சைனீஸ் சிக்கன் ஃபிரை

{mosimage}
தேவையான பொருள்கள்
1/4 தேக்கரண்டி அஜின மோட்டோ ஸால்ட்
1 கிலோ சுத்தம் செய்யப்பட்ட கோழி
1 கப் ஸோயா ஸாஸ்
1/2 கப் வினிகர்
2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மஞ்சள்
2 பெல்லாரி வெங்காயம்
2 டீஸ்பூன் மிளகுத்தூள்
3 மேசைக்கரண்டி கார்ன்ஃபிளவர்
2 மேசைக்கரண்டி மைதா
பொரிப்பதற்கு நெய் அல்லது எண்ணெய்

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: 1000 
தயாராகும் நேரம்: 30 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்) 

 

முன்னேற்பாடுகள்:

கோழியை எலும்புடன் சிறு உருண்டைத்துண்டுகளாக நறுக்கி, அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், ஸாஸ், வினிகர், அஜினமோட்டோ ஸால்ட், உப்பு, மஞ்சள் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

முன்னேற்பாடாக ஊற வைத்தவற்றை குக்கரில் அரை வேக்காடு வேக வைக்கவும். பின்பு கார்ன் ஃபிளவரையும் மைதா மாவையும் தண்ணீர் விட்டுக் கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் தனியே எடுத்து மாவில் தோய்த்து வாணெலியில் காயும்வரை நெய்யில் போட்டு சிவக்கும்வரை இரண்டிரண்டாக பொரித்து எடுத்துச் சூடாக பறிமாறவும்.

ஆக்கம்: அபூ ஸாலிஹா

இதை வாசித்தீர்களா? :   பான் கேக் செய்வது எப்படி?