ITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு

ITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு
இன்ஷா அல்லாஹ்…
2012 ஜனவரி 22ம் நாள்
ஞாயிற்றுக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை
கடையநல்லூர் பேட்டை நமாஸ்(NMMAS) பள்ளியில் மாபெரும் மகளிர் சங்கமம்.

http://4.bp.blogspot.com/-JtgqMgsxPSY/TwHxSjEEEEI/AAAAAAAAA_o/td-0rH3JZ20/s1600/itw+conf.jpg

எதற்காக இந்தப் பெண்கள் ஒன்று திரள்கின்றார்கள்?

பலவீனமடைந்து கொண்டிருக்கும் ஈமானைப் புதுப்பிக்கும் பயிற்சிக் கூட்டம் இது.
சரிந்துவிழும் ஒழுக்க விழுமங்களைச் சரிசெய்யும் முயற்சிக் கூட்டம் இது.
தலைக்குனிவு நம் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வுக் கூட்டம் இது.
நாம் யார்? நமது மதிப்பீடுகள் என்ன?

சமூக நலனில் நமது பங்களிப்புகள் என்ன? என்பதைச் சொல்லத்தான் இந்த ஏற்பாடு.

இங்கே கொடிகள் இல்லை.
கோஷங்கள் இல்லை.
ஆர்ப்பாட்டங்கள் இல்லை.
விண் அதிரும் முழக்கங்கள் இல்லை. ஆம்…!
இது வெறுமனே கூடிக்கலையும் கூட்டமல்ல!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? நாம் செல்ல வேண்டிய பாதை எது?
நமது பயணத்தில் ஏன் தடுமாற்றம்?
எத்தனை எத்தனை தடம் மாற்றம்?
மாற்றானோடு ஓடிப்போகும் மடத்தனம் ஏனிங்கு?
ஒழுக்கத்தை உலகிற்குப் போதிக்க வந்த நம் சமுதாயத்திலா இப்படிப்பட்ட சீர்கேடுகள்?
என்ற உள்ளக்குமுறலின் வெளிப்பாடே இம் மாநாடு.

யார் எங்கு போனாலென்ன? ஊர் எக்கேடு கெட்டாலென்ன?என்று வாளாவிருக்க முடியுமா?

தீமைகள் புயலாய் வீசும்போது நாம் வேடிக்கை பார்க்க முடியுமா?
தீமைகள் தீயவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழித்து நாசமாக்கிவிடும்.

“எந்த ஃபித்னாவின் – குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாதோ அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டனையளிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (திருக்குர்ஆன் 8:25)

பெருகும் இப் பெருந்தீமையைத் தட்டிக்கேட்க நாதியற்றுக் கிடக்கின்றோமா? இல்லை… இல்லவே இல்லை.

‘அநீதி வேரோடும்,வேரடி மண்ணோடும் சாய்ந்து வீழும். ஒழுக்கம் வெல்லும்.ஒழுக்கக்கேடுகள் உடைந்து நொறுங்கும்’என்பதை உரத்துச் சொல்லத்தான் பெண்கள் மாநாடு.
இம் மாநாட்டில் ஒழுக்க மாண்புகளைப் பெரிதும் விரும்பும் பெண்கள் ஒன்றுதிரள இருக்கின்றார்கள்.
கவலை தோய்ந்த ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை இம் மாநாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.கடமை உணர்வு கொண்ட கணவர்கள் தம் மனைவிகளை கலந்து கொள்ளச் செய்வார்கள்.

இம் மாநாட்டை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ் மாநிலத்தலைவர் A.ஷப்பீர் அஹ்மத் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்கள்.

டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத், மெளலவி ஹனீஃபா மன்பஈ, மெளலவி முஹம்மத் நூஹ் மஹ்ழரி, ஃபாத்திமா ஜலால் ஆகியோர் உரையாற்றுகின்றார்கள்.


‘தீமைகள் புயலாய் வீசும்போது’என்ற மகளிர் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

பெண்கள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க முடியும்.

உணவுக்கட்டணம் ரூ. 20/-
முன்பதிவு அவசியம்.

இதை வாசித்தீர்களா? :   காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்?

சமுதாய மறுமலர்ச்சிக்கான இந்த முன்முயற்சியில் பெண்கள் கலந்து பயன்பெற வாஞ்சையோடு அழைக்கின்றோம்.

இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை (ITW)
கல்தைக்கா வளாகம்
பெரிய தெரு,கடையநல்லூர்-627 751
திருநெல்வேலி மாவட்டம்

முன்பதிவிற்கு: தொலைபேசி எண்: +91 7845655805 

தகவல்: சகோதரர் அன்ஸார்