அறிவுப் போட்டி – 26 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:

அறிவுப் போட்டி 26இல் மாஷா அல்லாஹ் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) A. இம்ரான் ஃபாரித் (முதலாம் பரிசு) alirasool2… at hotmail

(2) உம்மு ஹுதைஃபா (இரண்டாம் பரிசு) msk_7… at yahoo

(3) உம்மி ஃபாஜிலா (மூன்றாம் பரிசு) mam… at gmail


அறிவுப்போட்டி-26 க்கான சரியான விடைகள்:

வினா-01: நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நபித்தோழர்களுக்கு உணர்த்திட அபூபக்கரு (ரலி) அவர்கள் ஓதிய குர்ஆன் வசனம் எது?

விடை : 3 :144


வினா-02: தமக்கு விருப்பமான தோட்டத்தை தர்மம் செய்த அபூதல்ஹா (ரலி ) அவர்களின் உண்மையான பெயர் என்ன?

விடை : ஸைத் பின் ஸஹ்ல்


வினா-03: அபு தல்ஹா தர்மமாக வழங்க நாடிய தோட்டத்தை, நபி (ஸல்) யாருக்கு வழங்குமாறு கூறினார்கள்?

விடை : உறவினர்களுக்கு


வினா-04: “அல் பிதாயா வந் நிஹாயா” எனும் சிறந்த வரலாற்று நூலின் ஆசிரியர் யார்?

விடை : இமாம் இப்னு கஸீர் (ரஹ்)


வினா-05: “அல் முல்க்” எனும் குர்ஆன் அத்தியாயத் தலைப்பின் பொருள் என்ன?

விடை : ஆட்சி /அதிகாரம்


வினா-06: மிகச் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா அவர்கள் பெயர் என்ன?

விடை : உமர் (ரலி)


வினா-07: தபாரகல்லதீ பியதிஹில் __________வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர்.

விடை : முல்கு


வினா-08: வட்டி தடை செய்யப்பட்ட போது நபி (ஸல்) அதைத் தள்ளுபடி செய்து துவக்கிய அவகளின் உறவினர் பெயர்?

விடை : அப்பாஸ் (ரலி)


வினா-09: கிப்தில் 1981ல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யார்?

விடை : அன்வர் சதாத்


வினா-10: முப்பது ஆண்டு காலம் எகிப்தில் ஆட்சி புரிந்த ஹுஸ்னி முபாரக், பதவி விலகியது எந்த வயதில் ?

விடை : 82 வயதில்


oOo

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 26இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை admin[at]satyamargam.com எனும் மின் முகவரியுடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.