சுட்டுவிரல் கரும்புள்ளி!

ன்னோடு வாருங்கள்
எல்லைகள் கடந்து
இலக்கினை அடைந்து
இலட்சியம் வெல்வோம்!

நல்லதொரு நண்பனாய்
நலம்நாடும் அன்பனாய்
பண்படுத்திப் பாலமிட்ட
பாதையொன்றில் பயணிப்போம்!


உறுதியாய் இருப்போம்
உதயமாய் எழுவோம்
உள்ளக் கிடக்கைதனை
உல
மய மாக்குவோம்!

இயக்க போதையின்
மயக்கம் தெளிவோம்
பிரித்தாளும்  யுக்தியை
பகுத்தறிந்து தெளிவோம்

ஒட்டுமொத்தக் கூட்டமும்
ஓட்டு யுத்தம் மூட்டுவோம்
மாக்களின் மந்தையல்ல
மக்கள் சக்தியெனக் காட்டுவோம்!

தலைவர்கள் கூட்டத்தைத்
தள்ளி வைத்துக் கொள்வோம்
நமக்கு நாம்தா னென
சொல்லிவைத்து வெல்வோம்!

நமக்கென நாட்டில்
நல்லதைக் கேட்போம்
வாக்குறுதி தருபவருக்கே
வாக்குப் பதிவு செய்வோம்!

கரும்புள்ளி யொன்று
விரல்முனை பதியுமுன்
அருங்குணங்கள் கொண்டவனைத்
தெரிந்தெடுத்துத் தெளிவோம்!

தெரிந்தெடுத்த ஒருவரை
பரிந்துரைத்து வைப்போம்
வரிந்துகட்டி யுழைத்து
வெற்றிக்கனி பறிப்போம்!

இயக்கமும் தயக்கமும்
இம்மையில் போக்குவோம்
மறுமையை குறிவைத்தே
மாற்றங்கள் கொணர்வோம்!

– சபீர்

இதை வாசித்தீர்களா? :   111 ஈச்சங் கயிறு !