துபையில் எளிய முறையில் குர்ஆன் ஓதக் கற்பிக்கும் பயிற்சி!

Share this:

தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ வளைகுடா நாட்டினுள் அடியெடுத்து வைக்கும் பலர், பணியில் இணைந்தபிறகு தமது நிலை என்ன? தமக்குள் புதைந்துள்ள திறமைகள் என்ன? தம்மைச் சுற்றியுள்ள போட்டி நிறைந்த உலகச்சூழலில் தாம் தயார்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டிய தயாரிப்புகள் என்னென்ன? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூட நேரமின்றி இயந்திர கதியில் இயங்கி வருகிறார்கள்.

இந்தக் குறுகிய வட்டச் சிந்தனையில் இருந்து ஒருவர் வெளியேறவும், அவர்தம் அடிமனதில் ஆழமாகப் புதைந்துள்ள தாழ்வு மனப்பான்மைகளை (Inferiority Complex) அகற்றி தன்னம்பிக்கை ஏற்படுத்தும் மகத்துவமிக்க தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் பற்றிய செய்தியைச் சத்தியமார்க்கம்.காம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதன் மூலம் பலர் நற்பலன்களைப் பெற்றிருந்தனர். அதே போன்று துபாயில், எதிர்வரும் 23-11-2007 அன்று துவங்க உள்ள திருமறை ஓதுவதன் மூலம் நினைவாற்றலை வளர்க்கும் ஒரு அற்புதக் குறும்பயிற்சிக்கான தகவலை, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அறியத்தருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இதன் அறிவிப்பு பின்வருமாறு:

தொடங்குவோம்…

எளிய முறையில் அரபி கற்க, குர்ஆனையும், தொழுகையில் ஓதக்கூடியவைகளையும் புரிந்து கொள்ள (தாய்மொழியான தமிழில்)

நவீன மொழிப்பயிற்சி மற்றும் நினைவாற்றல் வளர்ச்சி ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கல்வி, ஆன்மீக, சுயமுன்னேற்ற உத்திகளுடனும் நடைபெறும் இப்பயிற்சி இதுவரை ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இந்தியா மற்றும் சௌதி அரேபியாவில் பல நகரங்களிலும், துபையிலும் முப்பது முறைகளுக்கு மேல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பயன் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– உங்களுக்குள் யாராவது உங்களுக்கு அடிப்படை அரபியை விரைவாகவும், புரிந்து கொள்ளும் விதத்திலும் சொல்லிக் கொடுப்பார்களா என்ற தேடல் இல்லையா?

 – அரபிச் சொற்களைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்ற உத்திகளும் சொல்லிக் கொடுக்கப்படும்.

 – இந்த உத்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றை நீங்கள் எதைப்படிப்பதற்க்கும் பயன்படுத்தலாம் (உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கலாம்!!)

– சாதாரணமாக பல மணி நேரங்கள் தேவைப்படக்கூடிய அடிப்படை அரபி இலக்கணத்தை நிமிடங்களில் கற்றுக் கொள்ளலாம். அடிப்படைக் குர்ஆனிய அரபி மற்றும் காலம் காலமாக தொழுகையில் ஓதிக்கொண்டிருக்கும் வாசகங்களின் பொருளை அறிந்து கொள்வதற்காகச் சில மணிநேரங்களை ஒதுக்கினால் போதும் என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

நடத்துபவர்

சகோதரர் ஜலாலுதீன்

காலம்

மூன்று வகுப்புகள் – 8 மணி நேரம் / வகுப்பு (ஒவ்வொரு
வகுப்பிலும் தொழுகைக்கும் மதிய உணவிற்க்கும் நேரம்
கொடுக்கப்படும்)

பதிவுக்கட்டணம்

திர்ஹம் 50 – (மூன்று வகுப்புகள், புத்தகம், போஸ்டர், சொற்கள் அடங்கிய அட்டை, குறுந்தகடு மற்றும் உணவு)

இப்பயிற்சியில் குர்ஆனின் கடைசிப் பாகத்தில் உள்ள சில அத்தியாயங்களும், தொழுகையில் சொல்லக் கூடியவைகளும் மற்ற துஆக்களும், அடிப்படை அரபி இலக்கணமும் அடங்கும்.


இன்ஷா அல்லாஹ், இவற்றின் மூலம் நீங்கள் சுமார் 100 வார்த்தைகளின் பொருளைப் புரிந்து கொள்வீர்கள். மொத்தக் குர்ஆனில் உள்ள சுமார் 78,000 வார்த்தைகளில் இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட 40,000 முறை (குர் ஆனின் 50%) வரும்.

12 வயதிற்க்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி வழங்க இயலா நிலையிலுள்ளோம்

இந்தப் பயிற்சியின் மூலம் பயன் பெற வேண்டுமென்றால் உங்கள் குறைந்தபட்சத் தகுதியாகக் குர்ஆனைச் சாதாரணமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும்.

பயிற்சி மொழி – தமிழ்

தேதி : இன்ஷா அல்லாஹ்


23.11.2007 வெள்ளிக்கிழமை
30.11.2007 வெள்ளிக்கிழமை
07.12.2007 வெள்ளிக்கிழமை

நேரம் காலை 8.00 – மாலை 5.00

இடம்

கேரளா முஸ்லிம் கல்சுரல் சென்டர், 4வது தளம்,
அஃப்கர் டிரேடிங் பில்டிங், சப்கா சாலை, தெய்ரா, துபை (சப்கா பஸ் நிறுத்தத்திற்கு எதிரில்)

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

குலாம் : 050 2282348

ஜலால் : 050 6142633
ஜமீல் : 050 3508191

முஹம்மத்: 050 4567487

முன்பதிவுக்கான கடைசித் தேதி – நவம்பர் 20, 2007 (மிகக் குறைந்த இடங்களே உள்ளதால் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.