ரமளான் சிந்தனைகள் – 24

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.


சூரத்துல் பகரா

அல்குர்ஆன் (ஆடியோ)

سورة البقرة
2-153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0021531.mp3{/saudioplayer} يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
2-154 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0021541.mp3{/saudioplayer} وَلاَ تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَات ٌ بَلْ أَحْيَاء ٌ وَلَكِنْ لاَ تَشْعُرُونَ
2-155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0021551.mp3{/saudioplayer}

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْء ٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْص ٍ مِنَ الأَمْوالِ وَالأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

2-156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0021561.mp3{/saudioplayer} الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَة ٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
2-157 இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0021571.mp3{/saudioplayer}

أُوْلَائِكَ عَلَيْهِمْ صَلَوَات ٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَة ٌ وَأُوْلَائِكَ هُمُ الْمُهْتَدُونَ

இதை வாசித்தீர்களா? :   இஃதிகாஃப் எனும் இறை தியானம்!