வார்த்தையின் முக்கியத்துவம்

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

"ஓர் அடியார்(மனிதர்) அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் மூலம் கிடைக்கும் பலன்களைப் பற்றி பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை (அவர் எண்ணியும் பார்த்திராத அளவுக்கு) உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக(அதன் பின் விளைவுகளையும் பாதிப்புகளையும் பற்றி யோசிக்காமல் அலட்சியமாக) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்" அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி) நூல்:புகாரி,6478 

 

மனிதன் எனும் படைப்புதான் ஏக இறைவன் படைத்தவற்றிலேயே மிக உயர்ந்த அந்தஸ்துள்ள படைப்பாகும். வேறு எந்த ஒரு உயிரினத்திற்கும் இல்லாத பல அரிய தனிச்சிறப்புக்களையும் ஆற்றல்களையும் உடைய மனித படைப்பிற்கு மட்டும் இறைவன் வழங்கியுள்ள ஓர் அருட்கொடைதான் பேச்சாற்றல். மனிதர்கள் தங்களது தேவைகளை, கருத்துக்களை மற்றும் உள்ளத்தின் உணர்வுகளை, வெளிப்படுத்திட இறைவனால், மனிதர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான  தொடர்பு வழியே பேச்சாற்றலாகும்.

 

மனிதன் வெளிப்படுத்தும் நல்ல வார்த்தைகள் சில நேரங்களில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்தையும் வெகுமதியையும் பெறுகிறது, அவ்வாறே அவன் வெளிப்படுத்தும் கெட்ட வார்த்தைகள் இறை வெறுப்பையும், தண்டனைகளையும் பெற்றுதர வல்லது என்று மனிதன் சிந்திக்க தவறுகிறான் என்ற உண்மை நிலையை இந்நபிமொழி  நமக்கு உணர்த்துகிறது.

 

சிந்தனை: இப்னு ஹனீஃப்

இதை வாசித்தீர்களா? :   தற்பெருமை (நபிமொழி)