வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 2

Share this:

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.


அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: “நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்” (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை – பக்கம் 147).

நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.

“நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு”(கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் – பக்கம் 75).

கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையாகும் இது.

நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும்.

நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது.

“ஏக ஏவ க்ருஹம் கச்சேத் – ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:
ஃப்ராத்ருஷ்வேகய் புத்ரிண(2-2-16)

இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது” (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி… – டாக்டர். பி.வி. ராமன்குட்டி).

இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

“நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்”. (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு – பக்கம் 120).

“மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்”(19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி – பக்கம் 120).

“இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர். இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்” (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் – பக்கம் 896)

தொடரும் இன்ஷா அல்லாஹ்….

பகுதி 1


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.