மக்கள் மனதை வென்ற “ஈரம்” (டீஸர்)

108

மாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் “ஈரம்” ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக உள்ளது.

மக்கள் மனதை வென்ற ஈரம் – டிரைலர்!

வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்திலும் தம் உயிரைத் துச்சமாக எண்ணி களமிறங்கி பணியாற்றியவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.

எங்களின் மன ஈரத்தின் முன்னிலையில் நிலத்தில் இறங்கிய வெள்ளத்தின் ஈரம் எதுவுமே இல்லை எனத் தெளிவித்த நல்உள்ளங்களுக்காக “ஈரம்” என்ற தலைப்பிலேயே தமிழ் ஊடகப் பேரவை(Tamil Media Forum) மற்றும் இந்நேரம்.காம்(www.inneram.com) இணைந்து சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆவணப்படம் தயார் செய்துள்ளது. அதன் டிரைலர் இங்கே… முழு ஆவணப்படம் விரைவில்!

தொடர்புடைய செய்திக்கு: http://inneram.com/videos/6220-eeram-documentary-teaser.html

தமிழ் ஊடகப் பேரவையின் பக்கம்: https://www.facebook.com/tamilmediaforum/photos/a.896569203727626.1073741828.896238070427406/1030163397034872/?type=3

இதை வாசித்தீர்களா? :   அணுமின் நிலையம் - ஒரு பாமரப் பார்வை