பா.ஜ.க வையே கலைத்து விடலாம்!

ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்தியா, “70 வயதுக்கு மேற்பட்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்எனப் பேசியுள்ளார்.

அவர் வேண்டுகோள் படி, பா.ஜ.க,வில் 70 வயதுக்கு மேற்பட்ட வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்களை பா.ஜ.க,விலிருந்து ஓய்வு பெறச் செய்து விட்டால், மீதம் உள்ள தலைவர்களில் பெரும்பாலோர் தற்போதுள்ள எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தான். அத்வானி, வாஜ்பாய் போன்ற 70 வயதுக்கு மேற்பட்ட சில தலைவர்கள் இன்னமும் இருப்பதால் தான், அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு.

அவர்களும் அதிலிருந்து விலகிக் கொண்டால் (பா.ஜ.க என்றாலே), லஞ்சம் வாங்கி பார்லிமென்ட்டில் கேள்வி கேட்டவர்கள், லட்சக்கணக்கில் பணம் வாங்கி போலி பாஸ்போர்ட்டில் பெண்களை கடத்தியவர்கள் என்ற பட்டியல் தான் மக்கள் நினைவுக்கு வரும். “பா.ஜ.க.வில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓய்வெடுக்க வேண்டும்” எனக் கூறுவதை விட, “பா.ஜ.க. என்ற கட்சியையே கலைத்து விடுங்கள்என ஆர்.எஸ்.எஸ். வைத்தியா கூறி இருந்தால், சரியாக இருந்திருக்கும்.

அது சரி! இப்படிக் கருத்து கூறும் வைத்தியா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனுக்கு வயது என்ன? 60க்கும் குறைவா? இல்லையே!

டாக்டர்.கே. தங்கமுத்து, பொள்ளாச்சி. (22/5/2007 தினமலர், இது உங்கள் இடம் பகுதியிலிருந்து)

இதை வாசித்தீர்களா? :   கருப்பு அங்கிகளுக்குள் காவிப்படை