
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி எண் – 15இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 29 பேர் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:
01 | அபூபக்ரு | mohamedaboobakarsit…at gmail.com |
02 | அபூபக்ரு ஸித்தீக் | aboobakar_…at rediffmail.com |
03 | ஃபஹ்மீதா | sy…at hotmail.com |
04 | உம்மு ஹிபா | giasith…at gmail.com |
05 | நபீஹா | faizur…at etatns.com |
06 | ஃபைஸுர் ஹாதி | faizur…at yahoo.com |
07 | முஹம்மது அர்ராஃப் | faizur…at gmail.com |
08 | முஹம்மது நிஹால் | peacefai…at gmail.com |
09 | நிதால் | nidha…at gmail.com |
10 | நிதால் முஹம்மது | nidhal…at yahoo.com |
11 | ஸையித் | s…at dcsme.ae |
12 | ஆயிஷா | m_ayesha…at yahoo.com |
13 | காஜா | kkmohideen1…at gmail.com |
14 | A.அப்துல் ஹமீது | hameed742…at gmail.com |
15 | ஈமான் | ummiim…at gmail.com |
16 | ஸஃபி | safila_…at yahoo.com |
17 | ஸஃப்ரின் மீரா | alirasool2…at gmail.com |
18 | ரலீனா பீவி | bharat_ratn…at yahoo.com |
19 | K. N. முஹைதீன் | mohideen0…at gmail.com |
20 | முஹம்மது ஃபாஸில் | fazi…at gmail.com |
21 | A.H. அப்துல் மஜீத் | abdulm…at gmail.com |
22 | A.H. ஸுபேதா பேகம் | begumzube…at yahoo.in |
23 | நாகூர் ராணி | rani1…at gmail.com |
24 | சீனி நிஷ்மா | seeni1…at gmail.com |
25 | ஆஃப்ரின் | noveltyaha…at gmail.com |
26 | ஹஸீனா | pioneer.ra…at gmail.com |
27 | ஃபர்ஜானா | rani1…at gmail.com |
28 | ஸபீதா அம்ஜத் | amjath…at gmail.com |
29 | அலீ அக்பர் | seeni1…at gmail.com |
மேற்காணும் பட்டியலில் உள்ள 29 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோதரர் A.H. அப்துல் மஜீது (வரிசை எண் 21) – முதலாம் பரிசு
(2) சகோதரி உம்மு ஹிபா (வரிசை எண் 04) – இரண்டாம் பரிசு
(3) சகோதரர் முஹம்மது நிஹால் (வரிசை எண் 08) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-15க்கான சரியான விடைகள்:
வினா-01: கடந்த ஒரு வருட பாவங்கள் மன்னிக்கப்படும் நோன்பு எது?
விடை : ஆஷுரா நோன்பு
வினா-02: இஹ்ராம் அணிந்த நிலையில் மரணிப்பவர் எவ்வாறு எழுப்பப்படுவார்?
விடை : தல்பியா கூறியவாறு
வினா-03: முஸ்லிம்களுக்கான அதிகபட்ச துக்க நாட்கள் எத்தனை?
விடை : 3 நாட்கள்
வினா-04: முஸ்லிம் பெண்களுக்குரிய ஜிஹாத் எது?
விடை : ஹஜ்ஜுக்குச் செல்வது
வினா-05: “ஹஜ் செய்வது கடமை” எனும் வசனம் எந்த ஆண்டு இறக்கப்பட்டது?
விடை : ஹிஜ்ரீ 9
வினா-06: முஹர்ரம் பத்து அன்று என்ன செய்வது சுன்னத்?
விடை : ஆஷுரா நோன்பு நோற்பது
வினா-07: மது அருந்துவது குர்ஆன் மூலம் முழுமையாகத் தடை செய்யப்பட்ட ஆண்டு எது?
விடை : ஹிஜ்ரீ 4இல்
வினா-08: முஹர்ரம் பத்து அன்று உயிர் நீத்த நபி (ஸல்) அவர்களின் உறவினர் யார்?
விடை : ஹுஸைன் (ரலி)
வினா-09: அல்லாஹ், ஃபிர்அவ்னிடமிருந்து மூஸா(அலை) மற்றும் அவர் சமூகத்தைக் காப்பாற்றிய நாள் எது?
விடை : முஹர்ரம் 10
வினா-10: (வானங்கள் பூமிகள் படைக்கப்பட்ட நாளில் இருந்து) மாதங்களின் எண்ணிக்கை 12 எனும் குர்ஆன் வசனம் எது?
விடை : 9:36
மதிப்பெண் இல்லா உபரிக்கேள்வி:
FIFA 2022 உலகக் கோப்பை நடத்துவதற்காகப் போட்டியிட்ட உலக நாடுகளில், இறுதிச் சுற்றுப் போட்டியில் கத்தர் நாட்டிடம் தோற்றுப் போன நாடு எது?
விடை : அமெரிக்கா
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 15இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் |
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.