ஹஜ் 2008 : விண்ணப்பிக்கத் தமிழக அரசு அழைப்பு!

Share this:

தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள் மற்றும் வழிமுறைகளை சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் ‘தமிழ்நாடு மாநில ஹஜ் குழு’-வின் பெயரில் கேட்பு வரைவோலை அல்லது பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

1. விண்ணப்பப் படிவங்கள் கோரும் கோரிக்கைகளை, விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-க்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

2.  நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காக ரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.

3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், அவற்றைக் கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செய்யப்படுவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் விபரங்களுக்குத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


http://www.tn.gov.in/pressrelease/pr300408/pr300408_322.pdf


தகவல்: முதுவை ஹிதாயத்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.