சத்தியமார்க்கம்.காம்

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) print Email
பொதுவானவை - பொதுவானவை
திங்கள், 17 மே 2010 00:16

பேரா. (முன்னாள் பெரியார்தாசன்) அப்துல்லாஹ்

"என்ன ... இப்புடி திடீர்னு ...?"

தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.

நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை - முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.

இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.

அதில், "இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது" என்று பழைய பெரியார்தாசனை 'உன்னிப்பாக'க் கவனித்து வந்த, 'பெரியாரிஸ்ட்' ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள்,

  1. ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது.

  2. பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது.

  3. புத்த மார்க்கத்தில் போய்ச் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது.

  4. 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியது.

  5. தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது.

  6. பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது.

  7. மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது.

ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற 'பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக'த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் 'பெரியார்தாசன்' என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.

அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, "சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?" என்று கேட்டபோது, "இன்ஷா அல்லாஹ்" என்றார்.

நேர்காணலுக்கு முதல்நாள் நிகழ்ச்சியின் முடிவில், முனைவரைச் சந்தித்து நேரடியாகக் கோரிக்கை வைத்தபோது மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தார். மறுநாள் 08.05.2010 காலையில் தம்பி அஷ்ரஃபுடன் புறப்பட்டு, முனைவரையும் அழைத்துக் கொண்டு, துபையிலுள்ள 'இஸ்லாமியத் தகவல் மையம்' போய்ச் சேர்ந்தோம்.

அந்த மைய நூலகத்தின் ஒரு பகுதியில் நேர்காணல் தொடங்கியது. முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் எனது வினாக்களுக்குப் பொறுமையாகவும் சில கட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டும் விளக்கமளித்தார். அவரது முழுமையான நேர்காணல், இங்குக் காணொளியாக வெளியிடப் பட்டுள்ளது.

"எல்லாவற்றையும் பார்த்துவிடலாம். ஒவ்வொன்றாகக் கேளுங்கள்" என்று முனைவர் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டார். அவரது நேர்காணலின் சுருக்கம்:

சத்தியமார்க்கம்.காம்:

ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது பற்றிச் சொல்லுங்கள்.

பேரா. Dr. அப்துல்லாஹ்:


எனது பதினேழாவது வயதில் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு விழாவில் பேசுவதற்காகப் பெரியார் அங்கு வந்திருந்தார். அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதினேன்.

Dim lights Embed Embed this video on your site

அந்தக் கவிதையின் அடியிலுள்ள எனது இயற்பெயரை மாற்றிப் போடும்படி என் பேராசிரியர் அறிவுறுத்தியபோது "பெரியார்தாசன்" எனப் போட்டுக் கொண்டேன். அதன் பின்னர் பெரியாரைக் கற்று, அவரது சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவரது சீர்திருத்தக் கருத்துகளைப் பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்தேன். ஒரு 17 வயது இளைஞன், அவனது அப்போதைய  அறிவுத்திறனுடனே, சிந்தனையுடனேயே 64 வயதிலும் இருக்க வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஒரு கம்பளிப் பூச்சியை வண்ணத்துப் பூச்சியாக வளர்ச்சி பெறக்கூடாது என்று யாரும் தடுக்கவியலாது. அறியாமை முடிகள் உதிர்ந்த கம்பளிப் பூச்சியாக, அறிவுச் சிறகுகள் முளைத்த வண்ணத்துப் பூச்சியாக நான் இப்போது மாறிப் போனேன். இது என் சொந்த வளர்ச்சி. இதில் குறைகூற, குற்றம் சாட்ட யாருக்கும் உரிமையில்லை.

சத்தியமார்க்கம்.காம்:

பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்:

கம்யூனிஸத்துக்கு நான் போகவில்லை; கம்யூனிஸ்ட்டாக மாறவுமில்லை. கம்யூனிஸம் என்னுடன் எப்போதும் இருக்கிறது; இப்போதும் இருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம்:

புத்த மார்க்கத்தில் போய்ச் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்:

பாபா ஸாஹிப் அம்பேத்கர் எழுதிய 52 பிரிவுகள் அடங்கிய அவரது நூலை மொழி பெயர்த்தபோது, புத்த மதத்தில் அற்புதமான பல கருத்துகள் இருந்ததைப் படித்து, அவற்றால் ஈர்க்கப் பட்டேன். அப்போதும் எனது இறைமறுப்புக் கொள்கை அப்படியேதான் இருந்தது. ஏனெனில் புத்த மதத்தில் இறையென்று ஒன்றில்லை. "அன்பே இறை" என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். புத்தரின் 2000ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குக் கென்னெத் லேனில் உள்ள புத்தமதத் தலைமையகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்ற பெரியர், புத்தமதத்தின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசினார்."புத்தி கொண்டு சிந்திப்பவன் புத்தன்; எனில் நானும் புத்தன்தான்" என்று கூறினார். பெரியார் புத்தானாக இருந்தபோது பெரியார்தாசன் புத்தனாக இருந்ததில் விமர்சனத்துக்கு இடமேயில்லை.

சத்தியமார்க்கம்.காம்:

'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியதைப் பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்:


அது நான் எழுதியதல்ல; ஒரு நேர்காணல். ஆதிசங்கரரைப் புகழ்ந்த குற்றச்சாட்டில் கூடுதலாக விளக்க வேண்டியவை உள்ளன. 'இந்துத் தத்துவம்' என்பது வேறு; இந்தியத் தத்துவம் என்பது வேறு. இந்துத் தத்துவம் என்பது வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் மனிதர்களை சாதிவாரியாகக் கூறுபோட்ட பார்ப்பனீயம் ஆகும். இந்தியத் தத்துவம் என்பது சாங்கியம் (கபிலர்), யோகம் (பதஞ்சலி), மீமாம்சம் (ஜெய்மினி), நியாயம் (கோதமர்), வைசேஷிகம் (கணாதர்), வேதாந்தம் (ஆதிசங்கரர்) ஆகியவையாகும். இவற்றை அறுசமயம் என்பர். இந்த ஆறிலும் கடவுள் கொள்கை என்ற ஒன்றே இல்லை. ஆனால், சிலவற்றுள் தவறாக அது புகுத்தப் பட்டது.

Dim lights Embed Embed this video on your site

ஆதிசங்கரர், தம் ஆசிரியரான கோவிந்த பகவத் என்பவரைப் போற்றிப் பாடிய "பஜகோவிந்தம்" எனும் பாடலை, கோவிந்த'சாமி'க்குப் பாடிய பாட்டாகப் பின்னர் வந்தோர் மாற்றிக் கொண்டனர்.

ஆதிசங்கரரின் பாடல்களுள் அர்த்தமுள்ளவை என நான் குறிப்பிட்ட பாடலை நீங்கள் கேட்டாலும் அவை அர்த்தமுள்ளவைதாம் என ஒப்புக் கொள்வீர்கள். கேட்கலாம், தப்பில்லை:

சத் சங்கத்துவே நித் சங்கத்துவம் (அறிஞர்களோடு சேர்ந்திருந்தால் உன் தனித்தன்மை உனக்குத் தெரியவரும்).

நித் சங்கத்துவே நிர்மோகத்துவம் (உன் தனித்தன்மை உனக்குப் புரிந்துவிட்டால் ஆசைகள் அற்றுப்போகும்).

நிர்மோகத்துவே நிச்சலத் தத்துவம் (ஆசைகள் அற்றுவிட்டால் மனதில் அமைதி உண்டாகும்).

நிச்சலத் தத்துவே ஜீவன் முக்தி (சலனமற்ற அமைதியான மனநிலையே முக்திநிலை).

ஆதிசங்கரர் போட்டிருக்கும் நாமம் அழகாயிருக்கிறது என்பதற்காகவோ அவர் பார்ப்பனர் என்பதற்காகவோ அவரை நான் புகழவில்லை. அத்துவைதம் போதித்த அவரது கருத்துகள் சில அர்த்தமுள்ளவை எனத் தெரிந்து கொண்டு அவற்றைப் புகழ்ந்து, நந்தன் எனும் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டேன்; அவ்வளவுதான். அந்தக் கருத்துகள் அர்த்தமுள்ளவை என்பதில் இன்றைக்கும் எனக்கு வேறுபட்ட கருத்தில்லை.

சத்தியமார்க்கம்.காம்:

தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது ஏன்?

பேரா. Dr. அப்துல்லாஹ்:

மனோதத்துவக் கருத்தரங்குகளில் 'கல்ராசி' பற்றியெல்லாம் நான் பரப்புரை செய்யவில்லை. ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர், என் நண்பர் ராஜராஜன் என்பவர், தன் இல்ல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்திருந்தார். அப்போது நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படத்தை, அவரது 'பெயர்ராசி' விளம்பரத்துக்காகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பது பிற்பாடு தெரிய வந்தது. மற்றபடி எனக்கும் எந்த ராசிக்கும் எவ்விதத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை.

சத்தியமார்க்கம்.காம்

பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்ட விபரம் ...

பேரா. Dr. அப்துல்லாஹ்:


பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஒரு காலகட்டத்தில் நான் வெளியேற்றப் பட்டேன். அதற்கு, நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைக் காரணமாகச் சொன்னார்கள். என்னுடன் கல்லூரியில் பணியாற்றிய பெண்ணொருவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; நானும் விரும்பினேன். திருமணம் செய்து கொண்டோம். அந்தத் திருமணம் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதைக் காரணமாகச் சொல்லி நான் வெளியேற்றப் பட்டேன். அந்த அநீதியான கேலிக்கூத்தை அன்று யாருமே தட்டிக் கேட்கவில்லை.

Dim lights Embed Embed this video on your site

எனவே, யாராலும் கண்டு கொள்ளப் படாமல் தூசி படிந்து கிடந்த 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'க்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்றெண்ணி அதற்குத் தலைமை ஏற்றேன். பின்னர், ஒரு கட்சியை நடத்துவதெல்லாம் எனக்குக் கைவராது என்று கண்டு கொண்டு, அதில் தீவிரம் காட்டவில்லை. அது வெறும் லெட்டர்பேடு கட்சிதான்.

சத்தியமார்க்கம்.காம்

மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பதுதான் தீவிர விமர்சனமாகியுள்ளது ...

பேரா. Dr. அப்துல்லாஹ்:


இஸ்லாத்தை எனது வாழ்வியல் நெறியாக நான் ஏற்றுக் கொண்டது சிலர் கேட்பதுபோல் திடீர் நிகழ்வல்ல; பத்தாண்டுகால மனப் போராட்டத்தின் முடிவு இது. கடவுள் மறுப்பைக் குறித்த மீளாய்வு எனக்குத் தோன்றி வெகுகாலமாகி விட்டது. அதன் எதிரொலியாகக் கல்கி இதழில் 52 வாரம் 'நான் நாத்திகன் இல்லை' எனும் சுய பிரகடனத்தைத் தலைப்பிட்டு எழுதினேன். அத்தொடர் தொடங்கியது 2000ஆம் ஆண்டில். கடவுளைத் தேடிய எனது முயற்சியில் பல மதங்களைப் படித்துப் பார்த்து, இறுதியாக நான் மெய்க்கடவுளைக் கண்டு கொண்டது குர்ஆனில். நான் வெளியில் இருந்தபோது இஸ்லாத்திற்குக் குறைவும் இருந்ததில்லை; இணைந்த பிறது அதற்குத் தனிப் பெருமையும் சேர்ந்துவிடவில்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் அது என்றும் வாழும் மார்க்கம்.

Dim lights Embed Embed this video on your site

இஸ்லாத்தைத் தேர்ந்தது என் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டது அரசியலுக்குத்தான். இஸ்லாத்தில் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவை உண்மை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற அரசியல் ஆசை இருக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

-o-

நன்றி கூறி, பிரார்த்தனையுடன் நேர்காணலை நிறைவு செய்து, பகல் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தபோது, பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தது.

"எவ்வளவோ பாடுபட்டும் நம் நாட்டில் சாதிகள் ஒழிந்துவிடவில்லை. சாதி ஒழிப்பை மேடைபோட்டுப் பேசிவிட்டு என் சொந்த ஊருக்குப் போனால், என்னை என் சாதியோடு சேர்த்தே எனது ஊரைச் சேர்ந்தோர் குறிப்பிட்டுப் பேசுவதைக் காதால் கேட்க வேண்டிய நிலை இருந்தது!. இப்போது என் சாதி, என்னை விட்டும் தானாக ஓடிப் போனதே! நம் ஊர்ப்பக்கம் சாதி-சனம் என்று சேர்த்துச் சொல்வார்களல்லவா? சாதியோடு சேர்ந்து கொண்டு என் சனமும் என்னை விட்டு ஒதுங்கிப் போனது. கடந்த பத்து நாட்களுக்குள் எனது குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு எனக்கு அழைப்பில்லை; ஓர் இறப்புக்கு அறிவிப்பில்லை! இஸ்லாத்தில் இணைவதால் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இஸ்லாத்துக்கு வந்தேன்"

"பெரியாரின் மறைவுக்குப் பிறகு கொஞ்சகாலம் சாதியாதிக்கம் அடங்கிக் கிடந்தது. இன்றோ, சங்கங்கள் வளர்க்கும் சாதிகள் என்பதாய்ச் சாதிச் சங்கங்கள் தமிழகத்தில் பெருகிப் போய்விட்டன. சாதி அரசியல் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் ஆட்சி செய்கிறது"

"சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற - கடவுள் மறுப்பு தவிர்த்த - பெரியாரின் கொள்கைகள் இன்றும் என்னிடம் உள்ளன. கடவுள் மறுப்புப் பற்றிய எனது மீளாய்வுகூட ஒருவகையில் பெரியாரின் கொள்கை அடிப்படையில் எழுந்ததுதான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் முனைவர் அப்துல்லாஹ்.

"எப்படி?"

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),

109, Mahalakshmi Nagar,

Thiruverkadu, Chennai 600077

Tamilnadu, India

Tel : 044-26801919; Cell : +91-9444146444

Email : எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

"உயிர்களின் தொடக்கம் குறித்து இருவகை இயல்களே உள. ஒன்றாவது பரிணாமவியல்; இரண்டாவது படைப்பியல். பரிணாமவியலைப் பெரியார் இறுதிவரை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், பரிணாமவியலைப் பற்றி அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவே, மறுதலித்தார். படைப்பியலைப் பற்றிக் கவலைப்படாததால் அதையும் மறுத்தார். இரண்டில் ஒன்று இருக்க வேண்டும்; அது உண்மையானதாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், பரிணாமவியல் தவறென்றால் படைப்பியல் மட்டுமே எஞ்சுகிறது. அந்தச் சிந்தனை என் தேடலாக மாறியது. 'எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும்' எனும் முடிவு எனக்கு ஏற்பட்டு வெகு காலமாகி விட்டது. அது தெளிவாகத் தெரிந்தது இறைவேதமான குர்ஆனை ஆய்வு செய்தபோதுதான். அல்ஹம்து லில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே!"

எல்லாப் புகழுக்கும் உரிய வல்ல இறைவன், நமக்கும் அவருக்கும் ஈமானில் உறுதியையும் இறைமறையில் ஈடுபாட்டையும் இறைவழி இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன்-ஹதீஸில் தெளிவையும் அதிகமதிகம் வழங்கியருள வேண்டும்; உண்மை இஸ்லாத்தில் உறுதியுடன் நடைபயில உதவி புரிய வேண்டும்!

- ஜமீல் (அமீரகப் பிரதிநிதி, சத்தியமார்க்கம்.காம்)

Trackback(0)
கருத்துக்கள் (20)add comment
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும்

//இந்தியா இஸ்லாமிய நாடாக ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் அதனால் பெரிய கவர்னர் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல, அப்போது தான் அனைவருக்கும் சமத்த்துவம் கிடைக்கும், ஒழுக்கமான வாழ்கை அமையும் , உண்மையான மதுவிலக்கு அமலுக்கு வரும்,, சிகரெட்டு பெட்டியில் அது உடலுக்கு கெடுதி என்று எழுதி விற்க இயலாது, குடியை கெடுக்கும் என்று எழுதி விட்டு அதை குடிப்பதை அனுமதிக்கப் படாது, பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படாது.....இந்தியாவின் உறவு எண்ணெய் வளம் வாய்ந்த அரபு நாடுகளோடு நெருக்க்மானதாக ஏற்படும், இந்தியா அமெரிக்கா போன்ற எந்த நாடுகளையும் கண்டு அஞ்ச வேண்டாம்,,, அத்னால் தான் இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன்....// அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹுக்கே!

ஒவ்வொரு உண்மையான மூஸ்லிமின் உள்ளத்திலும் உள்ள
"ஒரு மூஸ்லிம் தனக்கு விரும்புவதை தனது சகோதரர்களுக்கும் நாட வேண்டும் " என்ற இஸ்லாமிய போதனையின் வெளிப்பாடு இது,
இதை தெளிவாக துணிவாக வெளிப்படுத்திய 'சகோதரர் முனைவர் அப்துல்லாஹ்' அவர்க்ள் பாராட்டுகுரியவர், அவருக்கும் இதை பதிவேற்றிய சத்தியமார்க்கம் தளத்தினர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக். ஆமீன்
1

May 18, 2010 00:42
0
nallvan:
athaipol saudi arabia hindu naadaka vendum ,itharku ellam valla siva peruman arula vendum,sivaya nama om
2

May 18, 2010 05:28
0
bahurudeen:
ஒவ்வொரு உண்மையான மூஸ்லிமின் உள்ளத்திலும் உள்ள
"ஒரு மூஸ்லிம் தனக்கு விரும்புவதை தனது சகோதரர்களுக்கும் நாட வேண்டும் " என்ற இஸ்லாமிய போதனையின் வெளிப்பாடு இது,
இதை தெளிவாக துணிவாக வெளிப்படுத்திய 'சகோதரர் முனைவர் அப்துல்லாஹ்' அவர்க்ள் பாராட்டுகுரியவர், அவருக்கும் இதை பதிவேற்றிய சத்தியமார்க்கம் தளத்தினர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக். ஆமீன்
3

May 18, 2010 08:16
0
Safi:
Hi Mr. nallvan,

A message in a box with Prof Periyar Dhasan's contact details is published in this article for you.

Cheers !
4

May 18, 2010 10:28
0
Basheer:
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் நல்(ல)வன்,
சவூதி இந்து நாடாக ஆவது பற்றி நாம் இப்போது சிந்திக்கத் தேவை இல்லை என எண்ணுகிறேன்.
சிவ பெருமான் எல்லாம் வல்லவனா? அப்படியெனில், பிரம்மா, விஷ்னு, தமிழகத்துக்கு மட்டும் கடவுளான சிவ பெருமானின் மகன் முருகன், 33 கோடி தேவர்கள் என 33கோடிக்கும் மேற்பட்ட கடவுள்கள் எல்லாம் வல்லவர்கள் இல்லையா?
சரி, சிவ பெருமான் எல்லாம் வல்லவராகவே இருப்பின், தன்னுடைய மகனான பிள்ளையாரை ஏன் அடையளம் தெரியாமல் போனது. அதனால் தான் அவரது தலையை துண்டிக்க நேர்ந்தது என்பது நானறிந்தது. சரி, பிள்ளையார் அவர் பிள்ளையாகவே இருப்பினும் தவறு செய்தால் தலையை ஏன் துண்டிக்க வேண்டும்? எந்த மனிதனும் கூட இவ்வாறு செய்ய மாட்டானே..
எல்லாம் வல்ல சிவ பெருமான் ஏன் செய்தார்?
சகோதரரே! சிந்தியுங்கள்.. உங்களின் வேதப்படியும் எங்கள் வேதப்படியும் இறைவன் ஒருவனே..

கடவுளைப் பற்றி உங்கள் வேதங்களின் குறிப்புகள் சில..

Concept of God according to Hindu Scriptures:

We can gain a better understanding of the concept of God in Hinduism by analysing Hindu scriptures.

BHAGAVAD GITA:

The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita.
Consider the following verse from the Gita:

"Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures."
[Bhagavad Gita 7:20]

The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God.

UPANISHADS:

The Upanishads are considered sacred scriptures by the Hindus.

The following verses from the Upanishads refer to the Concept of God:

1. "Ekam evadvitiyam"
"He is One only without a second."
[Chandogya Upanishad 6:2:1]1

2. "Na casya kascij janita na cadhipah."
"Of Him there are neither parents nor lord."
[Svetasvatara Upanishad 6:9]2

3. "Na tasya pratima asti"
"There is no likeness of Him."
[Svetasvatara Upanishad 4:19]3

4. The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:

"Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam."

"His form is not to be seen; no one sees Him with the eye."
[Svetasvatara Upanishad 4:20]4

1[The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
[Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]

2[The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

3[The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

4[The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

THE VEDAS
Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.

1. Yajurveda
The following verses from the Yajurveda echo a similar concept of God:

1. "na tasya pratima asti"
"There is no image of Him."
[Yajurveda 32:3]5

2. "shudhama poapvidham"
"He is bodyless and pure."
[Yajurveda 40:8]6

3. "Andhatama pravishanti ye asambhuti mupaste"
"They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink
deeper in darkness, those who worship sambhuti."
[Yajurveda 40:9]7

4. Sambhuti means created things, for example table, chair, idol, etc.

The Yajurveda contains the following prayer:
"Lead us to the good path and remove the sin that makes us stray and wander."
[Yajurveda 40:16]8

5[Yajurveda by Devi Chand M.A. page 377]

6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541]

2. Atharvaveda

The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3:
1. "Dev maha osi"
"God is verily great"
[Atharvaveda 20:58:3]9

3. Rigveda
1. The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus.
The Rigveda states in Book 1, hymn 164 and verse 46: "Sages (learned Priests) call one God by many
names."
[Rigveda 1:164:46]

2. The Rigveda gives several different attributes to Almighty God. Many of these are mentioned in
Rigveda Book 2 hymn 1.

Among the various attributes of God, one of the beautiful attributes mentioned in the Rigveda Book II hymn 1 verse 3, is Brahma. Brahma means ‘The Creator’. Translated into Arabic it means Khaaliq. Muslims can have no objection if Almighty God is referred to as Khaaliq or ‘Creator’ or Brahma. However if it is said that Brahma is Almighty God who has four heads with each head having a crown, Muslims take strong exception to it.

Describing Almighty God in anthropomorphic terms also goes against the following verse of Yajurveda:

"Na tasya Pratima asti"
"There is no image of Him."
[Yajurveda 32:3]

Another beautiful attribute of God mentioned in the Rigveda Book II hymn 1 verse 3 is Vishnu. Vishnu means ‘The Sustainer’. Translated into Arabic it means Rabb. Again, Muslims can have no objection if Almighty God is referred to as Rabb or 'Sustainer' or Vishnu. But the popular image of

9[Atharveda Samhita vol 2 William Dwight Whitney page 910]

Vishnu among Hindus, is that of a God who has four arms, with one of the right arms holding the Chakra, i.e. a discus and one of the left arms holding a ‘conch shell’, or riding a bird or reclining on a snake couch. Muslims can never accept any image of God. As mentioned earlier this also goes against Svetasvatara Upanishad Chapter 4 verse 19.

"Na tasya pratima asti"
"There is no likeness of Him"

The following verse from the Rigveda Book 8, hymn 1, verse 1 refer to the Unity and Glory of the Supreme Being:

3. "Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata"
"O friends, do not worship anybody but Him, the Divine One. Praise Him alone."
[Rigveda 8:1:1]10

4. "Devasya samituk parishtutih"
"Verily, great is the glory of the Divine Creator."
[Rigveda 5:1:81]11

Brahma Sutra of Hinduism:

The Brahma Sutra of Hinduism is:

"Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan"

"There is only one God, not the second; not at all, not at all, not in the least bit."

Thus only a dispassionate study of the Hindu scriptures can help one understand the concept of God in Hinduism.

0[Rigveda Samhita vol. 9, pages 2810 and 2811 by Swami Satya Prakash Sarasvati and Satyakam Vidyalankar]

11[Rigveda Samhita vol. 6, pages 1802 and 1803 by Swami Satya Prakash Saraswati and Satyakam Vidyalankar]

as from the sun." The Prophecy confirms:

1. The name of the Prophet as Ahmed since Ahmed is an Arabic name. Many translators misunderstood it to be ‘Ahm at hi’ and translated the mantra as "I alone have acquired the real wisdom of my father".

2. Prophet was given eternal law, i.e. the Shariah.

3. The Rishi was enlightened by the Shariah of Prophet Muhammad. The Qur’an says in Surah Saba Chapter 34 verse 28 (34:2smilies/cool.gif:

"We have not sent thee but as a universal (Messenger) to men, giving them glad tidings and warning them (against sin), but most men understand not."

நன்றி : www.irf.net
5

May 18, 2010 11:29
0
Mumbaikar :
Anbu Chakotharar Nallvan

// athaipol saudi arabia hindu naadaka vendum ,itharku ellam valla siva peruman arula vendum,sivaya nama om //

Ungalukku oru chiriya Vilakkam , Hindu enbadhu oru Geographical puukoola vaarthai.Ithu Indiyaavil vaalum anaivaraiyum avar entha madaththai chaarndhavaraaga irundaalum emmadaththaiyum chaaraamal irundalum indiyarai kurippida payan paduththap padukirathu.

Aagaiyaal Indiavai thavira veru endha nadum hindu naadaka aaka mudiyaadhu enbathu thelivu.

Thangal Hindu madham enbadu indiavil ullaa Varunaasira Kolgai, Chilai Vanakkam , ponra uruva vazhipaattu maRRum chadangugalai patri kurippidukireerghal enraal........ Adhu manitha karangalal uruvaakka patta thavaraana kolgai enru unarndha makkal adhai kaividukinranar.....

Unghal Manchatchikey athu theriyum adhu Unmaiyil Egha iraivan Manaidha kulaththirku Valangiya Kolgaiyo Margamo illai, athu chila aadhika chakthikalaal samudayaththai kooru pottu surandida manitharkalal eerpaduththap pattathu athu iraivainidam etruk kolla thakathanru. Paarka

"Andhatama pravishanti ye asambhuti mupaste"
"They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.).
"They sink deeper in darkness, those who worship sambhuti." [Yajurveda 40:9]7

Melum thelivu thevai enil keeleyulla chuttiyil kaaNalaam
http://www.irf.net/index.php?option=com_content&view=article&id=146&Itemid=129

Egha Iraivan thangalukkum nam anaivarukkum indha Saththiyathai Unarndhu eedetram pera arul purivanaaka.

Thangal anbu sakotharan.
6

May 18, 2010 11:51
0
Basheer:
அமீரக்கிளை - அமீரகக்கிளை. திருத்திக் கொள்ளவும்!!
7

May 18, 2010 12:05
0
மட்டுறுத்துனர்:
அன்பான வாசகர்களுக்கு,

பதிவுக்குத் தொடர்பான மாற்று/எதிர்க் கருத்துகள் உங்களிடம் ஏதுமிருந்தாலும் பண்பாடு குறையாமல் எழுதினால் இங்கு அவை அனுமதிக்கப் படும்.

அன்றி,

உங்கள் கருத்துகள்
பதிவுக்குத் தொடர்பில்லாமல் இருந்தாலோ
பேசுபொருளைத் திசைதிருப்புவதாக இருந்தாலோ
பண்பாடு தவறிய சொற்களுடன் இருந்தாலோ

அம்மடல்கள் இங்கு மட்டுறுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
8

May 18, 2010 15:47
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் பஷீர்,

தாங்கள் சுட்டிக் காட்டிய எழுத்துப் பிழை திருத்தப் பட்டது.

மிக்க நன்றி!
9

May 18, 2010 15:48
0
t.k.s.villalan:

My friend periyaardasan, once believed and preached everywhere that Humanbeings(Humankind) or humanity should govern India. Now, after converting himself into Islam, he advocates that islam should rule India. Earlier he was following periyarism. Now He follows islam.
10

May 18, 2010 16:35
0
kulam:
ஐயா முனைவர் அப்துல்லா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

சிறிது நாட்களுக்கு முன்பு 'வினவு' வலைதளத்தில் தங்களிடம் தொலை பேசியதை, தங்களுக்கு தெரிவிக்காமல் பதிவு செய்த ஆடியோவை வெளியிட்டு சில தமாஷ் செய்திருந்தார்கள்.

அவர்கள் செய்தது தமாஷேயானாலும் நான் தங்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கவே இந்த பின்னூட்டம்.

தங்களிடம் தொலைபேசியவர் இஸ்லாம், குர்ஆன் குறித்து சிலகேள்விகளை முன்வைத்து உறையாடும்போது இப்போது இந்த மாதரி ஆதாரமான மார்க்க விஷயங்களை பேச இன்னும் நான் தயாராகவில்லை என்று அறிவுபூர்வமாக சொல்லியும் அவர்கள் அதை வெளியிட்டு தங்களை அடையாளப் படுத்திக்கொண்டார்கள்.

என்னுடைய வேண்டுகோள்,

தாங்கள் மேலும் மார்கத்தை ஆழமாக ஆய்ந்து முழு தகுதியையும் பெற்று இவர்களையும் இவர்களை போன்றவர்களையும் முறியடிக்கனும் அதற்கு தாங்கள் தகுதியானவர் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறிது காலம் எடுத்துகொண்டாலும் நல்ல மார்க்க அறிஞர்களுடன் கலந்து இதை இஸ்லாத்திற்காக ஆற்றும் பெரும் சேவையாகவே கருதி செய்யவேணும்.

உலக மாக்கள் அனைவரையும் வென்ற குர்ஆன் இவர்களை இலகுவாக புறமுதுகிட வைக்கும் என்ற நம்பிக்கையுடன்,

kulam
11

May 18, 2010 18:04
0
Muhammad Ashik:
அன்புள்ள t.k.s.villalan அவர்களே,
" humanity should govern India " என்று சொல்வதும்
" islam should govern India" என்று சொல்வதும் ஒன்றுதான்....
both are one and the same....
12

May 18, 2010 21:35
0
nallvan:
bashheer.if so called allah is clevar,jus answer one simple question ,alllah create u fully .y u do the sunath,if sunath is done by allah .he should sentu to earth with sunath.r he forget u remind him,afganistan,pakistan,bangaladesh.indonesia.palestine.irag.iran.sudan.all goven by so called humans.cheers
13

May 19, 2010 01:26
0
Mumbaikar:
Dear Brother Villalan

Thanks for your views that Humanity should govern India.

In fact Islam the religion for Humanity from Almighty God says Humanity Should prevail in whole world.
In that context we can say Humanity should govern whole world and that can be achieved by
implementing the will guidance and governance of Almighty God which is Islam.

Islam is not a religion founded by Muhammad (PBUH) or any Human being, it was the way of life and guidance for whole Humanity given by Almighty God from First Human being created in thiis world.

Humanity is created by God from one pair of Man and Woman ,our Father and mother as per Quran and whole mankind is a single family see Quran Chapter 49 : verse 13 and Chapter 4 : verse 1. etc.

Even Hindu Scriptures have this concept of " VASUDEVA KUTUMBAKAM' which is being forgotten and The Christian bible too says that whole mankind is Created from ADAM & EVE....

Man got deviated from these teachings and guidance from Almighty GOD and pursuing his desires, selfishness, material gains etc started discriminating humanity and got into numerous division which has resulted in all trials tribulations and problems in the world from root level to global.

So if man comes back to this basic concept and guidance sent forthe mankind by its creator, Alnighty God then and only then Humanity can prevail in our selves, our family, our society, our community , our state our Nation and ... and ... and in the whiole world..

May God Almighty bless us all and broaden our heart to accept this truth and implement it in us ever...
14

May 19, 2010 10:41
0
M. MUHAMMAD:
MR NALLAVAN

//.if so called allah is clevar,jus answer one simple question ,alllah create u fully .y u do the sunath,if sunath is done by allah .he should sentu to earth with sunath.r he forget u remind him //

ALLAH NEVER FORGETS ANYTHING NOR NEEDS ANYTHING TO BE REMINDED.

BUT REMINDED YOU WILL BE ANSWERING TO ALLAH FOR WHAT YPU DO AND SAY ... ONE DAY OR ANOTHER... AND NOT HE .. HE IS SUPREME THE CREATOR OF EVERYTHING ALL WISE... REFER
AL QURAN CH 2: 255, CH 102 : 1 TO 4. AND 6 : 106 AND MANY MORE......

NOW BEFORE COMING TO YOUR QUESTION , LET ME ALSO ASK YOU A SIMPLIE QUESTION
YOU BELIEVE IN GOD AND YOU CALL HIM SHIVA I SUPPOSE....

DID HE FORGET TO SEND YOU AND ALL OF US ON THIS EARTH WITHOUT HAIR, NAILS, MOUSTACHE BEARD , ETC WHICH GROW... WHY ARE YOU CUTTING IT DONT CUT IT OTHER WISE YOU WILL BE REMINDING HIM THAT THIS EXTRA GROWTH IS NOT NEEDED. ( BY THE WAY EYE BROW HAIR AND OUR TEETH, ALSO OUR TOUNGUE WITH WHICH WE ASK SUCH QUESTIONS DO NOT GROW DID YOU THINK ABOUT THIS WE DONT NEED TO CUT OUR TOUNGUE TEETH AND EYE BROW????)

SO THIS IS THE WISDOM OF GOD ALMIGHTY WHO KNOWS WHAT AND WHEN IS NECESARY MOST FOR MEN AND WHAT NOT NECESSARY .

NOW COMING TO YOUR QUESTION TODAY SCIENCE TELLS THAT IN THE WOMB OF THE MOTHER IT IS GOOD FOR THE CHILD TO BE UNCIRCUMCISED AND IT IS BETTER IN THIS WORLD TO BE CIRCUMCISED AS PER MANY MEDICAL RESEARCHES... AND THUS ALLAH GOD ALMIGHTY CREATOR OF EVERY THING INCLUDING YOU AND YOUR TONGUE IS WISEST AND WE ARGUE IN IGNORANCE.

MAY ALMIGHTY ALLAH BLESS US AND GUIDE US ALL TO ACCEPT THE TRUTH AND REPENT FOR FORGIVENESS AND GUIDANCE FOR SUCESS IN BOTH THE WORLDS.
15

May 19, 2010 17:56
0
Basheer:
Thank You Brother M.Muhammad for joining with me in Conveying/Clarifying the Message (of Islam),

Dear Brother Nall(a)van,

Think of God and answer my Question about your doubt in oneness of God!
First think of and Decide about the Creator. Secondly, you can analyse whether your creator really did exist and is he wise enough, etc...

An intellectual is a person who uses intelligence (thought and reason) and critical or analytical thinking, either in a professional or a personal capacity - wiki.
This is the special thing given to Human Beings by the only Creator of Man and all that exists in this worlds, most Gracious, most Merciful..

Please forgive me if I have said anything wrong other than conveying the truth..
16

May 20, 2010 12:02
0
MOHAMEED SALEEM :
அஸ்ஸலாமு அலைக்கும்
டாக்டர் அப்துல்லா நேர்காணல் பார்த்தேன்.
நம் ஊர்ப்பக்கம் சாதி-சனம் என்று சேர்த்துச் சொல்வார்களல்லவா? சாதியோடு சேர்ந்து கொண்டு என் சனமும் என்னை விட்டு ஒதுங்கிப் போனது. கடந்த பத்து நாட்களுக்குள் எனது குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு எனக்கு அழைப்பில்லை; ஓர் இறப்புக்கு அறிவிப்பில்லை! இஸ்லாத்தில் இணைவதால் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இஸ்லாத்துக்கு வந்தேன்"என்று டாக்டர் அப்துல்லா நேர்காணலும் போது சொன்னார்கள்.
நானும் இஸ்லாத்துக்கு வந்தவர் தான் நானும் பலவற்றை இழந்து இருகின்றேன் நான் சவுதில் கஷ்டபட்டு உழைத்த பொருள்லாதார்த்தை இழந்து இருகின்றேன்.ஆனால் அல்லாஹ் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து அல்லாஹ்விடிம் நான் துவா மட்டும் செய்வேன்.நான் இளந்தை பற்றி கவைபடவில்லை காரணம் அல்லாஹ் கொடுத்தான் அவன் எண்ணிடும் எடுத்து கொண்டான் என்றுதான் நினைப்பேன். அதே போல் என் உற்றார்கள் நான் கஷ்டப்பட்டு உழைத்த எண்ணிடும் பெற்று விட்டு அவர்கள் முனேற்றம் அடையவில்லை இன்றும் நான் தான் கொடுகின்றேன்.
அல்லாஹ் ஒரு முஸ்லிமை கஷ்டப் படுத்தினால் அது அல்லவுதலா நன்மைக்கே என்று மனம் வருத்தம் படம்மல் அல்லாஹ்விடிம் நாம் துவா
மட்டும் மறக்கமால் நம் குறைகளை அல்லாஹ்விடிம் நாம் மன்றாடி துவசெய்தால் கண்டிப்பாகா செய்வேண்டும்.
அடுத்து சில முஸ்லிம்கள் எங்களை போல் மாரியவரை புண்படும்படி பேசுகின்ர்ரர்கள். பணம் வாங்கி விட்டுதான் மாறி இருகின்றார்கள் என்று பயம் இல்லமால் புண் படுபடி பேசுகின்றார்கள்.இது என் மனதிற்கு காஸ் டம்மாகா இருகின்றனா.
.எல்லாம் முஸ்லிம்களும் எல்லாம் பெற்று ஒருவருக்கோ ஒருவர் விட்டுக்குடுத்து நாம் அனைவரும் சகொதர்களாகா இருக்க வேண்டும் நான் எல்லாம் நிறைந்தா அல்லாஹ்விடிம் துவா செய்தி முடிகின்றேன்.எல்லபுகளும் இறைவன்கே.
இப்படிக்கு
Mohameed saleem
kadayanallur
17

May 21, 2010 16:44
0
sadiq N:
muhammaad saleemukku allah arul purivanaaka ippadi manam punnakumpadi pesupavarkalidam muraiyaka dheen illaai endruthan porul.ithu pondru kutthi pesuvathu islaamil puthithaaka vantha sakothararukku evvalavu mana ulaichalai erpaduthum enpathai, avarkal mandayil kuttu vaithu puriaya vaikka vendum.avarkalukkaha allahvidam dhua seivoom tholare.
18

May 22, 2010 11:38
0
khaja mydeen:
அஸ்ஸலாமு அலைக்கும். என்னுடைய வேண்டுகோள்,

தாங்கள் மேலும் மார்கத்தை ஆழமாக ஆய்ந்து முழு தகுதியையும் பெற்று இவர்களையும் இவர்களை போன்றவர்களையும் முறியடிக்கனும் அதற்கு தாங்கள் தகுதியானவர் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறிது காலம் எடுத்துகொண்டாலும் நல்ல மார்க்க அறிஞர்களுடன் கலந்து இதை இஸ்லாத்திற்காக ஆற்றும் பெரும் சேவையாகவே கருதி செய்யவேணும்.

உலக மாக்கள் அனைவரையும் வென்ற குர்ஆன் இவர்களை இலகுவாக புறமுதுகிட வைக்கும் என்ற நம்பிக்கையுடன்,
19

June 12, 2010 13:18
0
G u l a m :
wa alaikum slam-warh
சகோதரர் khaja mydeen பதிவில்//உலக மாக்கள் அனைவரையும்// என உள்ளது மாக்கள்- என்பது ஐந்தறிவு உயிர்களை குறிக்கும்.எனவே உலக மக்கள் அனைவரையும்- என திருத்தி படிக்கவும்
20

June 13, 2010 08:33

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தேடுங்கள்; கண்டடைவீர்கள்!

இப்பரந்த உலகையும் அண்ட சராரங்களையும் படைத்தவன் என்று ஒருவன் உண்டா? இல்லையா?. இக்கேள்வியின் மீதான விவாதத்திற்கு, இல்லை என்றும் உண்டு என்றும் இருவேறு பதில்கள் உள்ளன. உண்டு என்பதில்...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:29 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
Twitter
RSS
YouTube
English