சத்தியமார்க்கம்.காம் தளத்தின் பக்கங்களைப் பிழையின்றி பிரிண்ட் செய்வது எப்படி?

நமது தளத்தின் ஆக்கங்களை அச்செடுக்கும்போது வலப்புறம் உள்ள சில எழுத்துகள் அச்சாவதில்லை என்று நம் வாசகர் நாஸர் தொடர்ந்து புகாராகப் பதிவு செய்து கொண்டிருந்தார். அவருக்காகவும் எல்லாருக்காகவும் நமது தள ஆக்கங்களை அச்செடுக்கும் முறை, எளிதாகப் படங்களுடன் இங்கு விளக்கப் பட்டுள்ளது.


பொதுவாக, அச்செடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் கவனிக்க வேண்டியவை:

  1. பிரிண்டர் கேபிள் உங்கள் கம்ப்யூட்டருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  2. பிரிண்டருக்கான ஸாஃப்ட்வேர், உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப் பட்டு, சரியாக கான்ஃபிகர் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பேப்பர் ஸைஸ் A4 ஆகவும் நமது தேவைக்குத் தக்கவாறு (Portrait) நீளவாக்காகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  3. பிரிண்டரில் போதுமான இங்க்/ட்டோனர்/பேப்பர் உள்ளதா என்று சோதித்துக் கொள்ள வேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் தளம், Printer Friendly  வசதியினை வாசகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதன் மூலம் தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்ட, விரும்பிய ஆக்கத்தின் பக்கத்தை/பக்கங்களை மட்டும் துல்லியமாக பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

  • முதலில், பிரிண்ட் செய்ய விரும்பும் பக்கத்தின் வலப்புற மூலையில் உள்ள பிரிண்டர் ஐகானைக் கிளிக்கவும்.

  • காட்டாக தோழர்கள்-7 கட்டுரைப் பக்கம் பிரிண்ட் செய்தால் எவ்வாறு அச்சாகி வரும் என்பதற்கான ப்ரீவியூ உடனடியாக ஒரு Pop-Up விண்டோவில் தோன்றும். சரி எனில், Pop-Up விண்டோவில் அம்புக்குறியிட்டுக் காட்டப் பட்டுள்ள பிரிண்டர் ஐகானைக் கிளிக்கி உறுதிப்படுத்தினால் நேரடியாக பிரிண்ட் ஆகத் துவங்கி விடும்.

  • மாற்றங்கள் தேவையெனில், பிரிண்டர் மென்பொருள் வழங்கும் சில கூடுதல் வசதிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம். என்ன செய்தாலும் எழுத்துகள் குறைகின்றன எனக் குறைபடுவோர் தளத்தின் 100% பக்கத்தை 90%ஆகச் சுருக்கியும் அச்செடுக்கலாம்.

 

90% சுருக்கி அச்செடுக்கப்பட்ட தோழர்கள்-7இன் ஒரு பகுதி:

 

பிரிண்டரில் வைக்கப் படும் பேப்பர் அளவும் பிரிண்டரில் கான்ஃபிகர் செய்யப் பட்ட பேப்பர் அளவும் A4 ஆக இருப்பது சிக்கலின்றி அச்செடுக்க உதவும்.

கூடுதல் தகவல்கள்:

  1. காணும் இணைய தளத்தின் முழு வடிவத்தையும் பிரிண்ட் செய்ய விரும்பினால்,  உங்கள் ப்ரவுஸரில் File > Print Preview… என்ற மெனுவினைக் கிளிக்கினால் அச்செடுக்கவிருக்கும் இணைய தளப் பக்கத்தினை முழுமையாகக் காண இயலும்.

  2. சரி எனில் File > Print… என்பதைக் கிளிக்கி பிரிண்ட் செய்யலாம்.

  3. மாற்றங்கள் தேவைப் பட்டால் File > Page Setup.. என்ற மெனுவினைக் கிளிக்கவும்.

  4. அடுத்து வரும் விண்டோவில்  Margin களுக்கான அளவுகளை மாற்றி இட்டு, பிரிண்ட் செய்யவும்.

எளிமையாக அச்செடுக்க வாழ்த்துகள்!

இதை வாசித்தீர்களா? :   நன்றி ஜீவா!