சங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்

ண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள் ஈடுபட்டதில்லை என்றும் முழு யானையை முள்ளுச் செடிகளுக்குள் மறைக்க முயன்று பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வந்த “சங்கி” என்ற அடையாளச் சொல்லை பிரபல பொது ஊடகங்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

எப்போதும் மனம் நிறைய வன்மமும், காழ்ப்பு கலந்த குரோதமும், வெறுப்பை உமிழும் பேச்சுக்களையும், அதனைத் தொடர்ந்து மதக் கலவரங்களையும் நடத்தி வரும் சங் பரிவாரக் கூட்டத்தைச் சார்ந்த நபர்களை “சங்கி” என பிரித்தறிந்து இந்துக்கள் உட்பட ஒட்டு மொத்த சமூக வலையுலகமும் அடையாளம் காண ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து, “சங்கி” வேறு; இந்து வேறு என்ற தெளிவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்பட்டது.

“இந்துக்களுக்காக பேசுகிறோம்!” என்று தம்மை இவர்கள் (சங்கிகள்) அடையாளப் படுத்திக் கொண்டாலும், தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இந்துக்கள் பாதிக்கப்படும்போது செலக்ட்டிவ் அம்னீஷியாவில் சென்று விடுவர். இந்தியாவின் நிஜ சிறுபான்மையினரான பார்ப்பனருக்கு ஏதேனும் இழுக்கு என்றால் வெகுண்டு எழுவர். இதுவே மனிதர்களுக்கும் “சங்கி” களுக்கும் உள்ள வித்தியாசம்.

செய்திகளில் ஏதேனும் ஒரு சம்பவம் அடிபட்டால், பாதிக்கப்பட்டவர் யார் – எந்த சாதி/மதம்? பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் – எந்த சாதி/மதம்? என்பதைப் பொறுத்தே சங்கியின் மனம் துள்ளும்! மனித பண்புகளை விட்டெறிந்து, மத அரசியல் வியாபாரத்தில் கல்லா கட்ட மிருகத்தை விடவும் மோசமான அளவுக்கும் தரமிழக்க தயாராக இருப்பவரே “சங்கி”யாவார்.

சாதி மத பாகுபாடின்றி மனிதர்களுள் ஒருவருக்கொருவர் அன்பையும், நேசத்தையும் பரப்பிக் கொண்டிருக்கும் இடத்தில், தான் ஒரு “சங்கி” என்று பெருமிதம் காட்டுவது, ஒருவரின் வன்மம் தலைக்கேறிவிட்டதை உணர்த்துகிறது.

அவருடைய நெஞ்சில் கொஞ்சமேனும் நேர்மை இருந்தால், கீழ்வரும் சுட்டியின்படி 55% பாஜக எம்.பிக்கள், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை மறுக்க இயலாது.

Mumbai: At the end of the term of the current (16th) Lok Sabha, the Bharatiya Janata Party (BJP) continues to have the highest number of parliamentarians charged with criminal offences.

https://www.indiaspend.com/55-of-lok-sabha-mps-facing-criminal-charges-are-from-bjp/

அம்மட்டோ, பாலியல் வழக்கில் தொடர்புடைய MPகள் அதிகம் உள்ள கட்சியும் சங்கிகளின் பாஜக தான் என்பதற்கும் சான்று உள்ளதே:

பாலியல் வழக்கில் தொடர்புடைய எம்பிக்கள் அதிகம் கொண்ட கட்சி..!!

அதிர்ச்சிப் பட்டியலில் முதலிடம் பிடித்த பாஜக..!!…

மேலும் பிறர் மீது பழி போடுவதற்காக, தன் வீட்டின் மீது தானே குண்டு வீசி கலவர நோக்கம் கொள்பவர்களும் சங்கி மங்கிகளான பாஜகவினரே என்பதற்கு இதோ சான்று:

அவ்வளவு ஏன், தாம் வணங்கும் பிள்ளையார் சிலைக்கே செருப்பு மாலை அணிவித்து கலவரத்தில் குளிர்காய நினைத்தவர்களும் இந்த சங்கி மங்கிகளின் கள்ளக் குழந்தையாகவும் செல்லக் குழந்தையாகவும் உள்ள இந்து முன்னணியினரே என்பதற்குக் கீழ்க்காணும் மின்னிதழ்ச் செய்தியே ஆதாரம்.

“நான் இந்து முன்னணி தீவிர உறுப்பினர். அடுத்த மாதம் 4ம் தேதி சதுமுகையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டம் நடப்பது எனக்குத் தெரிய வந்தது. இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி ஒன்றிய இணை அமைப்பாளர் செல்வக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்தான் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினால் கூட்டத்துக்குத் தடைபோட்டு விடுவார்கள் எனக் கூறினார். அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்று மஞ்சுநாதன் போலீசிடம் கூறினார்.
Read more at: https://tamil.oneindia.com/news/2002/02/19/arrest.html

கர்ப்பிணியின் வயிற்றுக் குழந்தையையும் விட்டு வைக்காத இந்த உலக மகா கொடூரர்களின் உத்தமர் வேஷம் குமட்டவில்லையா ?

இன்னும் தோண்டத் தோண்ட, இத்தகைய “சங்கி” என்பதில் பெருமை கொள்வோரின் மனித விரோதச் செயல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ரத்தக்கறைகளை நிரப்ப இணைய பக்கங்கள் போதாது.

ஆக்கம்: அபூ அஹ்மத்

இதை வாசித்தீர்களா? :   காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி (வாசகர் பார்வை)