ஜிஹாத் என்று பெயரிட ஜெர்மன் அரசு விதித்த தடை அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கம்

Share this:

{mosimage}ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் வசிக்கும் ரிதா ஸியாம் எனும் 47 வயதான தந்தை ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தைக்கு ஜிஹாத் எனப் பெயரிட்டுள்ளார். அந்நாட்டு சட்டப்படி இப்பெயரைப் பதிவுசெய்ய அவர் அரசின் உள்துறையை அணுகிய போது அங்கிருந்த அலுவலர்கள் குழந்தையின் பெயரை ஜிஹாத் எனப் பதிவு செய்ய மறுத்துப் பெயரை மாற்றும் படி கோரியுள்ளனர்.

ஆனால் இது அந்நாட்டுச் சட்டப்படி தனக்கு அளிக்கப்பட்ட உரிமையில் தலையிடுவதாகும் என்று அவர்கள் கோரிக்கைக்கு இணங்க மறுத்த அவர், அதிகாரிகள் ஏன் இப்பெயரைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என விசாரித்தபோது ஜிஹாத் என்றால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லுதல் என்று ஓர் அலுவலரும், ஜிஹாத் என்றால் பயங்கரவாதம், போர் என்று இன்னோர் அலுவலரும் விளக்கம் (?) அளித்து அதனால் இப்பெயரைப் பதிவு செய்ய மறுப்பதாகத் தெரிவித்தனர்.

அவர்களுக்கு விளக்கம் அளிக்க முயன்று தோற்றுப் போன அவர் இறுதியில் அந்நாட்டின் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் திரு ஸியாம் தன் குழந்தைக்கு ஜிஹாத் என்று பெயரிட முழு உரிமை இருப்பதாகத் தீர்ப்பளித்து உள்துறையை அப்பெயரைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் 18 மாத காலம் ஜெர்மனியின் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்தாலோசித்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஜெர்மானிய உள்துறை தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் குழந்தைகளுக்குப் பெயரிடுவதற்கென்று பல விதிமுறைகள் உள்ளன. அவற்றுக்கு இணங்காத பெயர்களை அரசு பதிவு செய்ய மறுத்துவிடுகிறது என்பது தனித் தகவலாகும். எடுத்துக்காட்டாக ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் என்ற பெயர்கள் பதிவுசெய்யப்படமாட்டா.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பிரபல மனித உரிமை ஆர்வலர் கேரன் ஆம்ஸ்ட்ராங், மேற்கத்திய ஊடகங்களின் திட்டமிட்ட அயராத பொய்ப்பிரச்சாரத்தால் ஜிஹாத் என்ற சொல்லின் உண்மையான பொருள்களில் ஒன்றான 'கடுமையாக முயற்சி செய்தல்' என்பது பொதுமக்களுக்கு  மறைக்கப்பட்ட ஒன்றாகிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

தகவல்: இப்னு ஹமீது

இந்தக் கோணத்தில் எமது சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ஜிஹாத் என்பது பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா? என்ற ஆய்வுக் கட்டுரை தொடர் வெளிவருகிறது என்ற தகவலை இங்கு அறியத் தருகிறோம்.

-நிர்வாகி, சத்தியமார்க்கம்.காம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.