வரலாறு மீள்பதிவாகட்டும்!

ஸ்ரவேலர்களுக்கு
இதரவேலை இல்லை
பாலஸ்தீனத்தில்
பாவம் செய்வதைத் தவிர

கான்க்ரீட் கட்டடங்கள்
கற்குவியலாகின்றன
இடிபாடுகளுக்கிடையே
இஸ்லாமிய உடல்கள்

குற்றுயிரும் குலையுயிருமாய்க்
குழந்தைகள்

இந்தக்
கொலை நிகழ்ச்சிகளைக்
கலை நிகழ்ச்சிகளாய்க்
கண்டு களிக்கின்றன
அண்டை நாடுகள்;
மென்று விழுங்குகின்றன
உலக ஊடகங்கள்

காக்கை குருவிகளைப்போல்
காஸா தெருக்களில்
சுட்டு வீழ்த்தப்பட்ட
சனங்கள்
செங்குருதிச் சேற்றில்
சிதறிக் கிடக்க
அங்கஹீனம் செய்கிறார்கள்
பாலஸ்தீனத்தை

நாக்கைச் சப்புக்கொட்டி
நரபலி செய்து
நரமாமிசம் உண்ணும்
நயவஞ்சக நரிகள்…
நிலங்களை அரித்தனர்;
நிஜங்களை அழித்தனர்

தட்டிக் கேட்டவரை
அதட்டி வைத்தனர்
அமெக்க அரக்கனின்
ஆதரவோடு
பசித்த வயிறுகளுக்கு
ரவை புகட்டினர் –
துப்பாக்கி ரவை!

அருளாளனை நம்பியோர்க்கு
பொருளாதாரத் தடை
வயிறு பசித்தாலும்
வற்றுமோ வீரம்?
நாவினில் நீர்த்தாகம்
நெஞ்சிலே வேறு தாகம் – அது
நாட்டின் விடுதலைத் தாகம்

மாத்திரை மருந்துகளை
யாத்திரையின்போது கொண்டுசெல்லத்
தடை செய்ததால்
கொசுக்கடிகூட அங்கு
விஷக்கடியானது

தலைவெட்டைச் சற்று
தாமதப் படுத்தி
உலகின்
கண்கட்டும்போது
மின்வெட்டைக் கொண்டு
துன்புறுத்தினர்
கஸ்ஸாவிகளுக்கு
கற்கால வாழ்க்கை
தற்காலத்தில்!

மூச்சுக்காற்றை மட்டும்
முடக்க முடியுமெனில்
கஸ்ஸாவிகள் காலம்
கடந்தகாலம் ஆகியிருக்கும்

ஐநாவில் உறுப்பினர்களாய்
ஆணுமுண்டு, பெண்ணுமுண்டு
ஆனால் அவர்தம் ஆற்றலிலே
அடக்க ஆண்மையில்லை
அரவணைக்க பெண்மையில்லை

வருடக் கணக்கிற்குள்
வற்றிவிடும் இந்த
இம்மைக் கணக்கை
இறைவனிடம் சாட்டி
இருகரம் ஏந்துவோம்
வான்வழி வரலாறொன்றை
மீள்பதிவு செய்து
இஸ்ரவேலை ஆள்வதற்கு
இஸ்லாம் வரும்நாள்
வெகுதூரம் இல்லை!

– சபீர்

oOo

ஊடகப் போராளியான சகோதரி யுவான் ரிட்லியின் ஃபலஸ்தீனப் பயணம் பற்றிய நேர்காணலைப் படிக்க இங்குச் சொடுக்கவும் <யுவான் ரிட்லி>

இதை வாசித்தீர்களா? :   வேரின் பலா - பாரில் உலா!!