
காங்கிரஸ் ஆட்சியின் மீதான வெறுப்பு அலையாலும் அமெரிக்காவின் ஆப்கோ நிறுவனத்தின் கோயபல்ஸ் மாயவலையாலும் ஆட்சிக்கு வந்தார் மோடி.
அதுவரை அவரை வளர்ச்சி நாயகன் என்று ஊதிப் பெருக்கிய ஊடகங்கள் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை என்றும், ராஜபக்சேயையும் நவாஸ் செரிபையும் அடக்கிய வீரர் என்றெல்லாம் துதி பாடி மகிழ்தன.
குஜராத் கட்ச் பகுதியில் அதானி அமைத்துவரும் மின் உற்பத்தி நிலையத்துக்கு பாகிஸ்தான் ஆர்டர் பிடிக்கவும், இலங்கை சம்பூரில் NTPC அமைத்துவரும் மின் நிலைய வேலைகளை விரைவு படுத்தவும்தான் வளர்ச்சி நாயகன் இவர்களை அழைத்தார் என்பது தேசபக்த ஆர்வக் கோளாறுகளுக்குத் தெரியாது. NTPC-யின் குத்தகைதாரர்கள் பலர் குஜராத்தியினர் என்பதை மறந்துவிடவும்.
போகட்டும். இப்போது மத்தியப்பிரதேச அரசு அவரது வீரதீர சாகச வாழ்க்கை வரலாற்றை பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாக அமைக்கப் போவதாக இன்னொரு செய்தி.
மத்தியப்பிரதேசத்தை ஆளும் சிவராஜ் சிங் சவுகான் மோடி அலைக்கு முன்னால் மோடிக்கு எதிராக ஆட்வானியால் முன்னிருத்தப்பட்டவர். அனேகமாக அவர் 2002 கோத்ரா கலவரத்திலும், இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் விவகாரத்திலும், இளம்பெண் ஒருவரை அவருக்குத் தெரியாமல் உளவு பார்த்த விவகாரத்திலும் என்னென்ன எழுதப் போகிறாரோ என்ற விவரம் இதுவரை தெரியாத நிலையில்,
நம் பிரதமர் ட்விட்டரில் இந்த முயற்சியைக் கைவிடுமாறு கருத்து சொல்லி உள்ளார்.
ஆமாம் அவர்தான் பிரதமர் ஆகிவிட்டாரே, இன்னும் எதுக்கு ட்விட்டரில் கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்? செய்யவேண்டாம் என்று அதிகாரப் பூர்வமாக ம.பி அரசுக்குத் தெரிவித்து விடலாமே.. ஒன்னும் புரியல போங்க…
அடிமைத்தன விரும்பிகள் (sycophants) இருக்கும் வரை ஆப்கொக்கள் தேவையே இல்லை…..
-அபூஷைமா