரி மர்யம் பீவி – [mariamaad…@yahoo.com] முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் (51வினாடிகள்) பதிலளித்த சகோ. ஹாரூன் இப்ராஹிம் – [amharoonibra…@yahoo.in] இரண்டாம் பரிசுக்குரியவராகவும், சகோ. கலீல் – [pmkal…@yahoo.com[ (54 வினாடிகள்) மூன்றாம் பரிசுக்குரியவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

 

அறிவுப்போட்டி-5க்கான சரியான விடைகள்:

வினா-1: நபித்துவத்தின் எத்தனையாவது ஆண்டில் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்? விடை: ஐந்தாவது

வினா-2: அபூ பக்கர்(ரழி)-வின் தந்தை பெயர் என்ன? விடை: உத்மான்

வினா-3: சிறிய பாட்டனார் அபூ தாலிஃபின் பராமரிப்பில் நபி(ஸல்) எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்? விடை: 42

வினா-4: முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்? விடை: கதீஜா(ரழி)

வினா-5: குர்ஆனில் உள்ள எந்த அத்தியாயம் பிஸ்மில்லாஹ் இன்றி துவங்குகிறது? விடை: சூரத்துத் தவ்பா

வினா-6: ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் கிடைப்பது? விடை: ஒரு வருடம் நோன்பு நோற்றதற்கு சமம்

வினா-7: பெருநாள் தொழுகைக்கு எத்தனை தக்பீர்? விடை: 7&5

வினா-8: நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்பு சாப்பிடுவது? விடை: சுன்னத்

வினா-9: சமீபத்தில் இங்கிலாந்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப் பட்ட பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் யார்? விடை: ஜாகிர் நாயக்

வினா-10: முதன் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ? விடை: அப்துல் ஹமீத் பாக்கவி

இதை வாசித்தீர்களா? :   அறிவுப் போட்டி - 27 : விடைகளும் வெற்றியாளர்களும்

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

வினா: படத்திலுள்ளவர்களில் மேற்கத்திய ஊடகங்களின் பார்வையில் “பயங்கரவாதி யார்?” என்பதைக் க்ளிக்கி குறிப்பிட்டு பின்பு ஒப்புதல் அளிக்கவும்

விடை: சிறுவன்

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 5இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரி மர்யம் பீவி, சகோதரர்கள் ஹாரூன் இப்ராஹிம் மற்றும் கலீல் ஆகியோருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும்  சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (admin@satyamargam.com) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்களுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பிய அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.