சிந்தியுங்கள் அன்பு நெஞ்சங்களே! (கவிதை)

தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம்….

தலைதூக்கி உலகை வாட்டுகின்றது..

என்று கூக்குரலிடுகின்றனர்…..


தீவிரவாத்தினால் பாதிக்கப் பட்ட

அப்பாவிகளும், அதன் பின்விளைவால்

இன்றும் பாதிக்கப்பட்டு வரும்

சமுதாய அபலைகளும்,.. நிரபராதிகளும்….

தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்களும்தான்!


இதற்கு காரணம் யார்?

இதற்கு காரணம் என்ன??

இதனை களைவது எப்படி???


ஐ.நா. சபை முதல்……..

அடுப்படி வரை…

வேறு எதுவும் சமைக்கப்பட வில்லை என்றாலும்

இதன் புகை மூட்டம் இல்லாமல் இல்லை.

ஆனால்… இவைகள் ஒயவில்லை..


தீவிரவாதிகளே…….,

நீங்கள் யார்?… உண்மையில் உங்கள் நோக்கம் என்ன?

உங்கள் பிறப்பிடமும்? இருப்பிடமும் எது?

உங்கள் பயங்கரவாதத்தின் காரணம் என்ன?


அடிப்படைகள் உங்களுக்கும் உண்டு எனில்

அதனை உலகுக்கு எடுத்துக் கூறுங்களேன்

தயக்கம் ஏன்….???

மறுமை என்று ஒன்று உண்டு என்பதை மறந்த

மயக்கம் ஏன்?


நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் – நிந்திக்கப்பட்டவர்கள்

அதன் விளைவே இது என்றால்

பாதிப்பை உணர்ந்த, வேதனைகளை அனுபவித்த..

நீங்களே அப்பாவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாமா?


அநியாயம் செய்யப்பட்டதால்… நீங்கள் இப்படி

அறியாதோர்களுக்கு அநியாயமாக

வேதனை ஏற்படுத்தலாமா?


சிந்தியுங்கள்… அன்பு நெஞ்சங்களே!!

நம் அனைவர் உடலிலும் ஓடும் அதே உதிரத்தை

ஏன் ஓட்டுகிறீர்கள் உலகில்.. கணக்கின்றி..

நாளை கணக்குண்டு என்பதை ஏன் மறுக்கிறீர்கள்?


உங்களுக்கும், உங்களை உருவாக்கியவர்க்கும்,..

உங்கள் பெயரால் இன்று சமுதாய அப்பாவிகளுக்கும்

தீங்கும், தொல்லையும், சித்திரவதையும், இழிவும்

ஏற்படுத்தும்..அனைவருக்கும்தான்…


நிச்சயமாக இங்கு இல்லையெனினும், நாளை கணக்குண்டு

மறக்காதீர்கள், மறுக்காதீர்கள்..அன்புடையோர்களே!


ஆக்கம்: இப்னு ஹனீஃப்

இதை வாசித்தீர்களா? :   கனவில் கிடைக்கும் நீதி!