தற்பெருமை (நபிமொழி)

''மனிதன் தன்னையே தான் புகழ்ந்து உயர்வுபடுத்திக் கொண்டு பெருமையடித்துக் கொள்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளான். எனவே அவனுடைய பெயரை அநியாயக்காரர்களான பெருமைக்காரர்கள் என்று (ஃபிர்அவ்ன், ஹாமான், காரூண் ஆகியவர்களின் பட்டியலில்) எழுதப்படும். அவர்கள் அடைந்த (இம்மை மறுமை) கேட்டினை இவர்களும் அடைவார்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்முதுப்னுல் அக்வஃ (ரலி) ஆதாரம்: திர்மிதீ

"பெருமைகள் அனைத்தும் என் போர்வையாகும். கண்ணியம் என் கால் சட்டையாகும். எனவே எவன் இவ்விரண்டிலிருந்து எதனையும் என்னிடமிருந்து அபகரிக்கின்றானோ அவனை நான் வேதனை செய்வேன்" என்று அல்லாஹ் கூறியதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ

'' 'எவனுடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை குடிகொண்டுள்ளதோ அவன் சுவனபதி செல்ல மாட்டான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒருவர், 'நிச்சயமாக மனிதன் தன் ஆடை அழகாயிருப்பதையும் தன் காலணிகள் அழகாயிருப்பதையும் விரும்புகிறான் (அப்போதுமா)' என்று வினவினார். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக அல்லாஹ் அழகானவனே! (எனவே) அழகானதை(யும் தூய்மையானதையும்) நேசிக்கிறான். (ஆனால்) பெருமை என்பது உண்மையை மறப்பதும் (மற்ற) மனிதர்களை இழிவாக எண்ணி(த் தன்னில் தானே) செருக்கடைவதுமாகும்' என்று கூறினார்கள்.''

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

''ஓர் அழகிய மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நாயகமே! நிச்சயமாக நான் அழகை விரும்புகிறேன். மேலும் நான் அழகையே நிச்சயமாக அளிக்கப்பட்டிருக்கிறேன். இதனைத் தாங்களும் பார்க்கிறீர்கள். ஆனால் நான் என் செருப்பின் வாரில் கூட பிறர் எவரும் என்னை விடத் தரத்தில் உயர்ந்து விடுவதை விரும்ப மாட்டேன். இது பெருமையின் பாற்பட்டதுதானா?' என்று வினவினார். (அதற்கு அவர்கள்), 'இல்லை. எனினும் பெருமை என்பது உண்மையை மறப்பதும் (மற்ற) மனிதர் களை இழிவாகக் கருதி செருக்குறுவதும் ஆகும்' என்று கூறினார்கள்.''  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: அபூதாவூத்

'' 'எவன் தன் கால் சட்டையைக் கீழே படும் வண்ணம் பெருமையாக இழுத்துச் செல்கின்றானோ அவன் பக்கம் மறுமை நாளில் அல்லாஹ் (ஏறிட்டும்) பார்க்க மாட்டான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ

''எவன் தொழும் பொழுது தன் கால் சட்டையை (கணுக்காலுக்குக் கீழாக) தொங்க விடுகிறானோ அவன் அல்லாஹ் விடம் ஆகுமானதில் தரிப்பட்டவனுமல்ல, ஆகாததில் தரிப்பட்டவனுமல்ல. (அதாவது அவன் அல்லாஹ்வுடைய பொறுப்பில் இல்லை), என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''

இதை வாசித்தீர்களா? :   மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) ஆதாரம்: அபூதாவூத்

'' 'எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.''

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்

'' 'நான் கழுதை மீது ஏறிச் செல்கிறேன். தலைப்பாகைத் துணியை அணிந்திருக்கிறேன். ஆட்டின் பாலையும் கறக்கிறேன். நிச்சயமாக, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்விதமான வேலைகளைச் செய்து வருபவரிடம் சிறிதளவும் பெருமை இல்லை என்று கூறியிருந்தும் நீங்கள் என்னில் பெருமை குடிகொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்கள்' என்று முத்இம் உடைய மகன் ஜுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.''

அறிவிப்பவர்: ஜுபைர் (ரலி) ஆதாரம்: திர்மி