
அஸ்ஸலாமு அலைக்கும்,
கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே,
அல்லாஹ்வின் பேரருளால்…
சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டினம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில்
அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி
வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 150 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் 6 கோடி ரூபாய் திட்டத்தில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம். ஒரு பங்கு 4 இலட்சம் ரூபாய் என வரையறுக்கப்பட்டுள்ளது.
சகோ. CMN சலீம் அவர்கள் குவைத் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08-04-2012இல் துபைக்கு வரவிருப்பதால், அமீரகத்தில் வாழும் சகோதரர்கள் ‘அன்னை கதீஜா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி’யைப் பற்றிய முழு விபரங்களையும் பங்கு சேர்க்கை பற்றியும் அவரிடம் நேரடியாகக் கலந்து பேசலாம்.
நம்முடைய கல்விமுறை இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும், மார்க்கக் கல்வியை இறைவன் வகுத்துத்தந்த நெறிப்படிப் பேணி வளர்க்க வேண்டும், இறைவன் நாடினால் இந்தியாவில் நாளைய வரலாறு நம்முடையதாக மாறும்; தங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் தருமாறு கேட்டு கொள்கிறோம்.
|
|
– எம். இம்ரான் கரீம்
அமீரக மக்கள் தொடர்புச் செயலாளர்
சமூகநீதி அறக்கட்டளை