
பெற்றோர்களின் கவலைகளில் மிக முக்கியமானது குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்ததாக இருக்கும். “கஷ்டமில்லாமல் வாழப் பணம் தேவை; பணம் இருந்துவிட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்ற எண்ணம் மனத்தின் அடி ஆழத்தில் வேரூன்றிவிட்ட காலகட்டம் இது.
அதிக சம்பாத்தியத்திற்கான இலகுவான வழியாக ‘கல்வி’ அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. தம் பிள்ளைகளை ஐட்டீ துறையிலோ, பொறியியல் துறையிலோ பட்டம்பெற வைத்துவிட்டால், ஆடாமல் அசையாமல் பணம் உற்பத்தி செய்துவிடலாம் என்ற மாயையில் இக்காலப் பெற்றோர் ஆட்பட்டுவிட்டனர்! ஆனால், யதார்த்தமான நிலையோ வேறுவிதமாக உள்ளது!
கல்வி கற்பது எதற்காக இருக்கவேண்டும்?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தேவையான உதிரிபாகங்களாக நம் பிள்ளைகளை உருவாக்க வேண்டுமா? அல்லது எதிர்கால சமூகத்திற்குத் தேவையான விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளர்களாக, வழிகாட்டிகளாக உருவாக்கவேண்டுமா?
ஐட்டீ, பொறியியல் என்ற மாயையில் சிக்கிப் பொறியியலாளர்களாக ஆண்டுதோறும் உருவாக்கப்படும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டப்பூச்சிகளின் இன்றைய நிலைமை என்ன? தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் நிலைமை எவ்வாறு உள்ளது?
குழந்தைகளின் எதிர்கால வாழ்வைக் குறித்து உண்மையாகக் கவலைப்படும் பெற்றோர், அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி குறித்து எவ்வகையில் திட்டமிட வேண்டும்? எதனை நோக்கி அவர்களை நகர்த்த வேண்டும்?
இவ்வாறான இக்கால கட்டத்திற்குத் தேவையான, பெற்றோர்களின் அதிமுக்கிய பிரச்சனைகள் குறித்து ஆழமானதொரு அலசலை முன்வைக்கிறார், கல்வியியலாளரும் சிறந்த சமூகச் சிந்தனையாளருமான சகோதரர் சி எம் என் சலீம் அவர்கள்!
{youtube}hIgwp_hSogo{/youtube}
பெற்றோர் ஒவ்வொருவருக்கும் தேவையான அத்தியாவசிய வழிகாட்டி இது! கட்டாயம் கேளுங்கள்!