நேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு!

Share this:

சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை 2ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் முகமது யாசினின் நேர்மையான செயலை, ஆத்திச்சூடியின் ‘நேர்பட ஒழுகு’ எனும் தலைப்பில் பாடமாகச் சேர்த்துள்ளது.

ஈரோடு கனி ராவுத்தர் குளம், நந்தவனத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா – அப்ரூத்பேகம் தம்பதியினரின் மகன் முகமது யாசின்(7). சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2ஆம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியன்று பள்ளி சென்றபோது, சாலையில் பணக்கட்டு கிடந்துள்ளது.

500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய அந்த நோட்டுக் கட்டினை தன் பள்ளி ஆசிரியையிடம் கொடுக்க, தலைமையாசிரியை யாஸ்மின் மூலமாக ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. 100 எண்ணிக்கையில், 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்தப் பணக்கட்டில் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.

பிறருக்குச் சொந்தமான பணத்தை மறைக்கவோ, வைத்துக் கொள்ளவோ விரும்பாத முகமது யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த எஸ்.பி. சக்திகணேசன், சீருடை, புத்தகப்பை, காலணி ஆகியவற்றை வழங்கி, பாராட்டுத் தெரிவித்தார். மாணவர் முகமது யாசினின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு மழை பொழிந்தனர்.

The headmistress narrated everything to the SP, who congratulated Mohammed Yasin and appreciated his exemplary character.

The SP rewarded him Rs 1,000, but Yasin refused to accept it. Though the police officer increased the cash reward to Rs 2,500, the boy didn’t change his mind. – TOI

நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், முகமது யாசினின் தந்தை பாட்ஷாவை தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். யாசினின் கல்விச்செலவை ஏற்பதாக அவர்கள் தெரிவித்த நிலையில், ‘என் மகன் அரசுப் பள்ளியில் படிப்பதையே நான் விரும்புகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார் பாட்ஷா.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக இத்தகவலை அறிந்த ரஜினிகாந்த், சிறுவன் முகமது யாசினையும், அவருடைய பெற்றோரையும் சென்னைக்கு அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். சிறுவனின் நேர்மையை பாராட்டும் வகையில் தங்கச் சங்கிலியை ரஜினி அளித்தார். மேலும், “முகமது யாசினை சிறப்பாக வளர்த்துள்ளீர்கள்” என பெற்றோருக்குப் பாராட்டு தெரிவித்த ரஜினி, “எப்போது உதவி தேவை என்றாலும் என்னை அணுகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர் முகமது யாசினின் நேர்மையான செயலை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், 2ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அவருக்கு இடம் வழங்கியுள்ளது. ஆத்திசூடியின் ‘நேர்ப்படஒழுகு’ என்ற வரிகளுக்கு பொருத்தமாக இந்த சம்பவத்தை படங்கள் மூலம் பாடப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈரோடு எஸ்.பி.சக்திகணேசன் பாராட்டு தெரிவிக்கும் புகைப்படமும் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்!

நன்றி :

1. தமிழ் தி ஹின்டு

2. தினமணி

3. புதிய தலைமுறை

4. மாலை மலர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.