பெஸ்லான் கோர முடிவுக்கு ரஷ்யப் படையினரே காரணம்: புதிய வீடியோ ஆவணம்

Share this:

{mosimage}2004 ஆம் ஆண்டு பெஸ்லான் நகரில் நடைபெற்ற பள்ளிக் குழந்தைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட நிகழ்வில் அனைத்துக் குழந்தைகளும் நெருப்பினால் கொல்லப்பட்ட சோக முடிவுக்கு இதுவரை செசன்யா தீவிரவாதிகள் தான் காரணம் என ரஷ்ய அரசு கூறி வந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஒரு புதிய வீடியோ ஆவணப்படம் இந்த சோக முடிவுக்கு ரஷ்யப் படைகளே காரணம் என வெளிப்படுத்தியுள்ளது.

"மிக நீண்ட காலமாக செசன்யா தீவிரவாதிகள் தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று ரஷ்ய அரசு கூறிவந்தாலும் அந்த வாதத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருந்ததால் இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட போது ரஷ்யப் படைகளின் கிரானைடு தாக்குதலே பள்ளிக்கட்டிடம் தீப்பிடித்து எரியவும் அந்த நெருப்பு சூழ்ந்ததிலேயே பணயமாக இருந்த பள்ளிக் குழந்தைகள் கருகி இறந்தனர் எனத் தெரிய வந்துள்ளது" என பெஸ்லான் அன்னையர் குழுவின் தலைவியும், பெஸ்லான் பொதுமக்கள் உண்மை அறியும் குழுவின்   உறுப்பினருமான சுசானா துடியேவா தெரிவித்தார்.

"இந்தப் புதிய வீடியோ ஆவணம் நாங்கள் முதலில் இருந்தே ஐயுற்றது போல ரஷ்யப் படைகளின் கிரானைடு தாக்குதல் தான் பள்ளிக் குழந்தைகள் இறக்கக் காரணம் என்பதை உறுதிப் படுத்தவே செய்கிறது" என அவர் ராய்ட்டர்சுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

"குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக எனச் சொல்லிக் கொண்டு பள்ளி வளாகத்திற்குச் சென்ற படையினர், குழந்தைகளைக் காப்பாற்றுவதை விட்டு, முதலிலேயே  கிரானைடு தாக்குதலை ஏன் தொடங்கினர் என்பதற்கு அரசு சரியான விளக்கம் அளிக்க மறுத்து வருகிறது" என்று கோபமாக அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ ஆவணம் பெயர் சொல்லவிரும்பாத ஒரு தன்னார்வலர் தனக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார். இது உண்மையான வீடியோ ஆவணம் தான் என வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்து புடின் அரசின் கிரம்ளின் அறிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.