அறிவுப் போட்டி – 11 : விடைகளும் வெற்றியாளர்களும்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.


வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் – 11இல் ஏறத்தாழ நூறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 6 பேர் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1)

முஹம்மது ஸாலிஹ்

mohdaa…hotmail.com

49 வினாடிகள்

2)

அஹ்மது

allam1…rediff.com

53 வினாடிகள்

3)

ஈமான்

ummiim…gmail.com

60 வினாடிகள்

4)

ஆயிஷா

aysj…gmail.com

1நி. 3 வினாடிகள்

5)

நபீலா

athikaf…yahoo.com

1நி. 4 வினாடிகள்

6)

ஆயிஷத்

kaniays_1…yahoo.com

1நி. 11 வினாடிகள்

மேற்காணும் பட்டியலில் உள்ள அறுவருள் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரர் முஹம்மது ஸாலிஹ் – முதலாம் பரிசு (49 வினாடிகள்)
(2) சகோதரர் அஹ்மது – இரண்டாம் பரிசு (53 வினாடிகள்)
(3) சகோதரி ஈமான் – மூன்றாம் பரிசு (60 வினாடிகள்)

அறிவுப்போட்டி-11க்கான சரியான விடைகள்:

வினா-01: ஹஜ்ஜுக்காக சேகரிக்க வேண்டியதில் மிக சிறந்தது எது?

விடை : இறையச்சம்


வினா-02: குர்பானி பிராணியை எப்போது அறுக்க வேண்டும்?

விடை : பெருநாள் தொழுகைக்குப் பின்


வினா-03: உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லும் போது, நிர்வாகப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது வழக்கம்?

விடை : ஸைது(ரலி)


வினா-04: ஹஜ்ஜுக்காக ஆண்கள் அணியும் விசேஷ ஆடையின் வழக்குப் பெயர் என்ன?

விடை : இஹ்ராம்


வினா-05: நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் எத்தனை முறை ஹஜ் செய்தார்கள்?

விடை : ஒரு முறை


வினா-06: அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாக காண்பீர்கள் என்றவர் யார்?

விடை : இஸ்மாயீல் (அலை)


வினா-07: இறை வசனங்கள் அருளப்படும்போது அதை எழுத அமைக்கப்பட்ட குழுவில் தலைமை வகித்தவர் யார்?

விடை : ஸைது (ரலி)


வினா-08: ஸூரா ஹஜ்ஜில் எத்தனை ஆயத்துகள் உள்ளன?

விடை : 78


வினா-09: கடந்த 2006 இல் நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம் யார்?

விடை : முஹம்மத் யூனூஸ்


வினா-10: “புறம் பேசும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்!” இறை வசன எண் எது?

இதை வாசித்தீர்களா? :   அறிவுப் போட்டி - 20 : விடைகளும் வெற்றியாளர்களும்

விடை : 104 :1


மதிப்பெண் இல்லாப் படக்கேள்வி:

“வாருங்கள், அனைவரும் முஹம்மது நபியை வரைவோம்!” என்ற விஷமப் பிரச்சாரத்தை கடந்த மே, 2010 இல் முடுக்கி விட்டு உலக முஸ்லிம்களின் எதிர்ப்பிற்குப் பிறகு கைவிட்ட தளம் எது?

விடை : FaceBook

oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 11இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.