சத்தியமார்க்கம்.காம் > கதை சத்தியமார்க்கம்.காம் - சத்தியம் வந்தது... அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன்-17:81) http://www.satyamargam.com/story/ Fri, 10 Feb 2012 09:43:48 +0000 Joomla! 1.5 - Open Source Content Management ta திருந்தினால் திரை விலகும்...! http://www.satyamargam.com/1226 http://www.satyamargam.com/1226 தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.    

]]>
admin@satyamargam.com () கதை Fri, 22 May 2009 04:11:45 +0000
இன்னொரு வாய்ப்பு! http://www.satyamargam.com/1199 http://www.satyamargam.com/1199 அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா?

 

போர்வைக்குள்ளே சூரியன் புகுந்ததுபோல் இருந்தது. முகத்திலிருந்து போர்வையை விலக்கினேன். என்னைக்கும் போலத்தான் எனக்கு அன்னைக்கும் விடிஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை.

இன்னொரு வாய்ப்பு!

]]>
admin@satyamargam.com () கதை Sun, 05 Apr 2009 14:23:57 +0000
மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை! http://www.satyamargam.com/1163 http://www.satyamargam.com/1163

அன்று ஞாயிற்றுக்கிழமை.

நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான்.

விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி சந்தோஷம். மற்ற  நாட்களில் மதரஸாவிற்குச் சென்று விடுவார்கள்.

லொக்... லொக்... லொக்... லொக்... அந்த அறையிலிருந்து இருமல் சத்தம் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது.


மூச்சுத்திணறலுடன் தாய் ஜமீலா படும் அவஸ்தையைக்கண்டு நஜீரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. எவ்வளவு  வைத்தியம் செய்தும் இந்தப்பாழாய்ப்போன 'இருமல்' மட்டும் ஓய மாட்டேங்குதே; தொடர்ந்து படுக்கையில் கிடத்திவிட்டதே!

மருத்துவர் கூறியது அவன் காதில் ஒலித்தது. "நஜீர்,உங்கம்மா, உழைப்புக்கு ஏற்றார்போல் வேளா வேளைக்கு சாப்பிடாமல்  இருந்ததால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிட்டது. மிகவும் பலகீனமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லே. எலும்பு  தேய்மானமும் அதிகமாக இருக்கு. இனி உங்க தாயுடைய வாழ்க்கை உங்க கையில்தான் இருக்கு. சத்தான ஆகாரம் கொடுத்து  ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்."

"வாப்பா!, வாப்பா!"... தந்தையின் சிந்தனையை கலைத்தன இரு குழைந்தைகளும்.

சமையல் அறையில் பாத்திரம்பண்டம் உருட்டும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, "ரேஷ்மா, இங்கே வாடி,"  அம்மாவின்  கூப்பாடு அடங்குவதற்குள் "ஏம்மா", என  ஓடிப்போய் நின்றாள். தாயை நன்கு புரிந்து வைத்து இருந்தாள். கூப்பிட்ட குரலுக்கு  போகலைன்னா அடுத்தது தர்ம அடிதான்னு அவளுக்கு நன்றாகத் தெரியும்.

"இந்தா இந்த சாயாவைக் கொண்டுபோய் அந்தக் கிழவியிடம் கொடு", புரியாமல் நின்ற மகளிடம் "ஏண்டி இன்னும் நிக்கிறே?  வயசு  ஏழு முடியப்போகுது, இன்னும் எதெற்கெடுத்தாலும் முழிச்சிக்கிட்டே இரு. சொல்றதைப் புரிஞ்சிக்கிற புத்தியே இல்லே. இங்கே  பாருடி, இருமி இருமி தூங்கவிடாமே உயிரை வாங்கிக்கிட்டே இருக்கே உன் அருமை பாட்டி அதுக்கிட்டே போய்  கொடு". ரேஷ்மாவுடன் தம்பி தாவூதும் பின் தொடர்ந்தான் "பாட்டி... பாட்டி..., இந்தாங்க சாயா, சூடா குடிங்க". பேரப்பிள்ளைங்களைப்  பார்த்ததும் அசதியிலும் ஒரு ஆனந்தம். தாவூத் கஷ்டப்பட்டு கட்டிலின் மீது ஏறி, "பாத்தி, வலிக்குதா என்று கேட்டு தைலத்தை  எடுத்து தன் பிஞ்சு கரங்களால் ஜமீலாவின் தொண்டையைத் தடவி விட்டான். "அக்கா பாத்தியா? வாப்பாவும் இப்பிதான் செய்வாங்க. இல்லே பாத்தி?". ஜமீலா பேரனின் பிஞ்சுக்கரங்களை தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். மழலைச் சொற்களால் பேரன் தன் மீது காட்டும் பரிவையும் பாசத்தையும் கண்டு பூரித்துப் போனாள்.

"யா அல்லாஹ்! என் பேரப்பிள்ளைகளுக்கு நிறைந்த ஆயுளைக்கொடு", என்று துவா கேட்டாள்.

"பாட்டி நாங்க ஓதிட்டு வரோம்; அப்புறமா கதை சொல்லணும் என்ன!"...

"சரிடா கண்ணுங்களா!" சிட்டாய் பறந்தனர் இருவரும்.

அலுவலக கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்த நஜீர், "ரேஷ்மா, பாட்டி சாயா குடிச்சிட்டாங்களா?"

"பாட்டி கஷாயம் கேட்டாங்களாம்; அம்மா சாயா கொடுத்துட்டாங்களாம்", சலிப்போடு சொன்னாள் ரேஷ்மா.

"அப்படியா! கதீஜா... கதீஜா... இங்கே வா"

"ஏன் ஏலம் விடுறீங்க, அடுப்படியில் வேலையாய் இருக்கேன் இல்லே"

"அடுப்படின்னா வேலைதான் இருக்கும். நீ என்ன கபடி ஆடிட்டு இருக்கேன்னா சொல்றேன்"

"இதுலே ஒண்ணும் குறச்சல் இல்லே". எள்ளும் கொள்ளும் வெடித்தது முகத்தில்.

"கணவன் கூப்பிட்ட குரலுக்கு இதமா பேச கத்துக்க"

"முதல்லே எதுக்கு கூப்பிட்டீங்க... சொல்லுங்க".

"அம்மா கஷாயம் கேட்டாங்களாமே, ஏன் போட்டுக் கொடுக்கலே?"

"ஹூக்கும்,.... அதுக்குள்ளே போட்டுக்கொடுத்துட்டாங்களா? கிழவிக்கு குசும்பு ஜாஸ்திதான்".

"இதப்பாரு கதீஜா, அவங்க என்னைப்பெத்தவங்க; வயசானவங்க! மரியாதக்கொடுத்துப் பேசு, அவர்களுக்கு பணிவிடை  செய்யறதுதான் நம்முடைய முதல் கடமை

உன்னை அவங்க  மருமகளாகவாப் பார்த்தாங்க; மகளாய்த்தானே பார்த்தாங்க! நீ கேட்டதை வாங்கிக் கொடுத்து, அலங்காரம்  செய்து அழகுப்பார்த்தாங்க. உன்னை உட்கார வச்சி விதவிதமாக சமைச்சுப் போட்டாங்க. தாயில்லாத குறையே தெரியாம பார்த்துட்டாங்க. இப்போ அவங்களுக்கு  முடியலே; நாம  காட்டும் அன்பான பேச்சும், அரவணைப்பும் தான் அவர்களை வாழ வைக்கும். இதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கிறே?"

"சரி .. சரி புராணம் பாட ஆரம்பிச்சிடாதீங்க. கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு. நீங்க சொல்றதை மட்டும் நான்  கேட்கணும், ஆனா நான் சொல்றதைமட்டும் கேட்காதீங்க", சொல்லி விட்டு விருட்டெனெ நகர்ந்தாள். "யா ரஹ்மானே! இவளுக்கு எப்போதான்  புத்திவரப்போகுதோ".

"என்ன வாப்பா, எங்களை ஓதச்சொல்லிட்டு நீங்களும் அம்மாவும் என்னென்னவோ பேசிக்கிறீங்க, ஒண்ணுமே புரியலே!"

"இல்லம்மா கண்ணுங்களா, நீங்க ஓதுங்க". பிள்ளைகளின் முன்னால் பெற்றோர்கள் சண்டைப் போட்டுக்கொள்வது எவ்வளவு  முட்டாள்தனம் என தன்னையே நொந்துக்கொண்டான் நஜீர்.

***************

"கதீஜா... கதீஜா..." அழைத்துக்கொண்டே வந்தாள் தோழி நஸீரா. முற்றத்தில் ரேஷ்மாவும் தாவூதும் விளையாடிக்கொண்டு  இருந்தனர்.

"அம்மா குளிச்சிட்டு இருக்காங்க ஆன்ட்டி, உட்காருங்க, வந்திடுவாங்க".

ஈர முடியை முடிந்துக்கொண்டே வந்த கதீஜா, "வா நஸீரா, என்ன இன்னிக்கு அலங்காரம் எல்லாம் பலமா இருக்கு! ஏதாவது விசேஷமா?

"அவரு என்னை ரெடியா இரு, சீக்கிரம் வந்துடறேன்; ஷாப்பிங் போயிட்டு அப்படியே ஹோட்டலுக்கும் போயிட்டு வரலாம் என்றார்,  அதான்".

"அது சரி நீ என்ன முடிவு எடுத்திருக்கே? உன் புருஷன் என்ன சொல்றாரு?"

"நான் எவ்வளவோ சொல்லியும் பார்த்துட்டேன்; அழுதும் பார்த்துட்டேன்; ஒண்ணும் நடக்கலே. அம்மா மேலே உயிரையே  வச்சிருக்காரு, வாய் திறந்தாலே புலி போலப் பாய்கிறார். என்ன செய்றது?"

"எம்புருஷனும் முதல்லே அப்படித்தான் இருந்தாரு. 'அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்' பிடிவாதமாக இருந்து சாதிச்சிட்டேன்  இல்லே!. இப்பப்பாரு வாழ்க்கை வானம்பாடி பறவை போல ஆனந்தமாக ஓடிட்டு இருக்கு. இந்த வயசிலே அனுபவிக்காம பின்னே எப்போ அனுபவிக்கிறது!"

நஸீரா சொல்லச்சொல்ல கதீஜாவுக்கும் 'ஆசை' இறக்கைக்கட்டி பறந்தது.

"சரி கதீஜா நான் வரேன், அவர் வந்துடுவாரு", தான் வந்த வேலை முடிந்தது போல நகர்ந்தாள் நஸீரா. கதீஜாவிடம் இருந்து பெருமூச்சு ஒன்றுதான் பதிலாக வந்தது.

********************

இரவு சாப்பாடு முடிந்ததும் தாய்க்குக் குடிக்க பால் கொடுத்து, வேண்டிய பணிவிடை செய்துவிட்டு வந்தான் நஜீர்.

திடீரெனெ ஞாபகம் வந்தவனாய், "கதீஜா, மீரான்பாய் வீட்டுக் கல்யாணம் எப்போது?" எனக்கேட்டான்.

"நாளைக்கு இராத்திரி கல்யாண மண்டபம் போயிடுவாங்க, அடுத்த நாள் காலையில் நிக்காஹ்".

"ஓஹோ, அப்போ கண்டிப்பா போகணும் நீ தயாரா இரு, நான் சீக்கிரமாக வந்துடுறேன்".

"ஆமா, நான் பிக்கல் பிடுங்கல் இல்லாத ஆளு பாருங்க, கூப்பிட்டதும் வாரிச்சுரிட்டிகிட்டு வரத்துக்கு... உங்கம்மாவை விட்டுட்டு  நான் எங்கு வர. இதுக்குதான் நான் சொல்றதைக் கேட்டால் எந்த கஷ்டமும்  இல்லே. உங்களுக்குதான் ஏற மாட்டேங்குதே... என்ன செய்ய?"

"அம்மா தாயே! நீ  வரலைன்னாலும் பரவாயில்லே; பழைய பல்லவிகளைப் பாட ஆரம்பிச்சிடாதே. நீ அம்மாவைப் பார்த்துக்கோ; நான் போயிட்டு வந்துடுறேன்".

படுக்கையை விரித்து உறங்கத்தொடங்கினான்.

"நம்ம  வாயாலேயே வெளியே போறதைக் கெடுத்துக் கொண்டோமே..." என முணுமுணுத்துக் கொண்டாள் கதீஜா.

"நஜீர்... நஜீர்..." சன்னமாக தாய் கூப்பிடும் குரல் கேட்டு, இதோ வந்துட்டேம்மா, என ஓடோடிச் சென்றான். பிள்ளைகளும் பின் தொடர்ந்தனர்.

"என்னம்மா, என்ன செய்யுது?" பரிவோடு கேட்டான்  நஜீர். தாயின் கைகால்களை நீவி விட்டான்; நெட்டி எடுத்தான். வாஞ்சையோடு  தாயின் தலையை வருடினான், தாயின் நிலைக்கண்டு கண்கலங்கினான், தாய் கவனித்து விடுவார்களோ என கண்ணீரை உள்வாங்கிக் கொண்டான்.

"என்னவோ சொல்ல வந்தாயே, தயங்காமல் சொல்லும்மா!"

"கொஞ்ச நாளாவே நீயும் கதீஜாவும் பேசிக்கொள்வதும் ஒருவருக்கொருவர் மனச்சங்கடப்படுவதும் எனக்கும் தெரியும். நீங்க இருவரும் சந்தோஷமாக  இருந்தால்தானே என் வயிறு  குளிரும். அவளும் சின்ன பொண்ணுதானே! அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குமில்லே! அவளுக்கு என்னைப் பராமரிக்கிறது கஷ்டமாக இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். மருமக இஷ்டப்படி கொஞ்ச நாளைக்கு என்னைக்கொண்டு போய் விட்டுடுப்பா! மனச்சங்கடப் படாதே."

"என்னம்மா! சொல்றீங்க, அதுதான் புரியாம பேசிக்கிட்டு இருக்குதுன்னா நீங்களுமா! வாப்பா இல்லாமே என்னை வளர்க்க எவ்வளவு  சங்கடங்களை அனுபவிச்சீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை முதியோர் இல்லத்திலே விடும் அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரனும் இல்லே; நீங்க அனாதையும் இல்லே. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்குதுன்னு ரசூல் (ஸல்) சொல்லி இருக்காங்க, என்னை  அல்லாவுக்கு முன்னே பாவியாக ஆக்கிடாதீங்க!, என் சொர்க்கத்துக்கான பாதையே இந்த மண்ணில் நீங்க தாம்மா" நஜீரின் குரல்  தழுதழுத்தது...

இடையே குறுகிட்டு ரேஷ்மாவும் தாவூதும் "வாப்பா, பாத்தி எங்கே போறாங்க? பாத்தி பாவம்பா, பாத்தி எங்களுக்கு வேணும்பா, பாத்தி எங்கேயும் போக சொல்லாதீங்க... அம்மா கெட்ட அம்மா, எப்பவும் பாத்தியைத் திட்டறாங்க." தாவூத் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதான். ரேஷ்மாவின் முகம் சுருங்கி வாடி இருந்தது. உதடு துடித்தது.

"அம்மா, பார்த்தீங்களா... இந்தப் பிஞ்சு உள்ளங்களின் தவிப்பை! இவர்களை விட்டு உங்களால் இருக்க முடியுமா? அல்லாவின் துவா பரகத்தால் கதீஜாவும் உங்களைப் புரிஞ்சுக்குவா. நம்மை 'மவுத்' ஒன்று தான் பிரிக்கணும். அதுவரை நான் உங்களைப் பிரிய மாட்டேன். நிம்மதியா கவலை இல்லாமே படுத்து தூங்குங்க. இஷா தொழுதுட்டு வந்து விடுகிறேன்" எனக் கூறிவிட்டு பள்ளியை நோக்கிச் சென்றான் நஜீர்.

****************

தந்தையின் திடீர் வருகையைக்கண்டு வியப்படைந்தாள் கதீஜா.
"அஸ்ஸலாமு அலைக்கும்", வாங்க வாப்பா".

"வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, நல்லா இருக்கீயாம்மா?"


"அல்ஹம்துலில்லாஹ்! நீங்க எப்படி இருக்கீங்க வாப்பா? தம்பி, மருமக எல்லாம் சொளக்கியமா?"
"அல்ஹம்துலில்லாஹ்!"

தாத்தாவைப் பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் ஓடி வந்தனர். இருவரையும் வாரி அணைத்து முத்தமிட்டு விளையாடச்சொல்லி அனுப்பி வைத்தார் உமர்  ஷரீப்.

"கதீஜா, இதுநாள் வரை உன் மேலே ஒரு குறையையும் சொல்லாத மாப்பிள்ளை நேற்று இஷா தொழுகை முடிந்ததும் மனம் வருத்தப்பட்டு பேசிய அவருடைய பேச்சிலிருந்து அவர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என புரிந்துக்கொண்டேன். அவருடைய இந்த நிலைக்குக் காரணம் நீதான். தாயில்லாப் பிள்ளையாகிய உனக்கு ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் என்று  ஐவேளை தொழுகையிலும் கண்ணீர் மல்க துவா கேட்டு வந்தேன். என் வேண்டுதலை  அல்லாஹ் நிறைவேற்றி விட்டான்.

பெற்றோரைப் பராமரித்து, உடன் பிறந்தவர்களை அரவணைத்து, உற்றார் உறவினர்களை ஆதரித்து, நண்பர்களை நாடி, நல்லவர்களைப் போற்றி தீன்வழி நடந்து, நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்பவனே உண்மையான முஸ்லிம். நம்முடைய  மார்க்கமும் அதைத்தான் கூறுகிறது. இத்தகைய எல்லா குணங்களுமுள்ள கணவனை அடைய நீ நல்ல அமல் செய்திருக்க வேண்டும்."

கணவனுடைய கடமைகளைத் தன் கடமையாக ஏற்று வாழ்க்கை நடத்துபவளே உண்மையான மனைவி. அவருடைய தாய் உனக்கும்  தாய் தானே! அவர்களை வெறுத்து பேசலாமா? கணவன் மனம் புண்பட நடந்துக்கொள்ளலாமா? உன் தம்பி மனைவி என்னை ஒதுக்கினால் நீ தாங்குவாயா? தாய் பிள்ளைகள் என்பது இருவருக்கும் பொதுதானே!"

தந்தையுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தில் சாட்டைகளாக விழுந்தன. பதில் அளிக்க முயலும்போது புரைஏறி நீண்ட இருமலாக வெளிவந்தது.

சத்தம் கேட்டு தாவூத் வேகமாக அம்மாவிடம் வந்தான். கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டான்; ஆள்காட்டி விரலை உயர்த்தி, "பாத்தியா! நீயும் பாத்தி மாதிரியே லொக்... லொக்.. செய்யறே. பாத்தியைப் போகச்சொன்னே இல்லே, நீ முதல்லே அங்கே போ. தாத்தா, அம்மாவைப் போய் விட்டுட்டு வா...". ஏதோ அலுவலக முதலாளி போல சொல்லிவிட்டு துள்ளிக்குதித்து ஓடிவிட்டான்.

அந்த ஒரு வினாடி, மகனுடைய வார்த்தையில் இருந்த உறுதியையும் ஆழ்ந்த பார்வையையும் கண்டு நிலை குலைந்துப் போனாள் கதீஜா. அடுத்து வந்த இருமலும், 'சோடா பாட்டிலில் சிக்கிய குண்டு போல' தொண்டைக்குழியிலேயே நின்று விட்டது.

பேரனின் சொற்களைக்கேட்ட உமர் ஷரீப்  சிலிர்த்துப் போனார். "யாரப்பில் ஆலமீன், உன்னுடைய பெருமைக்கு எல்லையே இல்லை".

"பார்த்தியாம்மா, இறைவன் எவ்வளவு சீக்கிரம் உன் மகன் மூலமாக உனக்கு பாடம் புகட்டிவிட்டான். ஒன்றுமே அறியாத அந்தப்  பிஞ்சு உள்ளத்தில் உன்னுடைய நடவடிக்கை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது பார்த்தியா?"

நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும், 'பிள்ளைகளுக்கு நாம் வாழும் வாழ்க்கை முறையும் ஒரு படிப்பினைதானம்மா!

உன்னைச்சொல்லி தப்பில்லை. என் மேலும் தப்பு இருக்குதுன்னு நினைக்கிறேன். நீ தாயின் பராமரிப்பில் வளர்ந்து இருந்தால், நல்லது கெட்டது சொல்லி, யார் யாரிடம் எப்படி நடந்துக்கொள்ள  வேண்டும் என அறியுரை வழங்கி இருப்பாள். நம் இருவருக்குமே அந்த கொடுப்பினை இல்லே".

தந்தைக் கலங்குவதைக்கண்டு நெகிழ்ந்துப் போனாள் கதீஜா. "வாப்பா, வருத்தப்படாதீங்க. நான் தான் மற்றர்வகளைப் போல ஆடம்பர வாழ்க்கையிலும் துனியாவின் மோகத்திலும் நம்ம மார்க்க நெறிமுறைகளை மறந்து மனதை அலைபாய விட்டு, மறுமை வாழ்க்கையை  மறந்து விட்டேன். அல்லாஹ்வை மறந்து பெரும் பாவத்திற்கு ஆளாகி இருப்பேன். என் மகன் என் கண்களைத் திறந்து விட்டான். மன்னிச்சிடுங்க வாப்பா."


"ஆணோ, பெண்ணோ, ஆணோ, பெண்ணோ, நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச்செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்." (அல்குர் ஆன் 016:097) என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறி உள்ளான்.
"மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டால் இறைவன் மன்னிப்பானம்மா! நீ மறுமை வாழ்க்கைக்கு இனி நல்ல அமல் செய்யம்மா. கணவனிடம் அன்பாக நடந்துக்கொள். உன் மாமியாருக்குச் செய்யும் பணிவிடை உன் தாய்க்குச் செய்வதாக நினைத்துக்கொள். இல்லறத்தை நல்லறமாக நினைத்து நடத்தும்மா.

கனத்த இதயத்தோடு இங்கே வந்தேன்; இப்போது நிறைந்த மனதோடு செல்கிறேன். ஆண்டவன் துணை இருப்பான். அசருக்கு நேரம்  ஆயிடுச்சி, இன்னொரு நாள் வந்து சம்பந்தியைப் பார்க்கிறேன்'' குளிர்ந்த மோர் சாப்பிட்டு, குளிர்ச்சியாகக் கிளம்பினார் உமர் ஷரீப்.

*******************

மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த  நஜீரின்  காதுகளில் மனைவி கதீஜா இனிய குரலில் குரான் ஓதும் குரல் கேட்டது. ஊதுபத்தி மணம் வீடு முழுவதும் நிறைந்து இருந்தது. இரு கைகளையும் ஏந்தி, "யா அல்லாஹ், நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அளித்து விட்டாய்". நன்றி கூறினான் நஜீர்.

தாயின் அறையை நோக்கிச் சென்றான். ஜமீலாவின் முகத்தில் என்றுமில்லாத பூரிப்பு. "கதீஜா என்னைத் தலைக்குக் குளிக்க வச்சி சாம்பிராணி புகை காட்டி சீவி முடித்து விட்டாளப்பா. கஷாயம் வைத்துக் கொடுத்தாள். நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன் நஜீர், எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டதுன்னு மட்டும் புரியவே இல்ல, கதீஜாவுக்கு அல்லாஹ் எல்லா பாக்கியங்களையும் வழங்கட்டும்", மனம் குளிர்ந்துப் போய் கூறினாள் ஜமீலா.

நஜீர் முகத்தில் புன்னகை, அவனுக்குத் தெரியும் யார் காரணம் என்று!

கணவன் வந்த சுவடு அறிந்து தேநீர் கொண்டு வந்தாள் கதீஜா. கையில் வாங்கிய நஜீர் மனைவியைப் பாசமுடன் அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பிலிருந்த கதீஜா, "இந்த மன நிறைவை எங்களுக்கு எப்பொழுதும் வழங்குவாயாக, யா அல்லாஹ்!" என்று இறைஞ்சினாள்.

"நீ உன் தாய்க்குச் சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு" என்ற அண்ணல் நபி (ஸல்) சொல் திரும்ப திரும்ப நஜீரின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.


ஆக்கம் : கல்லை நூர்ஜஹான் ரஹீம்


]]>
admin@satyamargam.com (AA) கதை Mon, 16 Feb 2009 10:47:48 +0000
அவன் போட்ட கணக்கு! http://www.satyamargam.com/1091 http://www.satyamargam.com/1091

அது ஃபஜ்ரு நேரம்!

பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது. பாங்கு சொல்லும் அப்துல்லாவின் அந்தக் கணீரென்ற குரல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களையும் தட்டி எழுப்பி விடும்.

மரியம் 'ஃபஜ்ரு'த் தொழுகையை முடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இப்ராஹீம் சாஹிபின் வீட்டை அடைந்தாள். அடுக்களையில் ஆயிஷா, சுவையும் மணமும் கலந்த தேநீர் தயாரித்துக்கொண்டு இருந்தாள். அவளது கைப்பக்குவத்தில் தயாரிக்கும் தேநீருக்கு ஒரு தனிச்சுவை உண்டு.

"அக்கா வந்துட்டீங்களா?, இன்னும் காணோமேன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். சீக்கிரம் நாஷ்டா ரெடி பண்ணுங்க, அவரு வெளியே கிளம்பனும்".


"இதோ ஒரு நொடியில் தயாராயிடும்". பம்பரமாகச் சுழன்றாள் மரியம். வேலைக்கு அமர்த்தப்பட்டப் பெண்ணாக இருந்தாலும் தாய்-பொண்ணு பாசம்தான் இருவருக்கும்.

தும்பைப்பூ போன்ற இடியாப்பம், தேங்காய் பால், ஆட்டுக்கால் பாயா, மல்லிகைப்பூ இட்லி, கோழிக் குருமா, நெய் தோசை, பொதினா சட்டினி அனைத்தும் டைனிங் டேபிளை அலங்கரித்தன.

ஆயிஷா கணவனுக்குப் பார்த்து பார்த்து பறிமாறிக்கொண்டு இருந்தாள். "என்னங்க, இன்றைக்கு வெள்ளிக்கிழமை. எந்த வேலையாக இருந்தாலும் 'ஜும்மா' தொழுகையை மறந்திடாதீங்க! மறக்காம தொழுகையில கலந்துக்குங்க!"

"என்ன ஆயிஷா, நான் இன்றைக்கு வியாபார விஷயமாக ஒருத்தரை சந்திக்கனும். ரொம்ப நாளைக்கப்புறம் இன்றைக்குத்தான் அப்பாயிம்மெண்ட் கிடைச்சி இருக்கு. கைநழுவி போயிடுச்சின்னா பெரிய நஷ்டமாகி விடும். முயற்சி செய்றேன். நீதான் 24 மணி நேரமும் ஆண்டவன் பின்னாலேயே இருக்கிறேயே. 'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்'ன்னு சொல்லுவாங்க. உன் இபாதத்தில் எனக்கும் பங்கில்லையா?", கண்சிமிட்டி குறும்பாகச் சிரித்தார் இப்ராஹீம் சாஹிப்.

"ரொம்ப தப்புங்க! இப்படியெல்லாம் பேசி ஆண்டவன் கோபத்திற்கு ஆளாகிடாதீங்க. முஸ்லிமா பொறந்த ஒவ்வொருவருக்கும் 'தொழுகை' கடமைங்க".

"சரி சரி விடு. அவசரமா போகனும். வந்து பேசிக்கலாம்." கிளம்பி விட்டார் இப்ராஹீம்.

மரியம் ஆயிஷாவுக்காகப் பரிதாபப்பட்டாள். "இந்தப் பொன்ணும் எவ்வளவோ சொல்லிப்பாக்குது. தினமும் இதற்காகவே இரவு கண்விழித்து தஹஜ்ஜுத் தொழுது தம் கணவர் திருந்திடவும் ஈமானோடு வாழ்ந்திடவும் அல்லாஹ்விடம் மன்றாடுகிறது. என்ன செய்றது. இவரு பொறந்ததுமே அத்தாவும் அம்மாவும் ஆக்ஸிடண்ட்லே மவுத் ஆயிட்டாங்க. வளர்த்தவங்களும் சரியில்லே, சேர்க்கையும் சரியில்லே. ஓதிப்படிச்ச பொண்ணை கட்டிவச்சா சரி ஆகிடும்னு நினைச்சாங்க. முடியலே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அவருக்கும் ஒரு நேரம் வரும்". மனசுக்குள்ளேயே புலம்பிப் தீர்த்தாள்.

"அக்கா வாங்க, நாஷ்டா செஞ்சுட்டு மதிய வேலையப் பார்ப்போம். ஆண்டவன் மேலே பாரத்தை இறக்கி வச்சுட்டேன்".

"ஸபுர் செய்யும்மா, உன் மனம் போல் நடக்கும்", ஆறுதல் கூறினாள் மரியம்.

"ஹஜ்ஜுக்குப் போகப் பணம் கட்டிட்டீங்களா அக்கா?"

"இன்னும் இல்லையேம்மா! எனக்கு விவரம் தெரிந்த நாள்ளேயிருந்து ஹஜ்ஜுக்குப் போகணூம்னு கொள்ளை ஆசை. கொஞ்சம் கொஞ்சமா 60ஆயிரம் கட்டிட்டேன். இன்னும் 20 ஆயிரம்தான் பாக்கி. இன்ஷா அல்லாஹ் இந்த வருஷம் என் ஹாஜத் நிறைவேறிடும் என்று நினக்கிறேன்." கண்கள் கலங்க பதிலுரைத்தாள் மரியம்.

"இன்ஷா அல்லாஹ்" ஆண்டவன் நிறைவேற்றி வைப்பான், சாப்பிடுங்க" நம்பிக்கை ஊட்டினாள் ஆயிஷா.

மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பினார் இப்ராஹீம் சாஹிப். கை கால் அலம்பி ஆயாசமாக சோபாவில் சாய்ந்தார். ஆயிஷா ஆவி பறக்க தேநீர் கொண்டு வந்து வைத்தாள். கணவனுடன் எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் தன் கடமையிலிருந்து அவள் தவறுவதே இல்லை.

இப்ராஹீம், மனைவியின் முகத்தைப் பார்த்தார். முகம் வாடி இருப்பதன் காரணம் அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் வாயைத் திறக்காமல் இருப்பதே 'ஸலாமத்' என்று கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்.

கணவர் தினசரி படித்துக்கொண்டு நல்ல மூடில் இருப்பதைக் கவனித்த ஆயிஷா ஆர்வமுடன் அருகில் வந்தாள். "என்னங்க, அக்கா மரியம் ஹஜ்ஜுக்குப் போக ரூ.60 ஆயிரம் கட்டிட்டாங்களாம். இன்னும் ரூ.20 ஆயிரம்தான் பாக்கியாம். அதை நாமே கட்டிட்டு, இன்ஷா அல்லாஹ்! நாமும் 'ஹஜ்' செய்திடலாங்க!."

"என்னது! ரூ.20 ஆயிரமா? அஞ்சு, பத்து பஸ்ஸுக்குக் கொடுத்து அனுப்புங்கன்னு சொல்ற மாதிரில்லே பேசறே. இதை சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுமா உனக்கு"

"ஏங்க பணம் பணம்னு பணத்திலேயே குறியா இருக்கிறீங்க. 'தீன்' மேலேயும் கொஞ்சம் நாட்டம் வைங்க. நமக்கு திருமணம் ஆகி 10 வருஷம் ஆகுது. பேருசொல்ல ஒரு பிள்ளை இல்லை. இருக்கிற சொத்து தலைமுறைக்கும் போதும்".

"சரி ஆயிஷா, இப்போதைக்கு வாக்குவாதத்தை நிறுத்தி விடுவோம். பேசப் பேச மனக்கஷ்டம்தான் மிஞ்சும். எது எப்போ நடக்குமோ அப்போதான் நடக்கும். உள்ளே போய் வேலை இருந்தாப் பாரு. நான் கொஞ்சம் கணக்கு வழக்குப் பார்க்கனும்."

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... மேலே ஒருத்தன் கணக்கு பண்ணிக்கிட்டுத்தான் இருக்கான். நீங்க போடுற கணக்கு எல்லாம் எம்மாத்திரம்."

"என்ன முணுமுணுப்பு அங்கே". இரைந்தார். "ஒண்ணுமில்லே" எனக்கூறி ஓடி மறைந்தாள் ஆயிஷா.

வாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தவர், "யாரது லத்தீப் பாயா! என்ன விஷயம்?உள்ளே வாங்க".

நம்ம ஊர் 'ஜமாத்' உங்களைப்பார்க்க வந்து இருக்காங்க. வரச்சொல்லுட்டுங்களா?

"அதான் வந்துட்டாங்கில்லே! வரச்சொல்லு".

"அஸ்ஸலாமு அலைக்கும்"

"வலைக்கும் ஸலாம், உட்காருங்க".

இவர்கள் வந்ததை அறிந்த ஆயிஷா அனைவருக்கும் தேநீர் கொடுத்தனுப்பினாள் லத்தீப் பாயிடம். வந்த காரணத்தை ஆரம்பித்தார் ஜமாத் செயலாளர் மொய்தீன். "நம்ம ஊரு பள்ளி வாசல் ரொம்ப நாளா கூரைக்கட்டிடமாவே இருக்கு. இடமும் போதுமானதா இல்லே. ஜும்மா தொழுகை, பண்டிகை தொழுகை எல்லாத்துக்கும் பக்கத்து ஊருக்கு போக வேண்டி இருக்கு. நம்ம பள்ளி வாசலை பக்கா கட்டிடமா கட்டித் தந்தா நல்லா இருக்கும். அது உங்களாலேதான் முடியும்". "வரப்போற மழைக்குத் தாங்காது. பெண்கள் தொழவும் இடம் ஒதுக்கனும்" மற்றவர்களும் இடைஇடையே யோசனை கூறினார்கள்.

"எல்லாம் சரிதான். நீங்க சொல்றதைப் பார்த்தா சிம்பிளா கட்டினாக்கூட கிட்டத்தட்ட மூன்று லட்சம் வரை ஆகும் போல இருக்கே" சற்று நேரம் மவுனமாக இருந்தவர், "யோசித்து சொல்றேன், போயிட்டு வாங்க". நறுக்கென வார்த்தைகளை முடித்துக்கொண்டார். எதிர்ப்பார்ப்போடு வந்தவர்கள் மனக்கஷ்டத்தோடு திரும்பினர்.

இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷாவுக்கு வழக்கம்போல் ஏமாற்றம் தான். சமையலறைக்கும் வாசலுக்கும் நடந்துக்கிட்டு இருந்த மனைவியைப் பார்த்து, "ஏன் குட்டிப்போட்ட பூனையைப்போல இங்கிட்டும் அங்கிட்டும் தவிச்சிக்கிட்டு இருக்கே?" எரிச்சல் பட்டார் இப்ராஹீம்.

இன்னும் அக்கா வரலீங்க. மணி 9 ஆகுது. ஒண்ணுமே ஓடலே. இதுவரைக்கும் இப்படி நடந்ததில்லே. என்ன ஆச்சுன்னு தெரியலே!

"இன்னும் வரலையா? எல்லாம் நீ கொடுக்குற எடம்தான். யார் யாரை எங்கு வைக்கணுமோ அங்குதான் வைக்கனும். அப்போதான் நம்மிடம் பயம் இருக்கும்." சந்தடி சாக்கில் கந்துப்பொடி ஊதினார் இப்ராஹீம்.

விடிந்ததும் விடியாததுமாக வந்து சேர்ந்தாள் மரியம். ஆயிஷாவுக்கு ஆச்சரியம். "என்னக்கா ! சொல்லிக் கொள்ளாம நிக்க மாட்டீங்களே... உடம்பு சரியில்லையா?

"இல்லம்மா கண்ணு! திடீரென எதிர்பாராத சூழ்நிலை. வேலை முடிய ராத்திரி 11 மணி ஆயிடுச்சி".

"அப்படியா! எனக்குத் தெரியாம அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு?".

மரியம் குரலைக்கேட்டுக் கொல்லைப்புரம் வந்த இப்ராஹீமை, அவர்களின் பேச்சு தடுத்து நிறுத்தியது.

"நேற்று வேலைக்கு வழக்கம்போல் வந்துக்கிட்டு இருந்தேன். வழியில் என் பழைய சினேகிதி ஜைனப்பைப் பார்த்தேன். அவளுடைய நிலை என்னை நிலை குலைய வச்சுடுச்சும்மா. ஓரளவுக்கு நல்லா வாழ்ந்த குடும்பம். திடீரென வியாபாரம் நொடிஞ்சிப் போயிடிச்சி. அவள் கணவனும் படுக்கையில் விழுந்திட்டாரு. மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணமும் சேர்ந்து செலவானதுதான் மிச்சம். அவரும் 'மவுத்' ஆகிட்டாரு. சொந்தபந்தமும் கையை விரிச்சிட்டாங்க. பரிசம் போட்ட மாப்பிள்ளை வீட்டாரும் குடும்ப பாரம் தன் மகன் தலையில் விழுந்திடுமோ என பயந்து நழுவிட்டாங்களாம். பாவம்! சொல்லி கதறி அழுதது இன்னும் என் கண் முன்னாலேயே நிக்குது".

வயசுக்கு வந்த இரண்டு மகள்களின் எதிர்காலத்தை எண்ணிக் கண்கங்கினாள். நான்தான் தைரியம் சொல்லி தேற்றினேன். அப்போ எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. எனக்குத் தெரிஞ்ச ஓதிப்படிச்ச பையன் ஒருவன் இருந்தான். அம்மா இல்லே. அத்தா மட்டும்தான். வசதி குறைவு. இருந்தாலும் பையன் தங்கக் கம்பி. இரண்டு வீட்டாரிடமும் பேசி முடித்தேன். ஹஜ்ஜுக்குக் கொடுத்தப் பணத்தை திருப்பி வாங்கி, செலவுக்கு ஜைனபிடம் கொடுத்துட்டு வரேன். இனிமேல் அல்லாஹ் பார்த்துக்குவான்".

ஒரு கன்னிப் பெண்ணிற்கு வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்து தன்னுடைய வாழ் நாள் உழைப்பையையும் உபகாரமாக கொடுத்து, தன்னடக்கத்தோடு பேசும் மரியம் பீபியின் உயர்ந்த உள்ளம் இப்ராஹீம் சாஹிபை உலுக்கிப் போட்டது!

பேச்சு தொடர்ந்தது...

"என்னக்கா சொல்றீங்க! உங்களுடைய பல்லாண்டு கனவாச்சே! ரெத்தத்த வியர்வையா சிந்தி ஓடா உழைத்த பணமாச்சே!

"அட போம்மா. பணமாவது ஒண்ணாவது. நாம வாழும் இந்த வாழ்க்கையே நிலையில்லே! இந்த உலகத்திலே நமக்கு எத்தனை நாளைக்கு 'ரிஸ்க்'குன்னு தெரியலே. கண்மூடி திறக்குறத்துக்குள்ளே என்னன்னமோ நடந்துடுது. நாம உசிரோடு இருக்கும்போதே நம்மால் ஆன நல்லதை, யோசிக்க நேரம் கொடுக்காமே செய்திடணும். யோசிக்க ஆரம்பிச்சா 'ஷைத்தான்' கெடுத்துடுவான். அப்புறம் அந்தச் சந்தர்ப்பம் நமக்கு கிடைக்குமோ இல்லையோ?."

"ஹஜ்க்கு போக பேர் கொடுக்க இன்னும் இரண்டு மாதம் இருக்கு. இதுக்குள்ளே அல்லாஹ் நாடினா எவ்வளவோ மாறலாம். எதுவும் நம் கையிலில்லே. ஆதரவற்ற எத்தீம் பிள்ளைகளுக்கு கலியாணம் செய்வது, பள்ளி கட்டுவது எல்லாம் ஆண்டவனுக்கு பிடித்தமானதுன்னு சொல்லுவாங்க".

"நாம் சந்தோஷப்படுவதைவிட மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். எம்மனசு இப்போ நிறைஞ்சு இருக்கு. அண்ணன் சத்தம் போடுவார். நீ போய் அவரை கவனி. நான் என் வேலையைப் பார்க்கிறேன்".

மரியம் பீபியுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் 'சம்மட்டி அடியாய்' இப்ராஹீம் சாஹிபின் இதயத்தில் ஆழமாக இறங்கின; அவரைச் சிந்திக்கவும் செய்தன. நாம் வாழும் வாழ்க்கையும் பணமும் நிலையானது இல்லை; 'தீன்வழியில்' நடப்பதும் மார்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதும்தான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அடையாளம் எனத் தெளிந்தார். உடம்பில் புதிய இரத்தம் பாய்ந்தது போல இருந்தது அவருக்கு. இந்த மன சாந்தி இதுவரை நமக்கு கிடைக்கவில்லையே! இதுதான் ஹிதாயத்தோ! ஆச்சரியப்பட்டார்!!.

இது நாள்வரை அவருடைய ஆழ்மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த 'இப்லீஸ்' கல்லெடுத்து அடிக்காமலேயே காத தூரம் பறந்தான்.

இதுநாள்வரை யாருடைய அறிவுரையையும் ஏற்காத அவருடைய உள்ளம், நல்ல காரியங்களுக்குச் செவி சாய்க்காத அவருடைய குணம் எல்லாம் ஒரு ஏழைப் பெண் மரியம் பீபிவுடைய உயர்ந்த நோக்கத்தாலும் செயலாலும் மாறிப் போனது; அவரைப் புது மனிதனாகியது. சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்தார்.

மொய்தீன் பாய் வீட்டிற்குச் சென்று பள்ளி வாசல் கட்ட விருப்பம் தெரிவித்தார். ஐந்து லட்சம் ரூபாயில் கட்டிடம் ஆரம்பிக்க ஆவன செய்யும்படி உணர்ச்சி பொங்க கூறினார். ஒரே நாளில் அவருடைய மாற்றத்துக்கு காரணம் புரியாமல் வியந்தார் மொய்தீன் பாய். இருந்தாலும் ஆண்டவனுக்கு நன்றி கூறிக் காரியத்தில் இறங்கினார்.

"ஆயிஷா ! உன் விருப்பம் போலவே உன் அக்கா மரியம், நாம் இருவர் ஆக மூவரும் 'ஹஜ் பயணம்' இன்ஷா அல்லாஹ் போகப்போறோம். என்ன! சந்தோஷந்தானே! இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் இப்ராஹீம்.

ஆயிஷாவுக்கு அவருடைய மாற்றத்தைக்கண்டு வியப்பாக இருந்தது. "ஆமீன், ஆமீன்; யாரப்பல் ஆலமீன்", அவளையும் அறியாமல் அவளுடைய வாய் முணுணுத்தது. சந்தோஷத்தில் வானமே கீழிறங்கி வந்ததுபோல் குதூகலத்தில் மயங்கிச் சாய்ந்தாள்.

இப்ராஹீம் சாஹிப் துடித்து விட்டார். 'வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல, "யா அல்லாஹ், என் குடும்பத்தைக் கொண்டு என்னை சோதித்து விடாதே! யா அல்லாஹ்!!", இரு கையேந்தி துவா கேட்டார்; அழுதார். மரியம் ஆறுதல் கூறினாள்.

லேடி டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவரது பதிலுக்காக இதயம் படபடக்கக் காத்திருந்தனர் அனைவரும். டாக்டர் அறையைவிட்டு வெளியே வந்தார். சிறிய மவுனத்திற்குப்பின், "பாய்! பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்க! நீங்க அத்தாவாகப் போறீங்க". காதில் தேன் பாய்தது. "யா அல்லாஹ்! நீயே மிகப்பெரியவன். எல்லாப்புகழும் உனக்குத்தான். நான் மனம் மாறிய குறுகிய காலத்திலேயே நாங்கள் ஏங்கித் தவித்த மிகப்பெரிய பாக்கியத்தைக் கொடுத்து விட்டாய்! அவரையும் அறியாமல் கண்கள் கலங்கி விட்டன.

மகிழ்ச்சியோடு மனைவியைப் பார்த்தார் இப்ராஹீம். வெட்கத்தால் ஆயிஷா முகம் சிவந்து இருந்தது. மனம் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!! என்று ஆர்ப்பரித்தது.

அள்ளிக்கொடுப்பதில் அரசருக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வை யார் மிஞ்ச முடியும்? அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!



ஆக்கம் : கல்லை நூர்ஜஹான் ரஹீம்

]]>
admin@satyamargam.com (abusuhaima) கதை Tue, 11 Nov 2008 07:27:08 +0000
பாலையில் வருமா சோலை? (இறுதி பகுதி) http://www.satyamargam.com/526 http://www.satyamargam.com/526 மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை மிதிக்கும்வரை ஏற்பட்ட அல்லல்கள் ...! ஹ்ம்... இன்று நான் எங்கள் ஊரைப் பொருத்த மட்டில் ஒரு பணக்காரனாகி விட்டேன் ! இன்னும் குடிபுகாமல் என் வரவுக்காகக் காத்திருக்கும் புதுவீடு, வயல், பழுது பார்த்தமைக்கப் பட்ட பழைய வீடு - இத்தனையும் எனக்கு இப்போது சொந்தம். ஆனால் ...? எனக்குச் சொந்தமாக வேண்டியவள் அன்னியமாகி விட்டாள்!

]]>
admin@satyamargam.com (MS) கதை Mon, 11 Jun 2007 13:56:57 +0000
பாலையில் வருமா சோலை? (பகுதி -2) http://www.satyamargam.com/498 http://www.satyamargam.com/498 டிதத்தைப் படித்துக் கொண்டிருந்த என் இதயம் நொறுங்கக் காரணம்.......

மாமா மகள் ஸாஜிதாவின் கணவர் மவ்த்தாகி விட்டாராம்! இன்னா லில்லாஹ் ... ஸாஜிதா விதவையாகி விட்டாளா? யா அல்லாஹ் ... என்ன வேதனை இது! பெயருக்கேற்றவளாய் உன்னை வேளை தவறாமல் வணங்குபளாயிற்றே! அவளுக்கா இந்த வயதில் விதவைக் கோலம்? உண்மையான அதிர்ச்சியால் உள்ளம் குலுங்கியது!

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கதை Mon, 23 Apr 2007 16:03:29 +0000
மிஸ்டு கால்... http://www.satyamargam.com/495 http://www.satyamargam.com/495 ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க பணிக்கு செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சில அரேபியர்கள், பாகிஸ்தானியர் மற்றும் சாலைப் பணியாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த சிலரை மட்டுமே காண முடிந்தது.

ஸவூதியிலிருந்து சில மாதங்களுக்கு முன் இங்கு துபை வந்த எனக்கு இந்த நாட்டின் வித்தியாசமான சூழ்நிலை, ஸவூதியில் நான் இருந்ததோடு ஒப்பிடும்போது ஒரு மனக்குறையைதான் ஏற்படுத்தியது.

விடிகாலை நேரத்தில் 'பஃஜ்ர் தொழுகை' என்பதை விட மற்ற விஷயங்களில் இங்குள்ள முஸ்லிம்கள் அதிகமாக ஆர்வமாக இருப்பதைப் போன்றதொரு உணர்வு. அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவதும் அதே நேரத்தில் பள்ளிவாசலோடு கூடிய ஒரு பந்தத்தையும் அவசியமான தொழுகையையும் அலட்சியம் செய்து வாழ்வது என்ற நிலை மனதுக்கு ஒரு வித வேதனையை அளித்தது.

ஜமாத்துக்களின் இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு மக்கள் ஆதரவு அளிக்காமல் நிலையற்ற உலகில் அதன் சிற்றின்பங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பது, இலக்கற்று வாழ்வது தவறு என்று எப்போது உணர்வார்கள் என்றும் அடிக்கடி யோசிப்பேன்.

"அஸ்ஸலாமு அலைக்கும்! என்ன அஹ்மத் பாய் நல்லா இருக்கீங்களா?"" என்ற அன்வரின் குரல் கேட்டு என் சிந்தனை தடைபட்டது.

"வ அலைக்கும் ஸலாம்! அல்ஹம்துலில்லாஹ்! நல்லா இருக்கிறேன் அன்வர். நீங்க எப்படி இருக்கீங்க?"

"அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கிறேன் அஹ்மத் பாய்!"

பஃஜ்ர் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வெளியில் வர எத்தனிக்கையில் அன்வர், என்னிடம் ஏதோ பேச விரும்பியே நெருங்கியதாகத் தோன்றியது. காலையில் பாங்கு சப்தம் கேட்டு பள்ளிக்கு வந்தால் அங்கு முன் வரிசையில் அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் மிகச் சிலரில் அன்வரும் ஒருவன். வயதில் சிறியவன் என்றாலும் நான் அவனை வாங்க போங்க என்றழைப்பதைக் கண்டு அவன் சங்கோஜப்பட்டு நெளிவதையும் அடிக்கடி நான் ரசிப்பேன்.

"சொல்லுங்க அன்வர் ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ஆமாம் பாய்..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அன்வருடைய மொபைலில் மிஸ்டு கால் வந்தது. அன்வர் அதை ஒரு கணம் பார்த்து விட்டு மீண்டும் பேச எத்தனித்தான்.

"யாரோ மிஸ்டுகால் கொடுக்கிறாங்க போலிருக்கே அன்வர்? இந்த நேரத்திலே ஏதும் பிரச்சினையில்லையே?" நான் ஆர்வமாக கேட்டேன்.

"ஒண்ணுமில்லை அஹ்மத் பாய்! ஊரில இருந்து என் மனைவி அஸ்மா தான்!" என்றான் அன்வர் புன்முறுவலுடன். "நான் பஜ்ருக்கு எழுந்தவுடன் தினமும் ஊருக்கு தொழ எழுப்பும் விதமாக மனைவிக்கு மிஸ்டுகால் செய்துடுவேன். அதற்கு பதில் மிஸ்டுகால் வந்திருக்கு! பல நேரங்களில் நாங்க இப்படித்தான் பேசிக்குவோம்" என்றான் அன்வர்.

அவர்களின் மெளன பரிபாஷனைகளைக் கண்டு ஒரு கணம் நான் ஸ்தம்பித்தேன்.

அன்வர் ஒரு அரபி வீட்டில் வேலை பார்க்கிறான். பொதுவாகவே, அரபிவீடுகளில் வேலை செய்வோரின் புலம்பல்கள் 'அவங்க வீட்ல கிழவன் நல்லவன், கிழவி சரியில்ல... எங்க வீட்ல கிழவி நல்லவ ஆனா கிழவன் மகா லொள்ளு பிடிச்சவன்' என்பது போல் நீளும்.

'அந்த அம்மா இருக்கே அது மண்டய சூடாக்கிடுது, வண்டிய மெதுவா ஓட்டினா என்னா தூங்கிறயா 'ஹம்மார்' (கழுதை) ன்னு கத்துது, வேகமா ஓட்டுனா என்னா கொல்லறதா முடிவு கட்டிட்டியா கல்ப் (நாய்)ன்னு கொலைக்கிது'. என்பது போன்றவை தான் புலம்பல்களில் பிரதான விஷயமாக இருக்கும்.

இதை எல்லாம் அவ்வப்போது கேட்கும்போது அல்லாஹ் நம்மை அந்த சூழ்நிலையில் வைக்காமல் நல்ல பணியில், குடும்பத்துடன் இங்கே இருக்க வாய்ப்பு அளித்ததற்கு நான் நன்றி கூறிக்கொள்வேன்.

அன்வர் அவன் அரபி முதலாளியைப் பற்றி எந்த குறையையும் யாரிடமும் கூறாமல் இருந்ததற்கு, அவனுடைய ஈமானின் உறுதி காரணமாக இருக்குமோ என்றெல்லாம் கூட எண்ணுவேன்.

அன்வர்  ஃபஜ்ர் தொழுகைக்கு தவறாமல் வருவதைக் காணும்போது, தொழுகை முடிந்தவுடன் காரில் அரபியின் பிள்ளைகளை மதரஸாக்களில் விடிகாலையில் கொண்டு செல்வதால்தான் இப்படி தவறாமல் வர முடிகிறதோ என்று கூட ஆரம்பத்தில் எண்ணியிருந்தேன்.

ஆனால் நாளாக நாளாக அவ்வப்போது அவனுடைய பேச்சுக்களும் வார்த்தைகளும் அது தவறு என்பதையும் பணியின் சுமைகளையும் தாண்டிய இறையச்சம் அவனிடம் உள்ளதையும் எனக்கு உணர்த்தியது.

இப்படித்தான் ஒருநாள் எனக்கு சில ஸிடி-க்களைக் கொடுத்து என் ஆஃபிஸில் வைத்திருக்கச் சொல்லியும் அவருடைய நண்பர் ஒருவர் என் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போகும் போது வந்து வாங்கக் கொள்வார் என்றும் கூறியிருந்தான் அன்வர்.

அப்போது நான் "அன்வர்... இது?" என முடிக்கும் முன்னரே, "பாய்! இது இஸ்லாமிய ஸீடிக்கள் தான் பாய், தொழுகையின் அவசியம், தொழும் முறைகள், மறுமை வாழ்வு, முஸ்லீம் கடமைகள் போன்ற ஸீடிக்கள் பாய்! நம்ம ஆசாத் இந்த வாரம் லீவுல ஊருக்கு போறான். அதான் ஊருக்கு கொடுத்தனுப்புறேன்" என்று என்னிடம் கூறியிருந்தான்.

அல்ஹம்துலில்லாஹ்! இவனைப் போலவே எல்லா இளைஞர்களும், தம் குடும்பத்துக்கு இது போன்ற நல்ல விஷயங்களை அனுப்பி தானும் இதை கடைபிடிச்சா எவ்வளவு நன்றாக இருக்கும் - அந்த நேரம் முதலே அன்வர் என் பார்வையில் உயர்ந்து விட்டிருந்தான்.

அதற்கும் முத்தாய்ப்பாய் தனது மனைவியை பிரிந்திருந்தாலும் இங்கு இருந்து, பஃஜ்ர் தொழுகைக்கு தானும் எழுந்து தன் மனைவியின் தொழுகைக்கான நினைவுறுத்தலுக்காக அவளுக்கு "மிஸ்டுகால்" தர அங்கிருந்து அவன் மனைவியும் பதில் மிஸ்கால் தரும் அந்த எளிமையான விதம்...அல்ஹம்துலில்லாஹ்!

நம்மில் பலர் அநாவசியமாக எப்படியெல்லாமோ எதற்கெல்லாமோ மிஸ்டுகால், SMS, சாட் என்று மொபைலை பயன்படுத்த அன்வரை போல் உபயோகிப்பவர் எத்தனைபேர்.....அதன் மூலம் தமது மறுமை எனும் நிலையான வாழ்க்கைக்கு உறக்கத்தினை களைந்து உரமிடுபவர் எத்தனைபேர்?

வாழ்க்கைப் பயணத்தில் முக்கியக் கட்டமான வாலிபப்பருவத்தில் நிர்ப்பந்தத்தின் காரணமாக இப்படி குடும்பத்தைப் பிரிந்து வாழுபவர்கள், குர்ஆனில் (66:6) அல்லாஹ்வின் "உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துகொள்ளுங்கள்" எனும் கூற்றை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் உண்மையில் கணவன் மனைவி அன்பு மட்டும் அதிகரிக்காது, மறுமையின் சேமிப்பும் நன்மைகளும் அதிகரிக்கும் என்பதாக மனதில் பட்டது.

"பாய்...பாய்....என்ன ஆச்சு எங்கே இருக்கீங்க? என்ற அவன் குரல் கேட்டு மீண்டும் என் மன சிந்தனையிலிருந்து விடுபட்டேன்.

"என்ன பாய் ஆழமா சிந்தனையிலே போய்ட்டீங்க?"

"இல்ல அன்வர், இப்படி தினமும் நீங்க மிஸ்டுகால் கொடுக்கிறீங்களா?"

"ஆமாம், நான் இங்கு வந்ததும் கிடைச்ச முதல் சம்பளத்தில இரண்டு அஜான் கிளாக் வாங்கினேன், ஒண்ணு ஊருக்கு கொடுத்து அனுப்பிட்டேன். ஒண்ணை இங்க வச்சிருக்கிறேன். அதில ஊரின் பஃஜ்ர் நேரத்தை கணக்கிட்டு அலார்ம் செட் பண்ணியிருக்கிறேன். அஸ்மாவும் அப்படிதான் இங்குள்ள பஃஜ்ர் நேரத்தை கணக்கிட்டு அலார்ம் செட் பண்ணியிருக்கிறாள்."

"இன்னொரு விஷயம் பாய்... இங்கு சரியா தூக்கம் வராமல் அலாரம் அடிக்கும் முன்னரே எழுந்து அதை ஆஃப் செய்யர நிலைதான் அதிகம்னு சொல்லணும். சில நேரம் நான் முந்திக்குவேன் சில நேரம் 'அஸ்மா' முந்திக்குவா.... சில நேரம் பாதி ராத்திரியில மிஸ்டு கால் வரும். அப்ப இது தஹஜ்ஜுத் தொழ என்று புரிந்து கொண்டு தஹஜ்ஜுத் தொழுது கொள்வோம், சில நாட்கள் நஃபிலான நோன்புகள் வைத்துக் கொள்வோம்."

"ஊரிலே நான் இருக்கும்போது நான் முந்தி எழுந்தா அவளை எழுப்பி விடுவேன், அவள் எழுந்தா என்னை எழுப்பிவிடுவாள், அப்புறம் இங்கு வரவேண்டிய சூழ்நிலை குடும்ப பாரம். வாப்பா உடம்புக்கு ஆகாம உழைக்க முடியாம வீட்டில இருந்துட்டாங்க தம்பி படிக்கணும், தங்கச்சிக்கு நல்ல இடம் அமையணும்னு முடிவு செய்து படிப்பை மூட்டை கட்டி வேலைக்கு போற நிலை, அம்மாவுக்கும் வயசு ஆகி மூட்டு வலி மயக்கம்னு மிகவும் கடுமையான குடும்ப சூழ்நிலை"

"அதோட, இரண்டு குழந்தைங்க ஆனதும் சம்பாத்தியம் பத்தல. கடன் வேறு இருந்தது..... அதான் 4 வருஷமா இங்க வந்து இருக்கேன், என்னோட ஷேக் நல்லவரு! வருஷா வருஷம் ஸ்கூல் லீவுல இரண்டு மாசம் வெளியூருக்கு போய்டுவாங்க.... அதிர்ஷ்டவசமா எனக்கும் வருஷம் ஒருமுறை ஊருக்கு போக அல்லாஹ் உதவியால லீவு டிக்கட் பணம் கொடுத்துடுவாங்க.

"அல்ஹம்துலில்லாஹ்... சம்பளம் குறைவுதான்னாலும்... அல்லாஹ்வுடைய பரக்கத்..... அஸ்மாகிட்டயும் ஏதும் ஆடம்பரம் வீண் விரயம் இல்ல ஒரளவுக்கு நிம்மதியா வண்டி ஒடுது.... இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. அதை மட்டும் அடைச்சிட்டா ஏதாவது ஒரு தொழில் செய்துகொண்டு ஊரிலேயே பிழைத்துக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ்!"

"நீங்க என்னமோ கேட்டீங்க நான் என் கதையையே சொல்ல ஆரம்பிச்சிட்டேன்....ஆக தினம் தவறாமல் நாங்க மிஸ்டுகால் கொடுத்துக்குவோம். ரொம்ப தேவைப்பட்டாலொழிய போன் பேசமாட்டோம். என்னோட சம்பளத்தில எல்லாம் அடிக்கடி போன் செய்து மனைவியிடம் பேசறது நடக்குமா பாய்" என்றான் சற்று கூச்சத்துடன்.

"அன்வர் இன்னொரு விஷயம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?"

"இல்லங்க பாய் சும்மா கேளுங்க!"

நான் பேச வாய் திறந்தபோது பழக்கமான குரல் குறுக்கிட்டது.

"அஸ்ஸலாமு அலைக்கும்!" தொழுது முடித்த பின்னும் சிலநிமிடங்கள் குர் ஆன் ஒதி தர்ஜுமாவோடு சில வசனங்கள் படித்துவிட்டு வீட்டுக்கு போகும் பழக்கமுடைய பிலால் பாயின் குரல்தான் அது!

"வ அலைக்கும் அஸ்ஸலாம்...."

"என்ன அஹ்மத் பாய், என்ன அன்வர், இன்னும் வீட்டுக்கு போகாம வண்டிகிட்ட நின்னுகிட்டு என்ன பேசிகிட்டிருக்கீங்க, எல்லாம் நல்ல செய்திதானே.....?"

"அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் நல்ல செய்திதான், நீங்க நல்லா இருக்கீங்களா?"

"அல்ஹம்துலில்லாஹ்... உங்க துவா பரக்கத்தால அல்லாஹ்வுடைய அருளால நல்லா இருக்கிறேன்." பதில் சொல்லிக்கொண்டே வேகமாக அவர் வண்டியின் பக்கம் விரைந்தார் பிலால் பாய்.

எப்போதுமே அவருக்கு அவசரம்தான். நேரத்தை வீணாக்கும் பழக்கமில்லாதவர். அதேநேரம் கிடைக்கும் அரிய நேரத்திலும் குர்ஆன், ஹதீஸ் என்று பயனுள்ளதாகக் கழிப்பவர். பாக்கெட்டிலும் சிறிய சைஸ் குர்ஆன் எப்போதும் இருக்கும், கையில் இருக்கும் பைகளிலும் ஏதேனும் இஸ்லாமிய புத்தகங்கள். எங்கு நேரம் கிடைத்தாலும் அதை எடுத்து படிக்கத் துவங்கிவிடுவார், அது டாக்டருக்கு காத்திருக்கும் இடமாக இருந்தாலும், அல்லது சலூனில் கூட்டம் இருந்தாலும், அங்குள்ள கண்ட பத்திரிகைகளுக்குப் பதிலாக போகும்போதே கையில் எடுத்து சென்று விடும் பழக்கமுடையவர். பயணத்திலும், பேங்கில் என்று எங்கு காத்திருக்க நேர்ந்தாலும் அவர் இப்படிதான் நேரத்தை பயன்படுத்திக் கொள்வார்.

"ஏன் பிலால்பாய்... எந்த நேரமும் இப்படி படிச்சுகிட்டே இருக்கிறீங்களே... உங்களுக்கு தலைவலிக்கலயா?" என்று ஒருநாள் நான் தமாஷாக கேட்டு விட்டேன்.

"அஹ்மத்பாய்! ஒரு மூமீன் பேசினால் நல்லத பேசட்டும்... அல்லது மெளனமாக இருக்கட்டும்னு நபி(ஸல்) அவங்க சொல்லியிருக்காங்கல்ல. அதான் கண்டதையெல்லாம் பேசாமலும், பார்க்காமலும், கேட்காமலும் இருக்க இது ஒரு நல்ல வழியா எனக்குப்படுது... அது மட்டுமல்ல நிறைய விஷயத்தை புரியறது ஒரு நன்மை அதே போல் மறுமையில் இதற்கு அல்லாஹ்கிட்ட மிகப் பெரிய நன்மையும் இருக்கு. ஒரு ஒரு எழுத்துக்கு பத்து நன்மை அப்படின்னா கணக்கு போடுங்க... உலகத்தில நாம எவ்வளவு சம்பாதிப்போம் என்பதும் அதால எவ்வளவு பயன் என்பதையும் விட மறுமைக்கும் அதிகமாக சம்பாதிக்கிற வழி இது தான்.... இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்து பாருங்க! அல்லாஹ் தவ்ஃபீக் செய்வான்னு சொல்லிக்கொண்ட அப்போதும் இப்படித்தான் ஓடிவிட்டார்.

பிலால்பாய் விடைபெற்றதால் விடுபட்ட எங்கள் சம்பாஷனைகளைத் தொடர்ந்தோம்.

"அன்வர் உங்க கிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்னு நினைக்கிறேன்,..... அதுக்கு முன்ன நீங்க ஏதோ விஷயம் இருக்குன்னு சொன்னீங்களே சொல்லுங்க.."

"ஒண்ணுமில்ல அஹ்மத்பாய் இந்த லீவுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு, இந்த முறை வீட்டுக்கு வரும்போது தங்கச்சிக்கு ஒரு இடத்தில பார்த்து கல்யாணம் முடித்துட்டு போயுடுப்பான்னு அம்மாவும் அப்பாவும் ரொம்ப வற்புறுத்துறாங்க"

"கல்யாணம்னா, அதை நம்ம மக்கள் சிரமமா ஆக்கி வச்சிருக்காங்க, கல்யாணத்தை நடத்திப் பாரு வீட்டை கட்டிப்பாருன்னுகூட பழமொழியை சாதாரணமா சொல்லி இதை நியாயப்படுத்துறாங்க. கல்யாணம் அதுவும் பெண்ணுடைய கல்யாணம் அப்படின்னு சொன்னாலே அது நம்ம நாட்டு நடைமுறைல விதி விலக்கா அங்கொண்ணும் இங்கொண்ணும்னு தவிர, எல்லாமே சிரமமான நிர்ப்பந்தங்களுக்கு தள்ளப்பட்ட நிலையிலதான் இருக்கு இல்லையா? இத்தனைக்கும் மத்தியில இப்பத்தான் பல முஸ்லிம் இளைஞர்கள் நபிவழி திருமணம்னு, வரதட்சனை வீண்விரயம் ஏதும் இல்லாம சுன்னத்தான முறையில கல்யாணம் செய்ய முன் வந்திருக்காங்க...

"என் தங்கச்சியும், கல்யாணம் செஞ்சா ஐவேளை தொழக்கூடிய, வரதட்சனை வாங்காமல் நபிவழியில் திருமணம் செய்யக்கூடிய மாப்பிள்ளையைதான் கல்யாணம் செய்வேன்னு, பல இடங்களில சொந்தத்தையும் கூட வேண்டாம்னு சொல்லிகிட்டு இத்தனை நாட்களை கடத்திகிட்டு இருந்தாள். இப்ப ஒரே நேரத்தில மூன்று இடத்தில இருந்து அவளை பெண் கேட்டு வந்திருக்கிறாங்க. இரண்டு பேர் நம்ம நாட்டில இருக்கிறாங்க. மூன்றாவது மாப்பிள்ளை ஸவூதியிலே வேலை. திருமணத்துக்கு அப்புறம் தங்கச்சியை ஸவூதிக்கு அழைத்துக் கொள்வார்கள் என்று சொல்லி இருக்கிறாங்களாம். ஒண்ணும் புரியல நான் நாட்டுக்குப் போய் பார்த்துதான் ஒரு முடிவுக்கு வரணும். எல்லாம் நல்ல விதமா நடக்கிறதுக்கு துவா செய்யுங்க. அதோட எனக்கு ஒரு உதவியும் தேவை உங்ககிட்ட...."

என்று தொடர்ந்த அன்வர் தயங்கி நிறுத்தினான்.

"தயங்காம சொல்லுங்க அன்வர் என்னால முடிந்ததை செய்வேன் இன்ஷாஅல்லாஹ்.."

"ஊரில இருக்க இரண்டு மாப்பிள்ளங்க விஷயத்தில ஊரில போய் பார்த்தா தெரிஞ்சிக்கலாம்..... ஆனால் ஸவூதியில இருக்க மாப்பிள்ள.. அதன் மூலமா அங்கே செல்ல கூடிய வாய்ப்பு உம்ரா ஹஜ் இப்படி பல நன்மைகள் ஒவ்வொரு தொழுகைக்கும் பல்லாயிரக்கணக்கில் நன்மை கிடைக்கிற பள்ளிகள் இருக்கும் புனித மக்கா மதீனா போன்ற பள்ளிகளில் தொழ என் தங்கச்சிக்கு கிடைக்கும் பாக்கியம்னு... எதையுமே நம்ப முடியலே.. அதே நேரத்தில் பையனைப் பற்றி அதிகம் ஏதும் விபரம் இல்லை நல்ல பையன் நல்ல கம்பனியில் அக்கவுண்டண்ட் போன்ற விபரங்கள்தான் இருக்கு.

"தங்கச்சி நஸீமாவும் ஸவூதியிலிருக்கும் மாப்பிள்ளையை இஸ்லாமிய நாடு மக்கா மதீனா என்று நன்மைகளை அதிகமாக்கலாம் என்ற அடிப்படையில் ஆசைப்படுவதாக தெரிகிறது என்று அம்மா சொன்னாங்க. நீங்க துபைக்கு வருவதற்கு முன்னாலெ, ஸவூதிலே பல வருஷம் இருந்தீங்க, உங்க சொந்தக்காரங்களும் அங்க இருக்கிறாங்க கொஞ்சம் பையனப் பத்தி விசாரித்து எனக்கு விபரம் தந்தீங்கன்னா எனக்கு முடிவு எடுக்க நல்லா இருக்கும்" என்று முடித்தான் அன்வர்

"அவ்வளவுதானே? இன்ஷா அல்லாஹ் பையன் பேரும் விலாசம் நம்பர் கொடுங்க முயற்சித்து பார்ப்போம். ஆனாலும் இது சாதாரண விஷயமில்லை. மிகவும் பொறுப்பான விஷயம். ஜாக்கிரதையாகத்தான் கருத்து சொல்லணும்!"

பேசிக்கொண்டிருக்கையில் எனது மொபைல் ஒலியெழுப்பியது. மிஸ்டு கால்... அதுவும் வீட்டிலிருந்து தான்! தொழுதுவிட்டு உடனே வீட்டுக்கு சீக்கிரம் வாங்கன்னு சொல்லியும் நின்று பேசிக் கொண்டிருந்ததால் போன் வந்திருக்கிறது.

"அதுசரி அஹ்மத் பாய்! நீங்க என்னமோ கேட்கணும்னு சொன்னீங்களே?" அன்வர் கேட்டவாறே தனது பர்ஸில் ஏதோ தேடினான்.

"ஒண்ணுமில்ல...அன்வர் பாய்! என் கடைசி மகனுக்கு நான் உங்களை போன்ற இறையச்சமுடைய குடும்பத்தில பெண் எடுக்கலாமான்னு திடீரென்று ஒரு எண்ணம் வந்தது.... ஆனால் ஒருவர் பெண் கேட்கும் இடத்தில பெண் பேசுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை... நீங்கள் விரும்பினா அந்த நம்பரை என்னிடம் கொடுங்க இல்லன்னா வேற யாரிடமாவது கொடுங்க.." என்றேன்.

"என்னங்க பாய் நீங்க..உங்களை எவ்வளவு நம்பி நான் விசாரிச்சு சொல்லுங்கன்னு சொல்றேன். ஆனா நீங்களே இப்படி தயங்கலாமா? அதோட உங்களுக்கு கல்யாணம் ஆகாத ஒரு மகன் இருப்பது எனக்கு தெரியாது அஹ்மத் பாய், திருமணம் அல்லாஹ்வினால் நிச்சயக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் இன்ஷா அல்லாஹ்.. அவன் நாடியதே நடக்கும்...இது இம்மை.. இங்கே நாம் நாடியது எல்லாம் நடப்பது இல்லை. அல்லாஹ் நாடினாலே தவிர, ஆனால் மறுமையில் சொர்க்கத்தில் நாம் நாடுவதையெல்லாம் அல்லாஹ் நடத்தி தர வாக்களித்துள்ளான்...இல்லையா பாய்?" என்று சொல்லிக்கொண்டே ஒரு சீட்டை கையில் கொடுக்க நீட்டினான் அன்வர்.

அதை நான் கையில் வாங்க கை நீட்டும்போது என் மொபைல் போனில் மீண்டும் ஒரு மிஸ்டுகால் வந்தது.

என் சட்டைப் பையில் இருந்த மொபைலை வெளியில் எடுத்து உற்று நோக்கினேன். அட! என் மகன் நஜீர் அஹ்மத் தான்! ஸவூதியிலிருந்து 'வரதட்சணை ஒரு கொடுமை' எனும் தலைப்பில் அவன் ஆற்றிய உரை டி.வி.யில் இன்று முதல் முறையாக ஒளிபரப்பாக இருக்கிறது காலையில் பார்க்க தவறாதீர்கள், உங்கள் நினைவுறுத்தலுக்காக வேண்டி காலையில் நான் மிஸ்டுகால் தருவேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

ஜெத்தா இஸ்லாமிய அழைப்பகத்தில் ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சியில் நஜீர் முதன் முறையாக 'வரதட்சணை ஒரு கொடுமை' எனும் தலைப்பில் அவன் பேசியது டி.வி.யில் ஃபஜ்ர் நேர நிகழ்ச்சியாக அந்நூர் டி.வியில் ஒளிபரப்பாக இருந்தது

ஒருவேளை இதுக்குத்தான் வீட்டிலே இருந்தும் மிஸ்கால் வந்ததோ...என்று லேசாக குழம்பினேன்.

"சரி அன்வர் இன்னிக்கு தான் முதல் முதல்ல எங்க கடைசி மகன் நஜீர் அஹ்மதுடைய பேச்சு அந்நூர் டீவியில் இப்ப 6.30க்கு காட்டப்போறாங்க நான் வரேன் இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்!"

"அஹ்மத் பாய் உங்கள் கையில் இருக்கும் சீட்டில் இருப்பதுதான் அந்த ஸவூதி பையனுடைய நம்பர்... மறந்துடாதீங்க!"

சீட்டை வாங்கி பெயரையும் நம்பரையும் உன்னிப்பாக பார்த்தபோது ஏதோ ஒன்று சிலீர் என்று உறைத்தது. சீட்டில் இருந்த பெயர்.........நஜீர் அஹ்மத் S/O மன்ஸூர் அஹ்மத். பெயரும் எண்ணும் என் மகனுடையது தான்.

"யா அல்லாஹ்!" என்றேன் என்னையும் அறியாமல்.

அன்வரை ஒருக்கணம் மெளனமாக பார்த்து விட்டு "அன்வர்.. தயவு செஞ்சு இந்த சீட்டைப் பிடிங்க, இந்தப் பையனின் நடத்தை பற்றி நானே எதுவும் சொல்ல முடியாது" என்றேன்

"ஏன் அஹமத் பாய்... என்ன ஆச்சு?" என்றார் அன்வர் ஒன்றும் புரியாமல், அஹமத் பாய்க்கு ஏதோ மனசங்கடம் ஏற்படுத்தி விட்டோமோ என்ற தவிப்பு அவர் கண்களில் தெரிந்தது.

"அன்வர், இந்த பையன்... என்னுடைய மகன் நஜீர் அஹ்மது தான்.  இந்த சீட்டில் எழுதியுள்ள இவரின் வாப்பா மன்ஸூர் அஹ்மத் நான் தான். பொதுவாக என்னை அஹ்மத் என்று அழைப்பார்கள் என்பதால் நீங்களும் கவனிக்கவில்லை" என்றபடி கார் கதவைத் திறந்தேன்.

அன்வர் ஒரு வித இனம்புரியாத பேரதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

விக்கித்து நின்றிருந்த அன்வருடைய மொபைலில் மீண்டும் தொடர்ந்து மிஸ்டுகால்கள் வட்டமிட்டன. ஊரிலிருந்து அஸ்மா தான் போல. ஏதாவது மிக முக்கியமான செய்தியாக இருந்தால் தான் இப்படி தொடர் மிஸ்டுகால்கள் வரும்.

நொடிப்பொழுதும் தாமதிக்காமல் அதே மொபைலில் உடன் ஊருக்கு டயல் செய்தான் அன்வர்.

"அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா" என்றவாறு காரின் பின்புறமாக சற்றுத் தள்ளி நின்று சென்றாலும் அவன் பேசுவது எனக்குத் தெளிவாகவே கேட்டது.

"வ அலைக்கும் ஸலாம்..."

"என்ன விஷயம் அஸ்மா... வாப்பா அம்மா நீங்க எல்லொரும் நல்லா இருக்கீங்க இல்ல..."என்றான் லேசான பதற்றத்துடன்..

"அல்ஹம்துலில்லாஹ்.... ஒண்ணுமில்லேங்க... அந்த ஸவூதி மாப்பிள்ளையுடைய இஸ்லாமிய நிகழ்ச்சி அந்நூர் டிவியில இன்னிக்கு வருதாம் அதான் உங்களுக்கு சொல்ல போன் செய்தேன். பார்த்துட்டு போன் செய்யுங்க. நான் வைக்கிறேன் உடம்பை பத்திரமா பாத்துக்கங்க. அஸ்ஸலாமு அலைக்கும்." என்றவாறு முடித்தாள் அஸ்மா.

"வ அலைக்கும் அஸ்ஸலாம்" என்று பதில் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்த அன்வர் ஓட்டமும் நடையுமாக என்னை நோக்கி வருவது காரின் பின் பார்வைக்கான கண்ணாடியில் தெரிந்தது.  காரை ரிவர்ஸ்ஸில் எடுத்துக் கொண்டிருந்த என்னை மறித்து அருகில் வந்த அன்வர், "அஹ்மத் பாய்...உங்க மனசை பாதிக்கிற மாதிரி ஏதும் செஞ்சிட்டனான்னு புரியல..."என்றான்.

"சேச்சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அன்வர், என் மகனுடைய நிகழ்ச்சி முதல் முறையா டி.வி, மூலம் இன்னிக்கு உலகம் முழுவதும் பரவ அல்லாஹ் வாய்ப்பளித்திருக்கான். அந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாதேன்னுதான் அவசரமா போகிறேன். வேற ஒண்ணுமில்லை..." என்றேன்.

"இல்லே.. இந்த சீட்டால உங்களுக்கு ஏதும் மனக்கஷ்டம்..." என்று தயங்கிய அன்வர் வார்த்தைகளை முடிக்கும் முன் அவனை இடைமறித்தேன்.

"அன்வர் நீங்க செய்றது மிகவும் சரியான காரியம். உங்க தங்கச்சியோட வாழ்க்கை விஷயமாக முடிவு எடுக்க நீங்க செய்தது மிகவும் அவசியமானது. ஆனா என் மகனை பற்றி நானே முடிவு சொல்றதைவிட அடுத்தவங்க சொல்வது தான் சரின்னு எனக்கு பட்டது... நீங்க இன்னும் வேற யார் மூலமாவது விசாரித்து பொறுமையா முடிவு செய்யுங்க, என்னுடைய முறை அதுக்கு அப்புறம்தான். அல்லாஹ் நாடியதே நடக்கும்னு உங்களுக்கு நான் சொல்ல தேவையில்ல...நல்லது மறுபடி சந்திப்போம். அஸ்ஸலாமு அலைக்கும்" என்றவாறு கியர் மாற்றி வண்டியை நகர்த்தினேன்.

இந்த சீட்டை இனி அடுத்தவருக்குத் தருவதா வேண்டாமா? இனி அதன் அவசியம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாமல், தன் கையில் உள்ள சீட்டைக் கசக்கி அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் எறிந்தான். அஹ்மத் பாயிடம் தான் கண்ட நற்குணமும் நல்லொழுக்கமும் அவர் மகனிடத்தில் கண்டிப்பாக இருக்கும் என்ற உறுதியான எண்ணத்திலும் உற்சாகம் பொங்கும் மனதுடனும் தன் அறையை நோக்கி நடைபோட்டான்.

ஃபஜர் தொழுகைக்கான நேரம் முடிந்து ஆரம்பமாகும் பிரகாசமான விடியலுக்கான அறிகுறிகள் விண்ணில் பளிச்சிடத் தொடங்கின.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கதை Thu, 19 Apr 2007 16:00:00 +0000
பாலையில் வருமா சோலை? http://www.satyamargam.com/492 http://www.satyamargam.com/492 வைகறைக் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இரவுத்தாய் ஓய்வெடுத்துக் கொண்டாள்.

வேலைக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்துச் செல்வதற்காக கேம்ப் வாசலில் வந்து நின்ற வாகனத்திலிருந்து எழுப்பப் பட்ட நீ......ண்ட ஹார்ன் ஓசையில் அரபு டிரைவரின் அவசரம் தொனித்தது.

உடலும் உள்ளமும் ஒருசேரத் தந்த சோர்வில் இன்று நான் வேலைக்குப் போகவில்லை. நேற்று உம்மாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது . கடுமையான தொடர்க் காய்ச்சலாம்!

]]>
admin@satyamargam.com (அபூஷைமா) கதை Tue, 17 Apr 2007 15:20:49 +0000
உம்மா "ஐ லவ் யூ"! http://www.satyamargam.com/430 http://www.satyamargam.com/430 திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் இரவு உணவிற்குச் செல்லுமாறு பரிந்துரைத்தாள். அதிகம் பேசாத மௌன சுபாவத்தை தற்போது ஒரு சில நாட்களாக கடைபிடிக்கும் என் அன்பிற்குரிய மனைவி ஜஸீலாவின் இச்செயல் எனக்கு வியப்பை அளித்தது. அவள் மேலும் தொடர்ந்தாள், "நான் உங்களை நேசிக்கின்றேன், ஐ லவ் யூ வெரி மச்! ஆனால் அவங்களும் உங்களை நேசிப்பதை நான் நன்கறிவேன். அவங்களை நீங்கள் தனியாக சந்தித்து இப்படி சில மணித்துளிகளைக் கழிப்பது அவங்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு காரியமாக இருக்கும்".

]]>
admin@satyamargam.com (MS) கதை Fri, 02 Feb 2007 16:01:15 +0000
மாலையில் ஒரு விடியல் http://www.satyamargam.com/413 http://www.satyamargam.com/413 கொக். கொக்.. கொக்...

செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது.  பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய கோழி முட்டையிட்டு, அடைகாத்து உருவாக்கிய கோழிக்குடும்பம்.

]]>
admin@satyamargam.com (MS) கதை Wed, 17 Jan 2007 14:10:03 +0000
வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள் http://www.satyamargam.com/192 http://www.satyamargam.com/192

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை:

என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக"

யாஸ்மின் மேற்கண்டவண்ணம் பிரார்த்திக்க காரணம் இல்லாமலில்லை:

]]>
admin@satyamargam.com (MS) கதை Mon, 07 Aug 2006 06:40:43 +0000
மனைவியிடம் பாராட்டுப் பெற்ற விவசாயி http://www.satyamargam.com/0047 http://www.satyamargam.com/0047 அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய் கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும் வழியில் அவனைச் சந்தித்த ஒருவன், இந்த மாட்டை இழுத்துக் கொண்டு ஏன் தொல்லைப்படுகிறீர்கள்? இதற்குப் பதில் என் ஆட்டை வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய பால் தரும் ஒரே ஆண்டில் நிறைய குட்டிகள் போடும்" என்றான்.

அவனும் மாட்டைக் கொடுத்து விட்டு ஆட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் சென்றதும் கோழி ஒன்றுடன் வந்த ஒருவன், "இந்தக் கோழி நாள்தோறும் முட்டை இடும், வளர்ப்பதும் எளிது. உங்கள் ஆட்டிற்கு இதை மாற்றிக் கொள்வோமா?" என்று கேட்டான்.

ஆட்டைக் கொடுத்துவிட்டுக் கோழியுடன் புறப்பட்டான் அவன். ஊருக்கு அருகில் வந்து கொண்டிருந்த அவனைச் சந்தித்தான் ஒருவன். தன் கையிலிருந்து முட்டையைக் காட்டி, "இதை உடனே சமைத்துச் சாப்பிடலாம், அதனால் கோழிக்கு மாற்றிக் கொள்வோமா?" என்று கேட்டான். அவனும் உடனே கோழியைத் தந்துவிட்டு முட்டையைப் பெற்றுக் கொண்டான்.

இந்தச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்த ஒருவன்,
"என்ன இவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறாய்? மாட்டைக் கொடுத்து முட்டையுடன் வரும் உன்னைக் கண்டு உன் மனைவி கோபம் கொண்டு திட்டப்போகிறாள்" என்றான்.

"என் மனைவி என்னைப் பாராட்டுவாளே தவிர, ஒருநாளும் திட்டமாட்டாள்" என்றான்.
"1000 ருபாய் பந்தயம், உன் மனைவி உன்னைத் திட்டுவாள்" என்றான் அவன்.
"சரி, நீயும் என்னுடன் வா" என்றான் உழவன்.

இருவரும் உழவனின் வீட்டை அடைந்தனர். கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.

"நல்ல காரியம் செய்தீர்கள். யார் மாட்டைப் பார்த்துக் கொள்வது? அதுபோல் ஆடு வளர்ப்பது மட்டும் சாதாரண செயலா என்ன? கோழி இங்கே இருந்தால் ஒரே குப்பையாகிவிடும், உடனே சாப்பிடுவதற்கு முட்டை வாங்கி வந்தீர்களே, உங்கள் திறமை யாருக்கு வரும்" என்று பாராட்டினாள் அவள்.

உழவனிடம் வந்தவன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஆயிரம் ருபாயைத் தந்தான். "நீ செய்தவை முட்டாள்தனமான செயல்கள், ஆனால் உன் மனைவி பாராட்டுகிறாள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே" என்றான் அவன்,

அதற்கு, "நான் என்ன செய்தாலும் பிறர் எதிரில் என்னை என் மனைவி குறை கூறமாட்டாள், பாராட்டவே செய்வாள். இதை அறிந்தே நான் பந்தயம் கட்டினேன்" என்றான் அவன்.

]]>
admin@satyamargam.com (MuSa) கதை Thu, 04 May 2006 05:43:34 +0000
குட்டி ஒட்டகம்! http://www.satyamargam.com/0013 http://www.satyamargam.com/0013

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக் கொண்டிருந்தன.

‘‘அம்மா, நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?’’ என்று கேட்டது குட்டி.

‘‘பாலைவன மணல்ல நடக்கணும்னா, கால் நீளமா இருந்தாத்தான் வசதி. அதான்’’ என்றது தாய்.

‘‘அம்மா, நமக்கு ஏன் கண் இமை முடிகள் எல்லாம் நீளமா இருக்கு?’’

‘‘அப்போதான் பாலைவனத்து மணலெல்லாம் கண்ணுக்குள் புகாது.’’

‘‘நம்ம தோல் ஏம்மா சொர சொரனு ரொம்பக் கெட்டியா இருக்கு?’’

‘‘பாலைவனதுல வெயிலும் குளிரும் கடுமைய இருக்கும்ல. அதைத் தாங்கிக்கிறதுக்காக, தோல் கெட்டியா இருக்கு.’’

‘‘எல்லாம் சரிம்மா, அப்போ நாம ஏன் பாலைவனத்துல இல்லாம, இங்க ஜூவுல இருக்கோம்?’’ என்ற குட்டி கேட்ட கேள்விக்குத் தாயிடம் பதிலில்லை.

தொகுப்பு: அபூ ஸாலிஹா

]]>
admin@satyamargam.com (MuSa) கதை Sat, 22 Apr 2006 05:50:20 +0000