
(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை)
(1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம்
‘உ’ என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்
கு, சு, டு, து, பு, று
ஙு, ஞு, ணு, நு, மு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு
ஆகிய தனித்த உகர உயிர்மெய் அனைத்தும் முற்றியலுகரமாகும்.
(1):4:2 ஈரெழுத்து முற்றியலுகரம்
ஒரு சொல் இரண்டு எழுத்துகளில் அமைந்து, முதல் எழுத்து, குறிலாகவும் இரண்டாவது (இறுதி) எழுத்து
கு, சு, டு, து, பு, று
ணு, மு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு
ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.
குறிப்பு:
ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.
காட்டுகள்:
பகு, பசு, படு, இது, அபு, உறு
அணு, கிமு, மனு
சயு, ஒரு, வலு, கவு, வழு, பளு
(1):4:3 மூன்று+ எழுத்து முற்றியலுகரம்
ஒரு சொல் மூன்று எழுத்துகளுடனோ மேற்பட்டோ அமைந்து, அதன் இறுதி எழுத்து
ணு, மு, னு
யு, ரு, லு, வு, ழு, ளு
ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.
குறிப்பு:
ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.
காட்டுகள்:
பண்ணு, பரமு, பவுனு
சரயு, தனியொரு, அதிவலு, தழுவு, ஈரேழு, தெள்ளு
-தொடரும், இன்ஷா அல்லாஹ்.
<முன்னுரை | பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 >