சத்தியமார்க்கம்.காம்

கதை-கவிதை
வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள் print Email
கதை-கவிதை - கதை
திங்கள், 07 ஆகஸ்டு 2006 09:40

தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள். முகம் பூரணச் சந்திரன் போல இலங்கிக்கொண்டிருந்தது. தொழுகைப்பாயை விரித்து நிதானமாக மதிய தொழுகையை நிறைவேற்றினாள். அதன் பின் தன் இருகரம் விரித்து அவள் இறைஞ்சிய சில வரிகள் இந்தக்கதைக்கு தேவையானவை:

என் இறைவனே..! என் படிப்பைத் தொடரும் வழியை ஏற்படுத்தி அருள்வாயாக. கல்வியில் என் நாட்டத்தை அதிகப்படுத்துவாயாக! கல்வியை கண்ணுக்கு ஒப்பிட்டவனே, எனக்கும் அக்கண்ணில் ஒளியை நிரப்புவாயாக"

யாஸ்மின் மேற்கண்டவண்ணம் பிரார்த்திக்க காரணம் இல்லாமலில்லை:

 
'பட்ட'தாரியின் குமுறல்! print Email
கதை-கவிதை - கவிதை
வியாழன், 22 ஜூன் 2006 06:08

{mosimage}என்னை வாழ்த்த வரும்
வார்த்தைகளில் கூட
தைக்கப்பட்ட ஈட்டிகள்!

உறவினர்களுக்கும் என்னுடன்
வார்த்தை பரிமாற்றத்திற்கு
மெளன பாஷைதான் வசதியாயிருக்கிறது!
 
கொஞ்சம் கண்ணீர் இருந்தால் இரவல் தாருங்கள்! print Email
கதை-கவிதை - கவிதை
திங்கள், 22 மே 2006 08:57

 அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும்.

அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை.

 
மனைவியிடம் பாராட்டுப் பெற்ற விவசாயி print Email
கதை-கவிதை - கதை
வியாழன், 04 மே 2006 08:43

அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய் கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும் வழியில் அவனைச் சந்தித்த ஒருவன், இந்த மாட்டை இழுத்துக் கொண்டு ஏன் தொல்லைப்படுகிறீர்கள்? இதற்குப் பதில் என் ஆட்டை வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய பால் தரும் ஒரே ஆண்டில் நிறைய குட்டிகள் போடும்" என்றான்.

அவனும் மாட்டைக் கொடுத்து விட்டு ஆட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் சென்றதும் கோழி ஒன்றுடன் வந்த ஒருவன், "இந்தக் கோழி நாள்தோறும் முட்டை இடும், வளர்ப்பதும் எளிது. உங்கள் ஆட்டிற்கு இதை மாற்றிக் கொள்வோமா?" என்று கேட்டான்.

ஆட்டைக் கொடுத்துவிட்டுக் கோழியுடன் புறப்பட்டான் அவன். ஊருக்கு அருகில் வந்து கொண்டிருந்த அவனைச் சந்தித்தான் ஒருவன். தன் கையிலிருந்து முட்டையைக் காட்டி, "இதை உடனே சமைத்துச் சாப்பிடலாம், அதனால் கோழிக்கு மாற்றிக் கொள்வோமா?" என்று கேட்டான். அவனும் உடனே கோழியைத் தந்துவிட்டு முட்டையைப் பெற்றுக் கொண்டான்.

இந்தச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்த ஒருவன்,
"என்ன இவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறாய்? மாட்டைக் கொடுத்து முட்டையுடன் வரும் உன்னைக் கண்டு உன் மனைவி கோபம் கொண்டு திட்டப்போகிறாள்" என்றான்.

"என் மனைவி என்னைப் பாராட்டுவாளே தவிர, ஒருநாளும் திட்டமாட்டாள்" என்றான்.
"1000 ருபாய் பந்தயம், உன் மனைவி உன்னைத் திட்டுவாள்" என்றான் அவன்.
"சரி, நீயும் என்னுடன் வா" என்றான் உழவன்.

இருவரும் உழவனின் வீட்டை அடைந்தனர். கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.

"நல்ல காரியம் செய்தீர்கள். யார் மாட்டைப் பார்த்துக் கொள்வது? அதுபோல் ஆடு வளர்ப்பது மட்டும் சாதாரண செயலா என்ன? கோழி இங்கே இருந்தால் ஒரே குப்பையாகிவிடும், உடனே சாப்பிடுவதற்கு முட்டை வாங்கி வந்தீர்களே, உங்கள் திறமை யாருக்கு வரும்" என்று பாராட்டினாள் அவள்.

உழவனிடம் வந்தவன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஆயிரம் ருபாயைத் தந்தான். "நீ செய்தவை முட்டாள்தனமான செயல்கள், ஆனால் உன் மனைவி பாராட்டுகிறாள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே" என்றான் அவன்,

அதற்கு, "நான் என்ன செய்தாலும் பிறர் எதிரில் என்னை என் மனைவி குறை கூறமாட்டாள், பாராட்டவே செய்வாள். இதை அறிந்தே நான் பந்தயம் கட்டினேன்" என்றான் அவன்.

 
பாதுகாப்பு (கவிதை) print Email
கதை-கவிதை - கவிதை
திங்கள், 24 ஏப்ரல் 2006 07:26

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி

எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி

சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்

விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

திருமதி. ஜெஸிலா ரியாஜ், துபாய் (நன்றி: திசைகள் இதழ்)

 


இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள். ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு தொகுப்பு கதை-கவிதை
Twitter
RSS
YouTube
English