தொடுவானம்…!

{mosimage}புழுதி படர்ந்த…
வானம்!
 
சோகம் சுமந்த…
காற்று!!!
 
வியர்வைப்பூக்களை
உதிர்க்கும்….
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்…
தொடு வானம்!
 
ஒவ்வொரு எலும்பையும்
துளைத்தெடுக்கும்…
குளிர் இரவு!
 
விழிகளை
வலிக்கச் செய்யும்…
முடிவிலிப் பாலைவனம்!
 
இங்கு தான்
என் தாய்…
என்னைச் சுமந்தாள்!
 
நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்….
ஒரு மெலிந்த சிறுவனாய்!
 
இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்
தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட ஆடையோடு
முளைக்கிறேன்….
ஒரு முஜாஹிதாய்…..
 
சோகக் கரு
தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத் தொலைத்தேன்!!!
 
வறண்ட பாலைவனத்திலும்
வற்றாத
சுனை நீராய்…
சுகம் தந்த இஸ்லாம்!
 
இஸ்லாம்
என்
காயங்களுக்கு
கட்டுப்போட்டது!
 
உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது! 

அழுத விழியோரத்தில்
ஒரு
குளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்
தாய் பூமியே
அழாதீர்கள்…..

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும் சுவாசம்
சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!

உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்…
என்
தாய்கள் அழுத
விழிநீர் கொண்டு!!!!

 
– சமீலா யூசுப் அலி, மாவனல்லை, இலங்கை.

நன்றி: கீற்று தளம்

இதை வாசித்தீர்களா? :   சொர்க்கத்தின் ஆசை