சவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி!

Share this:

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வசதிக் குறைவான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகளை செய்ய இளவரசர் அல் வலீத் பின் தலால் முன் வந்துள்ளார்.

சவுதி அரேபிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல் வலீத்.  பெரும் செல்வந்தரான இவர் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.  இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

WAMY எனப்படும் ‘உலக முஸ்லிம் இளையர் அமைப்பு’, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும்.

இந்த நிதியுதவியைப் பெறும் தேவையுடையவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் ரியாத் நகரில் உள்ள WAMY தலமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

சகோ. ஹமாத் அல் அசிம்,

WAMY தலைமையகம்,

கிங் ஃபஹத் சாலை,

உவைஸ் மார்க்கெட் எதிரில்,

ரியாத் – சவுதி அரேபியா

தொலைபேசி எண்- 2050000

Mr Hamad Al Asim

WAMY Head Quarters,

King Fahd Road,

Opposite Owais Market.

Riyadh- Saudi Arabia.

(Phone No: 2050000)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.