இராக் குறித்த US நிலையில் மாற்றம் தேவை – புஷ்

{mosimage}இராக்கின் US நிலை குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்ட 'இராக் ஆய்வுக் குழு' தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. இந்த அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் US வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் மற்றும் முன்னாள் US ஆட்சிமன்ற உறுப்பினரான லீ ஹாமில்டன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த அறிக்கையில் US-ன் தற்போதைய இராக் குறித்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் தேவை என்றும், இனி சிறிது சிறிதாக US இராக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு நடுநிலையோடு விருப்பு வெறுப்பின்றி தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததாக அதன் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் US அதிபர் புஷ் இராக் குறித்த தமது உத்திகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.

இந்த அறிக்கை சிறிது சிறிதாக US தனது படைகளை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது நடக்காவிட்டால், இராக் கடும் குழப்பத்தில் வீழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அமைதியான நிலையான இராக் ஆட்சி நிறுவ வேண்டுமென்றால் இராக்கின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் சிரியா இவற்றின் பங்களிப்பு மிக அவசியம் என்றும், இந்நாடுகளை US பகைத்துக் கொள்ளாமல் இராக்கைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒத்துழைப்புக் கோர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்தே US அதிபர் புஷ் தனது நாட்டின் இராக் குறித்த அணுகுமுறையில் பெரும் மாற்றம் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கையின் முழுமையான  நகலை அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதை வாசித்தீர்களா? :   ஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் ஒழுங்கீனம்