முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)"தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் "கடவுள் இல்லை" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் (முன்னாள்) பெரியார்தாசனும், இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் இவ்வுலகையும் படைத்த இறைவனை இறுதில் தேடிக் கண்டுகொண்ட அப்துல்லாஹ் (பெரியார்தாசன்), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்...

பாரதிராஜாவின் `கருத்தம்மா', `காதலர் தினம்' உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்). இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார்.

ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. பேராசிரியர் அப்துல்லாஹ் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் கல்லீரல் கோளாறு காரணமாக சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் பலனின்றி 19-08-2013 அதிகாலை 1.25 மணியளவில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 63.

பேராசிரியர் அப்துல்லாஹ், உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்தார். அதன்படி அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுவினர் வந்து அவரது கண்களைத் தானமாக பெற்றுக் கொண்டனர். அதே போல் பேராசியர் அப்துல்லாஹ்வின் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

நடிகர்,  நாத்திகர் என்று தனது வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த அவர், நேர்வழி எதுவென்ற தேடலின் முடிவாக அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்ற வெற்றிப் பாதையைக் கண்டு தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டு,  அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திக் கொண்டிருந்த பேரா. அப்துல்லாஹ் அவர்களுக்கு மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் வெற்றியைத் தந்தருள்வானாக என்று பிரார்த்திப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

பேராசிரியர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்)மரணம்!

தேடுங்கள்; கண்டடைவீர்கள்!

நான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்... - பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ)

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

http://abdullahperiyardasan.blogspot.com/p/about-me.html

http://ta.wikipedia.org/wiki/பெரியார்தாசன்

Comments   

தமிழ் சித்தன்
+3 #1 தமிழ் சித்தன் 2013-08-19 12:00
அப்துல்லா (பெரியார் தாசன்) அவர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் ,அவரது ஆன்மா சாந்தி அடைய கிருபை செய்வானாக.

நாத்திகராய் வாழ்க்கையை தொடங்கி, இறுதியில் பல ஆராய்சிகள் செய்து, கடைசியில் சத்திய மார்க்கம் இஸ்லாமை தழுவி , தன்னை, சிறந்த பகுத்தறிவு வாதி யாக ஆக்கி கொண்ட ,அவருக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும், சித்தர்களின் கூற்றுப்படி, உருவமற்ற, அரூபியான இறைவன், ஒருவன் மட்டுமே, இதை போகர் சித்தர் சொல்லி இருக்கிறர்.

அவர் கூற்றுப்படி, இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே , அவ்வழி வுண்டு,அதை வுணர்ந்து, அறிந்த அறிவாளி மனிதன் இவர். வாழ்க இவர் புகழ்!
Quote | Report to administrator
ஜாஃபர்
+3 #2 ஜாஃபர் 2013-08-19 12:01
டாக்டர் அப்துல்லாஹ் ஓர் சகாப்தம், பல திறமைகளை தன்னகத்தே வளர்த்து பிற மக்களை தன்பால் ஈர்த்து பல சாதனைகளை புரிந்தவர்.

பல்வேறு மதங்களை தீவிரமாக ஆய்வு செய்து இறுதியாக இஸ்லாம் மதம் தான் சிறந்த மதம் என்று கூறி அதையே தன் வாழ்க்கையாகவும் வழிகாட்டியாகவும ் ஏற்றுக்கொண்டவர் .

இவர் உலகத்தைவிட்டு மறைந்தாலும் இவர் புகழ் உலகம் அழியும் வரை ஓங்கி நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அண்ணாரின் மறுமை வெற்றிக்காக துவா செய்வோம். இறைவன் இவருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவர்க்கத்தில் பிரவேசி்க்க செய்வானாக.
Quote | Report to administrator
சிராஜுத்தீன்
+2 #3 சிராஜுத்தீன் 2013-08-19 12:02
அருமைச் சகோதரரே..! சத்தியம் தேடி நடந்தீர்கள்.. புனித சாந்தி மார்க்கம் கண்டீர்கள்..!

எங்கள் நெஞ்சோடு நெஞ்சாக ..உயிரோடு உயிராக..உணர்வோட ு உணர்வாக..வெகு விரைவில் கலந்து நின்றீர்கள்..!

எங்கள் தணியா ஆசைகள் தீருமுன்.. இதோ..இறைவனடி சேர்ந்து விட்டீர்கள்..! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..!

அடங்காத..ஆர்ப்ப ரிக்கும் உள்ளத்தோடு உங்களுக்கு விடை தருகிறோம்..சகோத ரரே..! எங்கள் கண்களில் காட்சி மறையும் வரை.. எங்கள் உள்ளத்திலிருந்த ு நினைவுகள் மாயும் வரை.. எங்களது உடலிலிருந்து உயிர் போகும் வரை ...இன்ஷாஅல்லாஹ் .. உங்களுக்காக நாங்கள் இறைஞ்சிக் கொண்டிருப்போம். .!

யா அல்லாஹ்..எங்களத ு இந்த சகோதரரை நல்ல முறையில் ஏற்றுக் கொள்வாயாக..! இந்த உலகில் அவருக்கு உண்டாயிருந்த கஷ்டங்கள்.. துன்பங்கள்.. இழிவுகள்.. ஏமாற்றங்கள்.. அவஸ்தைகள்.. அவமானங்கள்.. எல்லாவற்றையும் அகற்றி.. உனது மகோன்னத கருணையில்.. அன்பில்.. அருளில்.. அரவணைப்பில் பாதுகாப்பாயாக.. ! ஆமீன்..யா ரப்பில் ஆலமீன்..!
Quote | Report to administrator
வஹிதா
+3 #4 வஹிதா 2013-08-19 12:10
இன்னா லில்லாஹி...

அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் தனது பெயரை அதிகாரப்பூர்வமா க உலகிற்கு அறிவித்த பிறகும்
மாலைமலர், தினமலர் போன்ற பத்திரிகைகள், இன்னும் பெரியார்தாசன் என்று மட்டும் எழுதி வருவது கண்டிக்கத் தக்கது.

இதைக் குறிப்பிட்டு நான் அவர்களுக்கு எழுதும் பின்னூட்டங்களை சில மணி நேரத்தில் அழித்து விட்டு தங்களது ஊடக "நேர்மையை" காட்டுகிறார்கள் .
Quote | Report to administrator
Abu Muhai
0 #5 Abu Muhai 2013-08-19 12:16
இன்னலில்லாஹிவஇன ்னா இலைஹி ராஜீவூன்
Quote | Report to administrator
கலீல் பாகவீ
+1 #6 கலீல் பாகவீ 2013-08-19 12:27
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.

எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக் கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப ்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: / /
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: groups.yahoo.com/.../...
கூகுள் குழுமம்: groups.google.com/q8tic
Quote | Report to administrator
Jameel Babu
0 #7 Jameel Babu 2013-08-19 12:33
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்" ---- அவனிடமிருந்தே நாம் வந்தோம். நிச்சயமாக அவனிடமே திரும்பி செல்வோம்.
Quote | Report to administrator
பிரம்மபுத்திரன்
0 #8 பிரம்மபுத்திரன் 2013-08-19 13:16
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்" ---- அவனிடமிருந்தே நாம் வந்தோம். நிச்சயமாக அவனிடமே திரும்பி செல்வோம்.

ஒரு மாபெரும் இஸ்லாமிய தலைவரை தமிழகம் இழந்து விட்டது.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #9 சாணக்கியன் 2013-08-19 13:22
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியது தமிழக இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றால் மிகையாகாது.
Quote | Report to administrator
Mohamed Jahani
0 #10 Mohamed Jahani 2013-08-19 17:59
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக்கொள்வ ானாக.
Quote | Report to administrator
Abdullah M
0 #11 Abdullah M 2013-08-20 00:44
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்" ---- அவனிடமிருந்தே நாம் வந்தோம். நிச்சயமாக அவனிடமே திரும்பி செல்வோம்.

ஒரு மாபெரும் இஸ்லாமிய தலைவரை தமிழகம் இழந்து விட்டது.
Quote | Report to administrator
M Muhammad
0 #12 M Muhammad 2013-08-20 00:47
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்" ---- அவனிடமிருந்தே நாம் வந்தோம். நிச்சயமாக அவனிடமே திரும்பி செல்வோம்.

ஒரு மாபெரும் இஸ்லாமிய தலைவரை தமிழகம் இழந்து விட்டது.

யா அல்லாஹ்..எங்களத ு இந்த சகோதரரை நல்ல முறையில் ஏற்றுக் கொள்வாயாக..! இந்த உலகில் அவருக்கு உண்டாயிருந்த கஷ்டங்கள்.. துன்பங்கள்.. இழிவுகள்.. ஏமாற்றங்கள்.. அவஸ்தைகள்.. அவமானங்கள்.. எல்லாவற்றையும் அகற்றி.. உனது மகோன்னத கருணையில்.. அன்பில்.. அருளில்.. அரவணைப்பில் பாதுகாப்பாயாக.. ! ஆமீன்..யா ரப்பில் ஆலமீன்..!
Quote | Report to administrator
M Muhammad
0 #13 M Muhammad 2013-08-20 02:14
நான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்... - பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ) correct link : www.youtube.com/.../
Quote | Report to administrator
கத்தீபு முஹம்மது
0 #14 கத்தீபு முஹம்மது 2013-08-20 16:12
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் முந்தைய பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் ஈமானை ஏற்றுக் கொண்டு, பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அன்னார் தமது வாழ்வின் இறுதிப் பகுதியில் தெரிந்தெடுத்த / முன்னெடுத்த இஸ்லாமிய நல்வழிப்பாதையின ் ஒளி - நம் தமிழ் மண்ணில் இன்னும் இஸ்லாமிய நறுமணத்தைத் தம்மில் தழுவிக் கொள்ளாத எண்ணற்ற இறை நிராகரிப்பாளர்க ளான நாத்திகர்களுக்க ும், மறையாளர்களான கிறித்தவர்களுக் கும, முஷ்ரிகீன்களான பிற மதத்தவருக்கும் முன்மாதிரியாகத் திகழட்டும்! இஸ்லாம் இந்நாட்டின் இறுதிக் குடிமகன் வரை, அதனுடைய தூய வழியில் சென்றடையட்டும்! தாயீக்கள் மறைந்தாலும் அவர்கள் விதைத்த விதை தரணியெங்கும் பரவட்டும்!
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்