எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)

"ஒரு மூமின் (இறைநம்பிக்கையாளன்) ஒரே புற்றில் இரண்டு தடவை கொட்டப்பட மாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்கள் புகாரி-6133, முஸ்லிம்-5317, அபூதாவூத்-4220, இப்னுமாஜா-3972, அஹ்மத்-8572, தாரமி-2662

ஒரு புற்றின் உள்ளே கைவிட்டு ஒரு முறை விஷ ஜந்துவால் கொட்டப்பட்டு விட்டால் மறுமுறை அந்தத் தவறைத் திருப்பிச் செய்யாதது போல், ஒரு முஸ்லிம் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்துவிட்டால், மறுமுறை ஏமாறும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள்.

இதை வாசித்தீர்களா? :   ரமளான் மாதத்தை அடைந்தும்... (பிறை-15)