தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?

Share this:

லைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா?

‘லிபர்டி தமிழ்’ யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு ‘இஸ்லாமியர்கள் தமிழர்களா?’. தலைப்பு, பொதுவாக இருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரையும் உள்ளடக்கினாலும், அவர் குறிப்பிடுவது தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களைப் பற்றித்தான் என்பது தெளிவு. அவருடைய பதிவில் அவருக்குத் தெரிந்த சில ‘தமிழ் முஸ்லிம்’களைக் குறிப்பிட்டிருந்தாலும் பதிவில் பல தகவல்கள் விடுபட்டுள்ளன.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் முதல், அண்மையில் (2017) மறைந்த அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா வரை பன்னூற்றுக் கணக்கான தமிழ் முஸ்லிம்கள், தம் தாய்மொழியாம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

தமிழகத்தில் உருது பேசும் சொற்ப ஆற்காட்டு முஸ்லிம்கள் மற்றும் விடுதலைப் போரின் வீர மங்கை வேலுநாச்சியின் உதவிக்காக மைசூர் மன்னர் ஹைதர் அலி அனுப்பிவைத்த 10,000 வீரர்களுள் போருக்குப் பின்னர் இங்குத் தங்கிவிட்ட மிகச் சில உருது முஸ்லிம்கள் தவிர்த்து, இங்கு வாழும் அனைத்து முஸ்லிம்களும் தமிழர்களே!

“இந்த மண்ணின் மைந்தர்கள்தாம் தங்களின் பிறப்பின் அடிப்படையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வெனும் அழுக்கை அகற்றிக்கொள்ள அவர்களின் சமய நெறியை மாற்றிக் கொண்டனர்” என்பதாக விவேகாநந்தர் கூறுகின்றார்:

“முஹம்மதியர்களின் வருகை, ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. ‘வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது’ என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை”

[The Future of India The Complete Work of Swami Vivekananda Advaitha Ashram, Calcutta 14].

வரலாற்றாசிரியர் செ.திவான் அவர்கள் எழுதிய நூல்களுள் ஒன்றின் பெயர் “விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்

இஸ்லாமியர் தமிழர்களா? எனும் கேள்வி உலக முஸ்லிம்களைப் பற்றியதல்ல; மாறாக, ‘தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?’ என்பதுதான். இது, காலத்தின் கோலமேயன்றி வேறென்ன?


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.