புல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்!

Share this:

த்திய அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஆளுநர் ஆட்சி நடைமுறையிலுள்ள ஜம்மு-கஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், விடுமுறை முடிந்து 70 வாகனங்களில் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த 2,500 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், 14.2.2019 அதிகாலை சுமார் 4 மணியளவில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவனால் தாக்கப்பட்டனர்.

350 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை ஏற்றி வந்த ஸ்விஃப்ட் கார் ஒன்று சிஆர்பிஃஎப் வாகனத்தின் மோதியதில் சிஆர்பிஃஎப் வாகனங்களில் பயணித்த 44 வீரர்கள் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர்.

புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது! இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் இ முகம்மது என்ற இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு சத்தியமார்க்கம்.காம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது!

oOo

நாடாளுமன்றத்துக்காக 2014இல் நடைபெற்ற தேர்தலின்போது, பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, “மோடி பிரதமராகப் பதவி ஏற்றுவிட்டால், நம் நாட்டு இராணுவ வீரர்களைத் தாக்குவதற்கு பாகிஸ்தானுக்குத் துணிச்சல் வராது” என்று உறுதியளித்தார்.

Pak won’t dare attack jawans after Modi becomes PM: Shah

Shah addressed a string of public meetings Tuesday in Hathras, Kannauj and Hamirpur in support of party candidates.

BJP national general secretary and UP in-charge Amit Shah Tuesday said Pakistan will not dare to attack Indian Army jawans once Narendra Modi takes oath as the prime minister.

Express News Service |Lucknow | Published: April 23, 2014 4:31:28 am

இப்போது நிகழ்ந்தேறியுள்ள தற்கொலைத் தாக்குதல் மூலம் அமித் ஷாவின் உறுதிமொழியின் அடிப்படையில் நாம் கீழ்க்காணும் முடிவுகளுள் ஏதேனும் ஒன்றுக்கு வரலாம்:

  • தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குப் பங்கேதுமில்லை.
  • தற்போது பிரதமராகச் செயல்படுபவர் நரேந்திர மோடியல்லர்.
  • தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நாங்களே நம்பாததால், நான் ‘சும்மா’ சொன்ன பேச்சு அது.

இம்மூன்றில் எந்த முடிவுக்கும் வர முடியாதவர்கள் எழுத்தாளர் பா. வெங்கடேசனைப் போன்று வீணான ஐயங்களில் உழல்கின்றனர் என்று பொருள்.

சந்தேக குண்டு!

44 சிஆர்பிஎப் வீரர்களின் படுகொலையை எவ்வித விவாதங்கள் இன்றி எத்தகைய சந்தேகத்தையும் கேட்காமல் தேசபக்தி என்கிற பெயரில் மழுங்கடிக்க நினைப்பது பெரிய அயோக்கியத்தனம். ஜம்மு காஷ்மீர், மற்ற மாநிலங்களைவிட முற்றிலும் மாறுப்பட்ட சூழல் கொண்டது. எல்லையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலைகளில் தடுக்கி விழுந்தால் செக்போஸ்ட்கள் அமைந்திருக்கும்.

350 கிலோ வெடிமருந்துகள் என்பது ஏதோ ஒரு சிறிய துப்பாக்கி தோட்டா இல்லை. ஒரு சதிதிட்டத்திற்கு, நாசவேலைக்கு அவ்வளவு பெரிய வெடிமருந்து கொள்முதலில் தொடங்கி, காரில் பொருத்தி, திட்டமிட்டு ராணுவ வண்டிகளை நோட்டமிட்டுத் தாக்குவது மெரினாவில் பலூன்களை சுடுவது போன்ற எளிதான வேலை அல்ல.

24 மணிநேரமும் தீவிர ரோந்து கண்காணிப்பு, தீவிரவாதிகளின் ரேடார் ஒயர்லெஸ் போன்ற தகவல் தொடர்புகளை வழிமறித்து கேட்கும் நுண்ணறிவு பிரிவு, இவையெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தது என்பதை ‘ஜெய் ஹிந்த்’ போட்டுத் திசை திருப்புகிறார்கள் என்றால் சதி என்பது எங்கே தொடங்கிருக்கிறது என்று யோசிப்பது தவறில்லையே.!

– முகநூல் பதிவில் பா.வெங்கடேசன்

oOo

44 துணை ராணுவ வீரர்களின் உயிர் பலிக்கும் பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று உறுதியாகக் குற்றம் சாட்டுகின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. தியாகு.

கஷ்மீரின் கடந்து வந்த பாதை:

தீவிரவாதி வேட்டையின் மறுபக்கங்கள்

கண்ணீர் வடிக்கும் கஷ்மீர் ரோஜாக்கள்

இராணுவத்தின் வெறிச் செயல்

கஷ்மீர் : புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.