புறப்படு சகோதரா! புறப்படு! (கவிதை)

பின்பற்ற வேண்டிய சமுதாயம்

பின்னோக்கி நிற்கையில்

முன்னணியில் போராட

நான் மட்டும் எப்படி?


பேர் பெற்ற சமுதாயம்

நோய் பட்டுக் கிடக்கையில்

நிர்வாகம் சீராக்க

நான் மட்டும் எப்படி?

 

எண்ணூறு ஆண்டு காலம்

இந்தியாவை ஆண்ட குடி

பாழ்பட்டுக் கிடக்கையில்

நான் மட்டும் எப்படி?


இப்படி பொறுப்பற்ற பதில் விடுத்து

சுறுசுறுப்பாய் களம் காண

புறப்படு சகோதரா! புறப்படு!

 

வீரத்தின் விளைநிலமே!

விவேகத்தின் இருப்பிடமே!

மனித நேயம் காக்க…

புனித மார்க்கம் ஓங்க…

புறப்படு சகோதரா! புறப்படு!

 

உன் வேகம் கண்டு

துரோகிகளும் நயவஞ்சகர்களும்

புறமுதுகிட்டு ஓடிடட்டும்!

புறப்படு சகோதரா! – புழுதி

பறக்க புறப்படு!


சிறுபான்மை நாம் என்ற

சிந்தனையை மறந்துவிடு!

பாறாங்கல்லையும் சிற்றுளி

பிளந்திடும் என்பதை மனதிலிடு!

 

சிறுபான்மை பெரும்பான்மையை

வென்ற வரலாறு நம் பத்ருகளம்!

வெற்றி அல்லது வீரமரணம்

வாழ்க்கையே நமக்குப் போர்க்களம்!

 

நம் சகோதரிகள் மானமிழப்பதைக் கண்டு

கொதித்தெழ வேண்டாமா?
நம் குழந்தைகள் அனாதைகளாவதை விடுத்தும்

தடுத்திட வேண்டாமா?


நம் செல்வங்கள் சூறையாடப்படுவதற்கு

முடிவு கண்டிட வேண்டாமா?

பொறுத்தது போதும் சகோதரா!

புயலாக பொங்கி எழு!


குமுறும் எரிமலை

வெடித்துச் சிதறினால் – இந்தப்புவி

தாங்காது என்பதை

மாபாதகர்களுக்குப் புரிய வைப்போம்!

 

பொறுத்தவன் பொங்கி எழுந்தால்

அடக்குபவன் அதிகாரமிழந்து போவான்

என்பதை – இந்த அநியாய

ஆட்சியாளர்களுக்கு அறிய வைப்போம்!

 

தீயோரை எதிர்க்கும்

போர்குண மிக்கவர்கள் நாம்!

நல்லோரை மதிக்கும்

நற்குண மிக்கவர்கள் நாம்!


இனிய மார்க்கத்தின் வழி நின்று

மனித குலத்திற்கு தீங்கு செய்வோரை

மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்
புறப்படு சகோதரா! புறப்படு!

 

ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

இதை வாசித்தீர்களா? :   91. கதிரவன் மீதாணை !